குருநகர்

புறநகர்ப் பகுதி யாழ்ப்பாணம், வடக்கு, ஸ்ரீலங்கா

குருநகர், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர். இது, குருநகர் கிழக்கு, குருநகர் மேற்கு, சின்னக்கடை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள் அடங்குகின்றது. யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் இப்பகுதிக்குள், மாநகரசபையின் 1ம், 2ம், 3ம், 4ம், 5ம் வட்டாரங்கள் பகுதியாக அடங்குகின்றன.[2] குடியேற்றவாதக் காலத்து யாழ்ப்பாணத்தின் ஐரோப்பியர் நகரம் அல்லது பறங்கித்தெரு என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் பகுதி குருநகர்ப் பகுதியின் மேற்கு எல்லையை அண்டி அமைந்துள்ளது. கிழக்கு எல்லையை அண்டிச் சுண்டிக்குளி, திருநகர் ஆகியவை உள்ளன.

Gurunagar
குருநகர்
ගුරුනගර
Suburb
St.James Church originally established in 1861 located in Gurunagar, Jaffna.
St.James Church originally established in 1861 located in Gurunagar, Jaffna.
Gurunagar is located in Northern Province
Gurunagar
Gurunagar
Gurunagar is located in இலங்கை
Gurunagar
Gurunagar
ஆள்கூறுகள்: 9°39′24.80″N 80°01′41.10″E / 9.6568889°N 80.0280833°E / 9.6568889; 80.0280833
Countryஇலங்கை
ProvinceNorthern
DistrictJaffna
DS DivisionJaffna
அரசு
 • வகைMunicipal Council
 • நிர்வாகம்Jaffna
மக்கள்தொகை (2012)[1]
 • மொத்தம்3,520
நேர வலயம்Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30)
Post Codes4136050-4136055
Telephone Codes021
வாகனப் பதிவுNP

குருநகர் யாழ்ப்பாணத்தில் மக்கள்தொகை அடர்த்தி கூடிய பகுதிகளுள் ஒன்று. இங்கு கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். குருநகர்ப் பகுதி மக்களிற் பலர் மீன்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள். இங்கே 2313 மீனவக் குடும்பங்கள் உள்ளன.[3]

வரலாறுதொகு

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால குடியேறிகள், உள்ளூர் புராணங்களின்படி, ஒரு இசைக்கலைஞரும் அவரது குடிமக்க்ளுடன், அவர்கள் கொழும்புத்துறை சுற்றியுள்ள பகுதியும், குருநகர் சுற்றியுள்ள பகுதியும் முதன் முதலில் குடியேறிய இடமாக இருந்தது.[4][5] கொழும்புத்துறையில் அமைந்துள்ள கொழும்புத்துறை வணிகக் களஞ்சியமும் குருநகர் பகுதியிலுள்ள முன்னர் அமைந்துள்ள " அலுப்பாந்தி " என்றழைக்கப்படும் துறைமுகமும் அதன் ஆதாரங்களாகத் தெரிகிறது.[6]

ஆரியச் சக்கரவர்த்திகளுடன் கடற்படை குருநகரின் மக்களால் நிர்வகிக்கப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டது. இங்கு மோரோக்கன் ஆராய்ச்சியாளர் இப்னு பதூதா ஆரியச்சக்கரவர்த்தியின் அரசர்களின் கப்பல்களைக் கண்டது என்று நம்பப்படுகிறது.[7]

யாழ்ப்பாண இராச்சியத்தின் மேற்கு பகுதி குருநகரின் கரையார்களால் ஆட்சி செய்ய பட்டது.[8]

குருநகரின் மணியக்காரர்கள் மற்றும் அடப்பனார் யாழ்ப்பாண துறைமுகங்களின் தலைவர்களில் ஒருவராக பணியாற்றினார்.[9]

வழிபாட்டிடங்கள்தொகு

குருநகரில், புதுமை மாத தேவாலயம்; கார்மேல் மாதா தேவாலயம், புனித யாகப்பர் தேவாலயம், புனித அடைக்கல அன்னை தேவாலயம் போன்ற கிறித்தவ வழிபாட்டிடங்கள் உள்ளன. அத்துடன், சிறீ ஞானச் செல்வ விநாயகர் ஆலயம், சின்னக்கடை அம்மன் ஆலயம் என்னும் இந்து ஆலயங்களும், ஒரு மசூதியும் குருநகரில் உள்ளன.[10]

பின்வருவனவற்றையும் பார்க்கவும்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; DCS என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 22.
  3. Statistical Information of the Northern Province – 2014, Northern Provincial Council, 2014. p. 82.
  4. Rasanayagam, C. (1993-01-01) (in en). Ancient Jaffna: Being a Research Into the History of Jaffna from Very Early Times to the Portuguese Period. Asian Educational Services. பக். 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120602106. https://books.google.com/books?id=k9DpMY206bMC. 
  5. (in en) Ceylon Journal of Medical Science. University of California. 1949. பக். 58. https://books.google.no/books?id=vSkMAQAAIAAJ&q=karaiyur+jaffna&dq=karaiyur+jaffna&hl=no&sa=X&ved=0ahUKEwi3y_mNktLVAhXnDpoKHUNfA1wQ6AEIJjAA. 
  6. ICTA. "Jaffna Divisional Secretariat - Overview". www.jaffna.ds.gov.lk (ஆங்கிலம்). 2017-08-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-12 அன்று பார்க்கப்பட்டது.
  7. Rasanayagam, C.; Rasanayagam, Mudaliyar C. (1993) (in en). Ancient Jaffna: Being a Research Into the History of Jaffna from Very Early Times to the Portugese Period. Asian Educational Services. பக். 211-212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120602106. https://books.google.no/books?id=k9DpMY206bMC&printsec=frontcover&dq=ancient+jaffna+rasanayagam&hl=no&sa=X&ved=0ahUKEwiKn7zewLLXAhUNYVAKHacmAPIQ6AEIJjAA#v=onepage&q=ancient%20jaffna%20rasanayagam&f=false. 
  8. Raghavan, M. D. (1964) (in en). India in Ceylonese History: Society, and Culture. Asia Publishing House. பக். 143. https://books.google.no/books?hl=no&id=BCUdAAAAMAAJ&dq=vaiyapadal+fish&focus=searchwithinvolume&q=karayoor. 
  9. Bastiampillai, Bertram (2006-01-01) (in en). Northern Ceylon (Sri Lanka) in the 19th century. Godage International Publishers. பக். 96. https://books.google.no/books?hl=no&id=JpNuAAAAMAAJ&dq=jaffna+karaiyur&focus=searchwithinvolume&q=karaiyur. 
  10. "யாழ் பிரதேச செயலக இணையத்தளம்". 2022-04-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-16 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருநகர்&oldid=3433689" இருந்து மீள்விக்கப்பட்டது