குரு கேலு நாயர்

குரு கேலு நாயர் (Guru Kelu Nair) புகழ்பெற்ற கதகளி நடன கலைஞரும் ஆசிரியருமாவார்.

பட்டிக்கம்தோடி இராவுன்னி மேனன், குரு குஞ்சு குரூப் போன்ற குருக்களின் கீழ் கேரள கலாமண்டலத்திலிருந்து கதகளியில் பயிற்சி பெற்றார். ரச-அபினய மேதையான குரு நாட்டியாச்சார்யா விதுசகரத்னம் பத்மசிறீ மணி மாதவ சாக்கியாரிடமிருந்து ரச-அபினாத்தில் உயர் படிப்பைத் தொடர்ந்தார். சாந்திநிகேதனின் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தில் முதல் கதகளி பாடத்திட்டத்தை நிறுவ 1936ஆம் ஆண்டில் இரவீந்திரநாத் தாகூர் இவரை அழைத்தார். இவர், இரவீந்திர நிருத்யாவில் கதகளி நடனத்தை இயற்றினார். கதகளி சாந்திநிகேதனுக்கு வந்த பின்னரே, தாகூர் சியாமா என்ற நடன நாடகத்தை எழுதினார். அதில் கதகளி நுட்பத்தை மனதில் கொண்டு பஜ்ராசென் மற்றும் கோட்டல் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. 1941இல் தாகூர் இறக்கும் வரை சாந்திநிகேதனில் ஆசிரிய உறுப்பினராக இருந்தார். இவரது குறிப்பிடத்தக்க சீடர்களில் மிருணாளினி சாராபாய், ருக்மணி தேவி அருண்டேல் , யோக் சுந்தர் தேசாய் ஆகியோர் அடங்குவர். [1]

கதகளி துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இவருக்கு 1992 இல் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. [2]

மேலும், காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Visvabharati". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-13. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_கேலு_நாயர்&oldid=3581876" இலிருந்து மீள்விக்கப்பட்டது