குரு சித்தானந்தா சுவாமிகள்
குரு சித்தானந்தா சுவாமிகள் என்பவர் கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் என்ற ஊரில் வாழ்ந்த சித்தராவார். இவரைப் பற்றி மகாகவி பாரதியார் பாடல் இயற்றியுள்ளார்.[1]
இவர் வண்டிப்பாளையத்தில் வீர சைவ மரபில் பிறந்தார். இவரது வீட்டினை பிள்ளையார் வீடு என்று அழைத்தனர்.[2]
இவர் சிறுவயதிலேயே திருப்பாதிரிப்புலியூர் பாடலீசுவரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளார். இச்சிவாலயத்தில் பூத்தொடுக்கும் பணியை இவரது தாயார் செய்து வந்துள்ளார். அதனால் திருக்கோயிலுக்கு மாலையை கொடுக்கும் பணி இவருடையதாக இருந்தது. ஒருநாள் மழை காரணமாக உரிய நேரத்தில் மாலையை கொண்டு சேர்க்க முடியவில்லை. இவர் கோயிலுக்கு வருகையில் நடைசாத்தப்பட்டிருந்தது. அதனால் கோயில் கதவில் மாலையை வைத்துவிட்டு, இறைவனிடம் "வந்து எடுத்துக் கொள்" என கூறி வீடு திரும்பினார். மறுநாள் அர்ச்சகர் கோயில் கதவு திறந்து உட்சென்று பார்க்கையில் மூலவர் மாலையுடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
அச்சிவாலயத்தின் பெரியநாயகியை வணங்கி, தவமிருந்து அட்டமா சித்திகளைப் பெற்றார். அவருடைய பக்தர்களான முத்துகுமாரசாமி பிள்ளை தோட்டத்தில் சமாதி நிலையடைந்தார், 1837ம் ஆண்டு மே மாதம் 28 நாள் சமாதியடைந்தார். தற்போது அவ்விடம் சித்தர் கோயிலாக உள்ளது.
ஆதாரங்கள்
தொகு- ↑ சித்தானந்தசாமி திருக்கோயில் வாயிலில் தீபவொளியுண்டாம்; பெண்ணே முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட மூண்ட திருச்சுடராம் ;பெண்ணே
- ↑ "- குரு சித்தானந்தா சுவாமி கோவில் கும்பாபிஷேகம் Dinamalar".