குர்கஞ்ச் முற்றுகை

குர்கஞ்ச் முற்றுகை என்பது கி. பி. 1221ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு முற்றுகைப் போராகும். மங்கோலியர்கள் குவாரசமியப் பேரரசு மீது படையெடுத்ததன் ஒரு பகுதியாக இம்முற்றுகை நடைபெற்றது. இரண்டாம் அலாவுதீன் முகம்மதுவால் ஆளப்பட்ட குவாரசமியப் பேரரசின் மீது மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்த செங்கிஸ் கான் பலமுனைத் தாக்குதல் நடத்தினார்.[1] புகாரா மற்றும் சமர்கந்து ஆகிய பெரிய நகரங்களைக் கைப்பற்றிய பிறகு, சிறந்த திட்டமிடல் மற்றும் படை நகர்த்தல் ஆகியவற்றின் மூலம் கானின் இராணுவம் எல்லைப் பட்டணமான ஒற்றாரைச் சீக்கிரமே கைப்பற்றியது.[2]

குர்கஞ்ச் முற்றுகை (1221)
மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பின் ஒரு பகுதி
குர்கஞ்சில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பற்றிய ஒரு சித்தரிப்பு
முற்றுகைக்குப் பிறகு ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பற்றிய ஒரு சித்தரிப்பு
நாள் 1221
இடம் கொன்யா-ஊர்கெஞ்ச், தற்கால துருக்மெனிஸ்தான்
42°19′N 59°11′E / 42.32°N 59.18°E / 42.32; 59.18
மங்கோலிய வெற்றி
சண்டையிட்டவர்கள்
மங்கோலியப் பேரரசு குவாரசமியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
தெரியவில்லை
படைப் பிரிவுகள்
கோட்டைக் காவற்படை
பலம்
தெரியவில்லை தெரியவில்லை
இழப்புகள்
தெரியவில்லை அனைவரும்

செங்கிஸ் தன் மகன்கள் சூச்சி மற்றும் சகத்தாய் தலைமையில் வடமேற்கு திசையில் குவாரசமியப் பேரரசின் முன்னாள் தலைநகரான குர்கஞ்சை நோக்கி முற்றுகையிடுவதற்காக ஒரு சிறப்புப் பணிக்குரிய படைப்பிரிவை அனுப்பினார். ஆமூ தாரியா ஆற்றின் கழிமுகத்தில் சதுப்பு நிலத்தில் இந்த செல்வச் செழிப்புமிக்க நகரம் அமைந்திருந்தது. இதன் காரணமாகத் தாக்குதல் நடத்துவது என்பது இயலாத காரியமாக இருந்தது.[3] தலைமை தாங்கிய இரு சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முற்றுகை நடத்துவது என்பது மேலும் கடினமானது.[4] இறுதியாகத் தன் மூன்றாவது மகன் ஒகோடியை இம்முற்றுகைக்குத் தலைமை தாங்கச் செங்கிஸ் கான் அனுப்பினார்.

இறுதியாக நகரமானது கைப்பற்றப்பட்ட போது நிர்மூலமாக்கப்பட்டது. மனித வரலாற்றில் குருதி தோய்ந்த படு கொலைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.[5]

உசாத்துணை தொகு

  1. Golden, Peter (2009). "Inner Asia c.1200". The Cambridge History of Inner Asia The Chinggisid Age: 9–25. doi:10.1017/CBO9781139056045.004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781139056045. 
  2. Buniyatov, Z. M. (2015). Moscow: Nauka. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9943-357-21-1. 
  3. Biran, Michal (2009). "The Mongols in Central Asia from Chinggis Khan's invasion to the rise of Temür". The Cambridge History of Inner Asia The Chinggisid Age: 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781139056045. 
  4. Jackson, Peter (2009). "The Mongol Age in Eastern Inner Asia". The Cambridge History of Inner Asia The Chinggisid Age: 26–45. doi:10.1017/CBO9781139056045.005. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781139056045. 
  5. May, Timothy (2018). "The Mongols outside Mongolia". The Mongol Empire. Edinburgh: Edinburgh University Press. பக். 60–61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780748642373. https://www.jstor.org/stable/10.3366/j.ctv1kz4g68.11. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்கஞ்ச்_முற்றுகை&oldid=3449359" இலிருந்து மீள்விக்கப்பட்டது