குர்கீரத் சிங்
குர்கீரத் சிங் மன் (Gurkeerat Singh Mann (பிறப்பு, 29 சூன், 1990) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் 2012 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2012 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2011 ஆம் ஆண்டில் இருபது20 போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2016 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 49 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2942 ஓட்டங்களையும் , 85 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2892 ஓட்டங்களையும்,98 இருபது20 போட்டிகளில் விளையாடி 1624 ஓட்டங்களையும் 3 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 13 ஓட்டங்களையும் இவர் எடுத்துள்ளார்.பஞ்சாப் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் இவர் விளையாடி வருகிறார்.[1]
முதல் தரத் துடுப்பாட்டம்
தொகுஇவர் 2012 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.2012 ஆம் ஆம் ஆண்டில் நவம்பர் 2 மொகாலி துடுப்பாட்ட அரங்கத்தில் ஐதராபாத்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக பஞ்சாப் துடுப்பாட்ட அணி சார்பாக இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 32 பந்துகளில் 18 ஓட்டங்களை எடுத்து ஒஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 68 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
பட்டியல் அ
தொகு2012 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2012 ஆம் ஆம் ஆண்டில் பெப்ரவரி 12 தில்லி துடுப்பாட்ட அரங்கத்தில் அரியானா துடுப்பாட்ட அணிக்கு எதிராக பஞ்சாப் துடுப்பாட்ட அணி சார்பாக இவர் விளையாடினார்.
சர்வதேச போட்டிகள்
தொகு2016 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[2] சனவரி 17 இல் மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். [3][4] இந்தப் போட்டியில் 7 பந்துகளில் 8 ஒட்டங்களை எடுத்து பால்க்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.5 நிறைவுகள் வீசி 27 ஓட்டங்களை வீட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 3 இலக்குகளில் வெற்றி பெற்றது.[5]
2016 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.சனவரி 23 இல் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் இவர் 2 நிறைவுகள் வீசி 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.பின் மட்டையாட்டத்தில் 2 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்தப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணி 6 இலக்குகளில் வெற்றி பெற்றது.[6]
இந்தியன் பிரீமியர் லீக்
தொகுஇவர் 2012 முதல் 2017 வரை இந்தியன் பிரீமியர் லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.
புனே வாரியர்ஸ் இந்தியாவின் வீரரான ரோஸ் டெய்லரை லீக் ஆட்டத்தில் பந்துபிடிப்பு முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அது அந்த ஆண்டின் சிறந்த பந்துபிடிப்பாகக் கருதப்பட்டது.
ஜனவரி 2018 இல், 2018 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இவர் விளையாடினார்.[7]
டிசம்பர் 2018 இல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரால் 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்கள் ஏலத்தில் இவர் எடுக்கப்பட்டார். [8]
குறிப்புகள்
தொகு- ↑ "Gurkeerat Singh Mann". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
- ↑ "Gurkeerat Singh picked for South Africa ODI series". Times of India. பார்க்கப்பட்ட நாள் 20 September 2015.
- ↑ "India tour of Australia, 3rd ODI: Australia v India at Melbourne, Jan 17, 2016". ESPNcricinfo (ESPN Sports Media). 17 January 2016. http://www.espncricinfo.com/ci/engine/match/895811.html. பார்த்த நாள்: 17 January 2016.
- ↑ "Kohli Ton Drives India to 295/6 in 3rd ODI". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/sport/cricket/2016/jan/17/Kohli-Ton-Drives-India-to-2956-in-3rd-ODI-869885.html. பார்த்த நாள்: 28 April 2019.
- ↑ "Full Scorecard of Australia vs India 3rd ODI 2016 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
- ↑ "Full Scorecard of Australia vs India 5th ODI 2016 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
- ↑ "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.
- ↑ "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.