குர்பச்சன் சிங் சலாரியா

கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா (Gurbachan Singh Salaria), பிவிசி (29 நவம்பர் 1935 – 5 டிசம்பர் 1961) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் இந்திய தேசிய இராணுவக் கல்லூரி மற்றும் தேசியப் பாதுகாப்பு அகாதமியில் பயின்றவர். 1962-இல் காங்கோ குடியரசியல் நடைபெற்ற உள்நாட்டுப் போரை[2] நிறுத்துவதற்கு, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் இணைந்து பணியாற்றினார். 5 டிசம்பர் 1962 அன்று கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா தலைமையிலான படைகள், விமான நிலையம் செல்லும் சாலையை மறித்த 150 போராளிகளையும், அவர்களது கவச வாகனங்களையும் கடுமையாகத் தாக்கி வீழ்த்தியது. இந்த தாக்குதலில் சலாரியாவின் கழுத்தில் இரண்டு துப்பாக்கி குண்டு காயம் பட்டு இறந்தார். இவரது வீர தீர செயலைப் பாராட்டி இவரது மறைவிற்குப் பின்னர் 1962-இல் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[3]

கேப்டன்

குர்பச்சன் சிங் சலாரியா

புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியாவின் மார்பளவுச் சிற்பம்
பிறப்பு(1935-11-29)29 நவம்பர் 1935
சகார்கர், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு5 திசம்பர் 1961(1961-12-05) (அகவை 26)
லுபம்பாஸ், கட்டங்கா மாகாணம், முன்னாள் காங்கோ குடியரசு
சார்புஇந்தியா
சேவை/கிளை இந்திய இராணுவம்
சேவைக்காலம்1957–1961
தரம் கேப்டன்
தொடரிலக்கம்IC-8947[1]
படைப்பிரிவுகூர்க்கா ரைபிள்ஸ்
போர்கள்/யுத்தங்கள்காங்கோ உள்நாட்டுப் போர்
  • காங்கோ உள்நாட்டுப் போரில் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள்
    • உனாகாட் நடவடிக்கை
விருதுகள் பரம் வீர் சக்கரம்
கல்விதேசியப் பாதுகாப்பு அகாதமி
இணையம்https://www.gallantryawards.gov.in/awardees/param-vir-chakra

பரம் வீர் சக்கர விருது பெற்றவர்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Chakravorty 1995, ப. 69.
  2. Congo Crisis
  3. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்பச்சன்_சிங்_சலாரியா&oldid=3792006" இலிருந்து மீள்விக்கப்பட்டது