குலாம் அகமது மிர்
குலாம் அகமது மிர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சம்மு காசுமீர் மாநிலச் சட்டசபையில் தூரு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] மிர் சம்மு காசுமீர் பிரதேசக் காங்கிரசு பிரிவின் மாநிலத்தின் கடைசி தலைவராகவும், ஒன்றியப் பிரதேசத்தின் முதலாவது தலைவராகவும் இருந்தார்.[2][3]
குலாம் அகமது மிர் | |
---|---|
தலைவர்-சம்மு காசுமீர் பிரதேச காங்கிரசு | |
பதவியில் 2015−2022 | |
முன்னையவர் | சைபுதீன் சோசு |
பின்னவர் | விகர் ரசூல் வாணி |
அகில இந்திய காங்கிரசு குழு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 திசம்பர் 2023 | |
முன்னையவர் |
|
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | 3 |
பெற்றோர் | குலாம் அசன் மிர் |
தொழில் | அரசியல்வாதி, சமூக சேவகர் |
2019 மக்களவைத் தேர்தலில், அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாட்டைச் சேர்ந்த ஆசுனைன் மசூதியிடம் மிர் தோல்வியடைந்தார்.[4]
சூலை 2022இல், மிர் காங்கிரசு கட்சியிலிருந்து பதவி விலகினார். மீண்டும் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த மிர் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் தூரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lok Sabha elections 2019: Congress names JKPCC chief as candidate for Anantnag seat". Hindustan Times. 31 March 2019.
- ↑ "Congress fields Ghulam Ahmad Mir from Anantnag in J-K". 31 March 2019 – via Business Standard.
- ↑ "PDP Continues To Be Part Of NDA Under Modi, Says Congress J&K Chief". Outlook (India).
- ↑ "Fractured Mandate in J&K as BJP, NC Win Three Seats Each; PDP & Congress Suffer Humiliating Defeats". News18.