குல்ஃபி

இந்திய உறைய வைக்கப்பட்ட இனிப்பு

குல்ஃபி (kulfi) குளிர்களி இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு பால் உணவு. இது பாரம்பரிய இந்தியக் குளிர்களி என்று கருதப்படுகிறது.[1][2] இனிப்பும் சுவையும் சேர்க்கப்பட்ட பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடிப்பிடிக்காமல் ஒரு பங்கு பால் அரைப்பங்காகும் வரை தொடர்ந்து காய்ச்சிக் குளிர்வித்துக் குல்ஃபி தயாரிக்கப்படுகிறது. மலாய் குல்ஃபி, மாங்காய் குல்ஃபி, ரோஸ் குல்ஃபி, குங்குமப்பூ குல்ஃபி என்று பல நிறங்களிலும் சுவைகளிலும் குல்ஃபி கிடைக்கிறது.

குல்ஃபி
மட்கா குல்ஃபி
வகைகுளிர்களி
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதமிழ்நாடு, பாக்கித்தான், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பிற வட இந்திய பகுதிகள்
முக்கிய சேர்பொருட்கள்பால்
பிஸ்தா வெனிலா மற்றும் ரோஸ் சுவையுள்ள குல்ஃபி

வரலாறு தொகு

குல்ஃபி குளிர்களியானது முகலாயப் பேரரசு காலமான 16 முதல் 18-ம் நூற்றாண்டுகளில் இருந்ததாக, அக்பரின் ஆட்சிக்காலத்திலிருந்த அயினி அக்பரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் இருந்து கொண்டுவரப்படும் மூலப்பொருட்களை வைத்து அரசர்களுக்கு சமைக்கும் பொழுது பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Caroline Liddell, Robin Weir, Frozen Desserts: The Definitive Guide to Making Ice Creams, Ices, Sorbets, Gelati, and Other Frozen Delights, Macmillan, 1996, ISBN 978-0-312-14343-5, ... Kulfi is the traditional Indian குளிர்களி and has a strongly characteristic cooked-milk flavour and dense icy texture. ... The basis of making kulfi is to reduce a large volume of milk down to a very small concentrated amount ...
  2. Lulu Grimes, Cook's Book of Everything, Murdoch Books, 2009, ISBN 978-1-74196-033-4, ... This simple, elegant ice cream is made by boiling milk until it reduces and condenses, then flavouring it with ingredients such as cardamom and pistachio nuts or almonds. Kulfi is traditionally set in cone-shaped ...
  3. Michael Krondl (2011). Sweet Invention: A History of Dessert. Chicago Review Press. பக். 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55652-954-2. http://books.google.com/books?id=gN6ySQnUnfwC&pg=PA48. 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
குல்ஃபி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்ஃபி&oldid=1901620" இலிருந்து மீள்விக்கப்பட்டது