குல்மார்க் கோண்டோலா
குல்மார்க் கோண்டோலா அல்லது குல்மார்க் கம்பிவட ஊர்தி (Gulmarg Gondola), இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2650 மீட்டர் முதல் 3950 மீட்டர் உயரம் வரை இமயமலையில் உள்ளது. இதுவே உலகின் இரண்டாவது நீளமான மற்றும் உயரமான கம்பிவட ஊர்தி ஆகும்.[1] இது குல்மார்க் நகரத்திற்கு 3 கிலோ மீட்டர் தொலைவிலும்; குல்மார்க் தொடருந்து நிலையம் சிறிநகர் வானூர்தி நிலையத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும்; உள்ளது.

விளக்கம்
தொகுகுல்மார்க் கம்பிவட ஊர்தி இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. இது ஒரு மணிக்கு 600 சுற்றுலாப் பயணிகளை சுமந்து செல்கிறது. இது குல்மார்க் மற்றும் அப்கர்வாத் மலைத்தொடரின் கொடுமுடி அருகில் (4,260 m (13,976 அடி)) உயரத்தில் இணைக்கிறது. இது சுற்றுலாப் பயணிகளுக்காக 1998ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இதன் முதல் நிலைப் பயணத்திற்கு ரூபாய் 810 மற்றும் இரண்டாம் நிலைப் பயணத்திற்கு ரூபாய் 900 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 24 முறை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்நிலையம் செயல்படும் |
முதல் கட்டப் பயணம் 2,650 m (8,694 அடி) உயரத்தில் அமைந்த குல்மார்க் விடுதியிலிருந்து தொடங்கி கொந்தூரி நிலையம் வரை செல்கிறது. இரண்டாம் கட்டப் பயணம் கொந்தூரி நிலையத்திலிருந்து 36 கம்பி வட ஊர்திகளுடன் 18 கோபுரங்களைக் கடந்து 3,980 m (13,058 அடி) உயரத்தில் உள்ள அப்கர்வாத் மலைத்தொடரின் கொடுமுடி அருகில் முடிவடைகிறது.
படக்காட்சிகள்
தொகு-
குல்மார்க் கோண்டோலா கம்பிவட நிலையத்தின் அடிவாரம், மே 2013
-
குல்மார்க் கோண்டோலா இரண்டாம் கட்டப் பயண நிலையம்
-
இதனையும் காண்க
தொகுஇணையதளம்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Official website
- Description by Remontées Mécaniques (French)
- Article in BBC News of 26 February 2009