குளிர்கடல் வெள்ளைச் சூரை

மீன் இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Thunnus (Thunnus)|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

அல்பக்கோர் அல்லது குளிர்கடல் வெள்ளைச் சூரை (Albacore) என்று அழைக்கப்படும், இது பேர்சிஃபார்மீசு வரிசையைச் சேர்ந்த ஒரு வகை சூரை ஆகும். இது உலகம் முழுவதும் மிதவெப்ப மற்றும் வெப்பமண்டல கடல்களில் சூரிய ஒளி மண்டலம் மற்றும் அதற்கு கீழே உள்ள மீசோபெலஜிக் மண்டலத்திலும் காணப்படுகிறது. இவை அத்திலாந்திக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களிலும், மத்தியதரைக் கடலிலும் உலகளவில் அறியப்பட்ட ஆறு தனித்துவமான பிரிவுகளாக உள்ளன. குளிர்கடல் வெள்ளைச் சூரை மீனானது கூம்பு வடிவ மூக்கு, பெரிய கண்கள் மற்றும் குறிப்பிடத்தக்க நீளமான மார்புத் துடுப்புகளுடன் ஒரு நீளமான, இருமுனையுங்கூம்பிய உடலைக் கொண்டுள்ளது. இதன் உடல் கருநீல முதுகும், வெள்ளி நிற பக்கங்களும் கொண்டது. இவை 1.4 m (4 அடி 7 அங்) நீளம் வரை அடையும்.

குளிர்கடல் வெள்ளைச் சூரை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Thunnus (Thunnus)
இனம்:
இருசொற் பெயரீடு
Thunnus alalunga
(Bonnaterre, 1788)
வேறு பெயர்கள் [2][3][4]
  • Scomber alalunga Bonnaterre, 1788
  • Germo alalunga (Bonnaterre, 1788)
  • Thynnus alalunga (Bonnaterre, 1788)
  • Scomber alalunga Cetti, 1777
  • Thunnus alalunga (Cetti, 1777)
  • Scomber alatunga Gmelin, 1789
  • Orcynus alatunga (Gmelin, 1789)
  • Scomber albicans Walbaum, 1792
  • Scomber germon Lacepède, 1800
  • Germo germon (Lacepède, 1800)
  • Orcynus germon (Lacepède, 1800)
  • Orcynus germo (Lacepède, 1800)
  • Scomber germo Lacepède, 1801
  • Germo germo (Lacepède, 1800)
  • Thunnus germo (Lacepède, 1800)
  • Thynnus pacificus Cuvier, 1832
  • Thunnus pacificus (Cuvier, 1832)
  • Scomber germo பென்னெட், 1840
  • Orcynus pacificus Cooper, 1863

குளிர்கடல் வெள்ளைச் சூரை சூரை மீன்கள், ஓடுடைய கணுக்காலிகள், தலைக்காலிகள் உட்பட பலவற்றை வேட்டையாடி உணவாக உண்ணும். பெரும்பாலான சூரைகளில் இவை தனித்துவமானவை. இவற்றின் முதன்மை உணவு ஆதாரம் தலைக்காலிகள் ஆகும். இவற்றின் உணவில் மீன்களானது மிகச் சிறிய இடத்தையை கொண்டுள்ளன. இவற்றின் இனப்பெருக்கம் பொதுவாக நவம்பர் முதல் பிப்ரவரி வரை முட்டையிடுதல் மூலம் நிகழ்கிறது. வயது வந்த ஒரு பெண் மீனானது முட்டையிடும் ஒரு பருவத்தில் இரண்டு மில்லியன் முட்டைகளை இட முடியும். மீன் குஞ்சுகள் பொதுவாக அவை முட்டையிடப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு வருடம் இருக்கும். குளிர்கடல் வெள்ளைச் சூரை அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியின் அடிப்படையில் கூட்டங்களாக சேர்கின்றன. ஆனால் வரிச்சுரை, மஞ்சள் தூவி சூரை, மற்றும் நீலத்தூவி சூரை போன்ற மற்ற இன சூரைகளின் கூட்டங்களுடன் இணைக்கிறது. வளர்ந்தபிறகு, கூட்டமாக இடம்பெயர்கின்றன.

குளிர்கடல் வெள்ளைச் சூரை பொருளாதார ரீதியாக மிக முக்கியமான மீன் மற்றும் வணிக மற்றும் பொழுதுபோக்கு மீன்வளத்தின் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. குளிர்கடல் வெள்ளைச் சூரை வெள்ளை நிற இறைச்சி கொண்டது என்பதால் வெள்ளைச் சூரை எனவும் அழைக்கப்படுகிறது. இது முதலில் ஐக்கிய அமெரிக்க சூரை பதப்படுத்தும் தொழிலுக்கு அடிப்படையானதாக இருந்தது. ஆனால் இன்று முக்கியத்துவம் குறைந்தக உள்ளது. இது பல்வேறு பசிபிக் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை கொண்டுள்ளது. அதிகப்படியான மீன்பிடித்தலினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக பட்டியலிடப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் தீவாய்ப்பு கவலை குறைந்த நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.[5]

குறிப்புகள்

தொகு
  1. Collette, B.B.; Boustany, A.; Fox, W.; Graves, J.; Juan Jorda, M.; Restrepo, V. (2021). "Thunnus alalunga". IUCN Red List of Threatened Species 2021: e.T21856A46911332. https://www.iucnredlist.org/species/21856/46911332. 
  2. "Thunnus alalunga". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  3. Collette, B.; Acero, A.; Amorim, A.F. et al. (2011). "Thunnus alalunga". IUCN Red List of Threatened Species 2011: e.T21856A9325450. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T21856A9325450.en. https://www.iucnredlist.org/species/21856/9325450. 
  4. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2017). "Thunnus alalunga" in FishBase. January 2017 version.
  5. "Tuna species recovering despite growing pressures on marine life - IUCN Red List". 4 September 2021.