குள்ள கேவென்டிஷ் வாழை
குள்ள கேவென்டிஷ் வாழை (Dwarf Cavendish banana) என்பது பரவலாக வர்த்தக ரீதியாக வளர்க்கப்படும் வாழை மரம் ஆகும். குள்ள கேவன்டிஷ் எனப் பெயர் வரக்காரணம் இதன் பொய்த்தண்டின் உயரமே தவிர பழத்தைக் குறிப்பதில்லை.[1] இளம் தாவரங்களின் இலைகளில் கருஞ்சிவப்பு அல்லது ஊதா நிறப் பொட்டுகள் போன்று காணப்படுகின்றன. ஆனால் முதிர்ச்சியடைந்த இலைகளில் இவை காணப்படுவதில்லை. இது கேவென்டிஷ் குழுவிலிருந்து மிகவும் பொதுவாக பயிரிடப்படும் வாழை வகைகளில் கிராண்ட் நைனுடன் ஒன்றாகும்.[2][3][4][5]
மூசா அகுமினாடா 'குள்ள கேவென்டிஷ்' | |
---|---|
2 வயது குள்ள கேவென்டிஷ் வாழை மரம் | |
இனம் | மூசா அகுமினாடா |
பயிரிடும்வகைப் பிரிவு | Cavendish subgroup of the AAA Group |
பயிரிடும்வகை | 'குள்ள கேவென்டிஷ்' |
தோற்றம் | கேனரி தீவுகள் |
சாகுபடி வரலாறு
தொகுகவென்டிஷ் வாழையானது டேவன்ஷயரின் ஆறாவது கோமகனான வில்லியம் கேவென்டிஷ் என்பவர் ஞாபகமாக பெயரிடப்பட்டது. இவை ஐரோப்பாவில் முதன்முதலாக அறியப்பட்டதில்லை என்றாலும் 1834 இல் ஆல்டன் டவர்சின் மதகுருவால் கேவெண்டிஷிற்கு மரியாதை செலுத்தும்விதமாக அளிக்கப்பட்டது. காவென்டிஷின் தோட்டக்காரர் அவற்றைப் பயிரிட்டு வளர்த்தார். பாக்ஸ்டனால் இவ்வாழை வகைக்கு கேவண்டிஷின் பெயரிடப்பட்டது[5]
இங்கு பயிரிடப்பட்ட இவ்வாழை 1850 களில் கப்பல் மூலமாக பசிபிக் கடல் வழியாக பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டன. இது கேனரி தீவுகளோடு முடிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது, சிலர் கேனரி தீவுகளில் உள்ள கேவண்டிஷ் வாழை பதினைந்தாம் நூற்றாண்டு முதல் இருந்ததாக நம்புகின்றனர். மற்றும் வேறு வழிகளிலும் அறிமுகப் படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் போர்த்துகீசிய தேடலாய்வாளர்களால் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து பெறப்பட்டு,பின்னர் கரிபியனுக்கு பரப்பியதாகவும் கருத்து நிலவுகிறது.[2] ஆப்பிரிக்க வாழைப்பழங்கள் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து மடகாஸ்கருக்குள் முந்தைய ஆசுத்திரோனீசிய மாலுமிகளால் அறிமுகப்படுத்தப்பட்டன.[6] 1888ஆம் ஆண்டில், கேனரி தீவுகளிலிருந்து வாழைப்பழங்கள் இங்கிலாந்திற்கு தாமஸ் பிளைப்பால் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த வாழைப்பழங்கள் தான் இப்பொழுதுள்ள குள்ள கேவென்டிஷ் இனத்தைச் சேர்ந்தவை என்று அறியப்படுகின்றன.[7]
வகைப்பாட்டியல்
தொகுஇதன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயரானது மூசா (ஏஏஏ குழு) 'குள்ள கேவென்டிஷ்' ஆகும். இதனுடைய ஒத்தப் பெயர்கள்:
- மூசா அகுமினாடா எல். ஏ. கோலா
- மூசா நானா ஜே. டி லுரோரோ (மொபோட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது)
- மூசா நானா ஏக். ஜெனரல் டி
- மூசா சைன்னிசிசு ஆர். ஸ்வீட்
- மூசா சைனிசெசு பி. ஏ. சாகோட் முன்னாள் ஜே. ஜி. பேக்கர்
- மூசா சைனிசெசு பி. ஏ. சாகோட்
- மூசா சைனிசெசு ஆர் ஸ்வீட் முன்னாள் எச் பி. எ. சாகோட்
மற்ற பொதுவான பெயர்கள் குளூ கோம் காம், பிசாங்க் செர்னாடா, சீன வாசை, கேனரி வாழை முதலியன.[8]
விளக்கம்
தொகுகுள்ள கேவென்டிஷ் வாழை மரங்களின் இலைகள் அகலமாகவும், இலைக்காம்பு குட்டையானவும் இருக்கும். இதன் குள்ளத் தன்மையானது, நிலையானதாகவும், காற்றிலிருந்து பாதிப்பின்றி, மரத்தை நிர்வகிக்க எளிதாகவும் அமைகிறது.[9] இதன் வேகமான வளர்ச்சியானது கூடுதலாக, பயிர்ச்செய்வதற்கு சிறந்ததாக அமைகிறது. இந்த சாகுபடியை எளிதில் அடையாளம் காணக்கூடிய குணாதிசயங்களாக ஆண் பூவடிச்செதில் மற்றும் மலர்கள் உதிர்வதில்லை பண்புகளாகும். குள்ள கேவென்டிஷ் பயிரிடும் வகையின் பழங்கள் 15 முதல் 25 செ.மீ. நீளமும் மெல்லிய தோலினையும் உடையது. ஒவ்வொரு தாவரமும் 90 சீப்பு வாழைப்பழங்களைக் கொண்டது.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bananas". www.innvista.com/. Archived from the original on 5 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 12 January 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 Mohan Jain, S.; Priyadarshan, P. M. (2009). Breeding Plantation Tree Crops: Tropical Species. Springer Science+Business Media, LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-71199-7.
- ↑ "Big business: Banana". livingrainforest.org. Archived from the original on 2 ஜனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 12 January 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ details of the taxonomic naming of the cavendish banana
- ↑ 5.0 5.1 "The Cavendish Banana". peaklandheritage.org.uk/. 2002-07-19. Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 13 January 2011.
- ↑ Phillip Rowe & Franklin E. Rosales (1996). "Bananas and Plantains". In Jules Janick & James N. Moore (ed.). Fruit Breeding. Vol. Volume I. Tree and Tropical Fruits. John Wiley & Sons. pp. 169–171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471310143.
{{cite book}}
:|volume=
has extra text (help) - ↑ Peter N. Davies, "Fyffes and the Banana", 1990, 23–51
- ↑ Musa species (PDF)
- ↑ "Sorting Musa names". www.ginosar-t-c.co.il. Archived from the original on 24 February 2012. பார்க்கப்பட்ட நாள் 13 January 2011.
- ↑ "Musa 'Dwarf Cavendish'". www.bananas.org/. பார்க்கப்பட்ட நாள் 13 January 2011.