குழந்தை இராமர் கோயில்

குழந்தை இராமர் கோயில் (Ram Lalla Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி மாவட்டம், அயோத்தி மாநகரத்தில், விஷ்ணுவின் அவதாரமான குழந்தை இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.[5] இக்கோயிலை பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் பேரரசர் விக்ரமாதித்தியன் நிறுவினார்.[6][7][8][6][9][7]

குழந்தை இராமர் கோயில்
[[Image:
|280px|alt=|அயோத்தி இராமர் கோயிலின் மாதிரி வடிவம்.[1][2]]]
அயோத்தி இராமர் கோயிலின் மாதிரி வடிவம்.[1][2]
குழந்தை இராமர் கோயில் is located in உத்தரப் பிரதேசம்
குழந்தை இராமர் கோயில்
உத்தரப் பிரதேசம்-இல் உள்ள இடம்
குழந்தை இராமர் கோயில் is located in இந்தியா
குழந்தை இராமர் கோயில்
குழந்தை இராமர் கோயில் (இந்தியா)
அமைவிடம்
அமைவு:ராம ஜென்ம பூமி, அயோத்தி, உத்தரப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்:26°47′44″N 82°11′39″E / 26.7956°N 82.1943°E / 26.7956; 82.1943
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை
கட்டுமானம்: லார்சன் & டூப்ரோ நிறுவனம் (உதவி:மத்திய கட்டுமான ஆராய்சி நிறுவனம்)
கட்டடக் கலைஞர்:சோம்புரா குடும்பத்தினர்
(சந்திரகாந்த் சோம்புரா[3]
நிகில் சோம்புரா மற்றும் ஆசிஷ் சோம்புரா[4]
கோயில் அறக்கட்டளை:ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை
அயோத்திச் சிக்கல்
அயோத்தி பிரச்சினை
பாபர் மசூதி
பாபர் மசூதி இடிப்பு
ராம ஜென்மபூமி
குழந்தை இராமர் கோயில்
அயோத்தி மசூதி
அயோத்தி அகழாய்வுகள்
அயோத்தி கல்வெட்டு
விஷ்ணு ஹரி கல்வெட்டு
2005 ராமஜென்மபூமி தாக்குதல்
லிபரான் ஆணையம்
2019 அயோத்தி தீர்ப்பு
அயோத்தி புதிய மசூதி
ஆட்களும் அமைப்புகளும்
கல்யாண் சிங்
எல். கே. அத்வானி
அடல் பிகாரி வாஜ்பாய்
முரளி மனோகர் ஜோஷி
விசுவ இந்து பரிசத்
நிர்மோகி அகாரா
பாரதிய ஜனதா கட்சி
இந்து மகாசபை
அனைத்திந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் குழு
சன்னி வக்ஃபு வாரியம்
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை

குழந்தை இராமர் கோயில் வளாகம் கட்டுமானப் பணி தொகு

கோயில் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டுதல் தொகு

இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அயோத்தியில் 5 ஆகஸ்டு 2020 அன்று 67 ஏக்கர் நிலப்பரப்பில் குழந்தை இராமர் கோயில் வளாகம் நிறுவ அடிக்கல் நாட்டினார்.[10] [11][12][13][14]அயோத்தியில் சுமார் ரூபாய் 1,100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்படுகிறது. குழந்தை இராமர் கோவிலை 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பக்தர்களுக்காக திறப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோவில் வளாகத்தின் கட்டுமானப்பணிகள் முழுமையாக 2025-ஆம் ஆண்டின் இறுதியில்தான் முடியும். இந்தக் கோவிலுக்கான அஸ்திவாரப்பணிகள் 15 செப்டம்பர் 2021 அன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கோவில் 3 தளங்கள், 5 குவி மாடங்கள், கோபுரங்கள், மற்றும் 360 தூண்களுடன் பெரிதாக இருக்கும். [15]

கோயில் கருவறைக்கு அடிக்கல் நாட்டல் தொகு

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 1 சூன் 2022 அன்று குழந்தை இராமர் கோயிலின் கர்ப்பகிரகம் கட்ட அடிக்கல் நாட்டினார். கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கிரானைட் கற்களைப் பயன்படுத்தி கருவறைக்கான பீடம் எழுப்பப்படவுள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பன்சி-பஹர்பூர் பகுதியில் உள்ள மலைகளில் இருந்து இளஞ்சிவப்பு நிற மணற்கற்களால் கருவறை கட்டப்படும்.[16][17][4]

பெயர் காரணம் தொகு

இராம் லல்லா (Rama lalla) என்பதற்கு குழந்தை இராமர் என்பர். இராம் லல்லா விரஜ்மான் என்பதற்கு குழந்தை இராமரின் விக்கிரகம் எனப்பொருளாகும். ராம ஜென்மபூமியில் உள்ள இக்கோயிலின் மூலவர் குழந்தை இராமர் ஆவார்.[18][19] இக்கோயில் பூசை நடைமுறைகள் தற்போது ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வகிக்கிறது.

வரலாறு தொகு

இந்துக்கள் முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாக ராம ஜென்மபூமியான அயோத்தியை கருதுகின்றனர். [20]பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் பல இந்து மன்னர்கள் இராம ஜென்ம பூமியில் உள்ள இராமர் கோயிலை பலமுறை மறுசீரமைப்பு செய்து கட்டியுள்ளனர்.[21][22][23]

பொ.ஊ. 1528-இல் இராம ஜென்மபூமியில் இருந்த கோயிலை பாபரின் படைத்தலைவர் இடித்து, அச்சிதிலங்கள் மீது பாபர் மசூதி கட்டினார். இராம ஜென்மபூமியில் மீண்டும் இராமர் கோயிலைக் கட்ட இந்துக்கள் பலமுறை முயன்றனர். [19]

1992-இல் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் மீண்டும் ராம ஜென்மபூமியில் தற்காலிகமாக குழந்தை இராமர் சிலையை நிறுவி வழிபடப்படுகிறது.[7][24]

நீதிமன்றங்களில் குழந்தை இராமர் தொகு

இராம ஜென்மபூமியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் குறித்தான வழக்கில், குழந்தை இராமரையும் சட்டப்படி ஒரு தரப்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சேர்த்துள்ளது. தற்போது குழந்தை இராமர் கோயிலின் பூசைகளை நடத்தும் ராம ஜென்மபூமி அறக்கட்டளையை, குழந்தை இராமரின் பிரதிநிதியாக வழக்குகளில் வாதாட அலகாபாத் உயர் நீதிமன்றமும், இந்திய உச்ச நீதிமன்றமும் அனுமதித்துள்ளது.[7] இந்திய நீதித்துறை, கோயில் மூலவரை கோயில் வழக்குகளில் சட்டப்படி ஒரு தனிநபராக எடுத்துக்கொள்கிறது. எனவே கோயில் பராமரிக்கும் நிறுவனங்கள், மூலவரின் சார்பாக வழக்குகளில் வாதாட அனுமதி வழங்குகிறது.[7][25][26]

அயோத்தி ராம ஜென்மபூமி வழக்கில் இராம் லல்லாவின் (கடவுள் இராமரின் குழந்தை வடிவம்) பிரதிநிதியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கே. பராசரன் மற்றும் சி. எஸ். வைத்தியநாதன் வாதாடினர்.[27][28]

9 நவம்பர் 2019 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராம ஜென்மபூமிக்குரியது என்றும், அவ்விடத்தில் குழந்தை இராமர் கோயில் கட்ட, மூன்று மாதங்களில் ஒரு அறக்கட்டளையை நிறுவ இந்திய அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.[29]

இலக்கியங்களில் தொகு

துளசிதாசர் இந்தி மொழியில் எழுதிய இராமாயணத்தில் குழந்தை இராமரின் அழகை கவிநயத்துடன் எடுத்துரைக்கிறார்.[30][31]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "Delhi's Pacific Mall installs 32-foot-tall replica of Ayodhya's Ram temple ahead of Diwali" (in en). 25 October 2020. https://www.indiatoday.in/india/story/delhi-s-pacific-mall-installs-32-foot-tall-replica-of-ayodhya-s-ram-temple-ahead-of-diwali-1734891-2020-10-25. 
 2. "With replica of Ayodhya's Ram Temple, West Delhi's Pacific Mall mall showcases faith". 24 October 2020. https://www.newindianexpress.com/cities/delhi/2020/oct/24/with-replica-of-ayodhyas-ram-temple-west-delhispacific-mall-mall-showcases-faith-2214428.html. 
 3. Umarji, Vinay (15 November 2019). "Chandrakant Sompura, the man who designed a Ram temple for Ayodhya". Business Standard. https://www.business-standard.com/article/current-affairs/chandrakant-sompura-the-man-who-designed-a-ram-temple-for-ayodhya-119111501801_1.html. 
 4. 4.0 4.1 Pandey, Alok (23 July 2020). "Ayodhya's Ram Temple Will Be 161-Foot Tall, An Increase Of 20 Feet". https://www.ndtv.com/india-news/ayodhya-ram-temple-will-be-161-feet-tall-an-increase-by-20-feet-2267315. 
 5. "क्यों मर्यादापुरुषोत्तम है श्रीराम? - why lord shriram called MARYADA PURUSHOTTAM?". religion.bhaskar.com. 2010-12-22. http://religion.bhaskar.com/article/dharm-shriram-1679541.html. பார்த்த நாள்: 2012-03-27. 
 6. 6.0 6.1 "Ayodhya dispute: claims and counter-claims - Thaindian News". Thaindian.com இம் மூலத்தில் இருந்து 2012-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121016051933/http://www.thaindian.com/newsportal/uncategorized/ayodhya-dispute-claims-and-counter-claims_100436546.html. பார்த்த நாள்: 2012-03-27. 
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 ayodhyafiles
 8. "Valmiki Ramayana". Valmikiramayan.net. http://valmikiramayan.net/. பார்த்த நாள்: 2012-03-27. 
 9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303170029/http://is1.mum.edu/vedicreserve/puranas/skanda_purana/skanda_purana_02vaishnava_08ayodhya.pdf. 
 10. Ayodhya Ram Mandir Updates : ராமர் கோவில் பூமி பூஜை முக்கிய நிகழ்வுகள்
 11. 500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
 12. "அயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி" இம் மூலத்தில் இருந்து 2020-08-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200806232017/https://www.maalaimalar.com/News/TopNews/2020/08/05141211/1758337/PM-Modi-praise-Kamba-Ramayanam-in-Ram-Temple-Bhumi.vpf. 
 13. ராமர் கோயில் நமது கலாச்சாரத்தின் நவீன குறியீடாக இருக்கும்: பிரதமர் மோடி
 14. அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்” - நரேந்திர மோதி
 15. அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் குறித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆய்வு
 16. அயோத்தி ராமர் கோயில் கர்ப்பகிரகத்திற்கு முதல்வர் யோகி அடிக்கல் நாட்டுகிறார்
 17. UP: Yogi Adityanath lays foundation stone of Ram Temple's 'Garbha Griha'
 18. ayodhyafiles
 19. 19.0 19.1 [1]
 20. http://elegalix.allahabadhighcourt.in/elegalix/ayodhyafiles/hondvsj-gist-vol1.pdf
 21. "Ayodhya and the Research on the Temple of Lord Rama". Stephen-knapp.com. http://www.stephen-knapp.com/ayodhya_and_the_research_on_the_temple_of_Lord_Rama.htm. பார்த்த நாள்: 2012-03-27. 
 22. Tomar, Gaurav (2009-08-17). "Suryavanshi: Ayodhya and suryavanshis". Suryavansha.blogspot.com இம் மூலத்தில் இருந்து 2012-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120303071123/http://suryavansha.blogspot.com/2009/08/ayodhya-and-suryavanshis.html. பார்த்த நாள்: 2012-03-27. 
 23. "Narsinghgarh". Narsinghgarhprincelystate.com. 1947-08-15. http://narsinghgarhprincelystate.com/. பார்த்த நாள்: 2012-03-27. 
 24. "Disputed Ayodhya site to be divided into 3 parts- TIMESNOW.tv - Latest Breaking News, Big News Stories, News Videos". Timesnow.Tv இம் மூலத்தில் இருந்து 2012-03-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120311101725/http://www.timesnow.tv/Disputed-Ayodhya-site-to-be-divided-into-3-parts/articleshow/4355050.cms. பார்த்த நாள்: 2012-03-27. 
 25. "The Telegraph - Calcutta (Kolkata) | Frontpage | Ram Lalla guardian faces parivar push". Telegraphindia.com. 2010-10-02. http://www.telegraphindia.com/1101002/jsp/frontpage/story_13008956.jsp. பார்த்த நாள்: 2012-03-27. 
 26. "Front Page : Suits on behalf of deities can't be treated as time-barred". The Hindu. 2010-10-03 இம் மூலத்தில் இருந்து 2012-11-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108165516/http://www.hindu.com/2010/10/03/stories/2010100362621000.htm. பார்த்த நாள்: 2012-03-27. 
 27. அயோத்தி வழக்கில் ராமருக்காக வாதாடிய 93 வயது தமிழர் கே.பராசரன்
 28. அயோத்தி வழக்கு: 'முஸ்லிம் தரப்பு வாதம் தவறு என்று நிரூபிக்கப்பட்டது' - ராம் லல்லாவின் வழக்கறிஞர்
 29. அயோத்தி வழக்கின் தீர்ப்பு முழு விவரம்
 30. "Goswami Tulsidas (1532 — 1623)". Hinduism.about.com. 2011-03-10 இம் மூலத்தில் இருந்து 2010-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101201110717/http://hinduism.about.com/od/gurussaints/p/tulsidas.htm. பார்த்த நாள்: 2012-03-27. 
 31. Courtney, David. "Biography of Tulsidas". Chandrakantha.com. http://chandrakantha.com/biodata/tulsidas.html. பார்த்த நாள்: 2012-03-27. 

மேலும் படிக்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rama
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள் தொகு