குழந்தை உளவியல் முன்னோடிகள்


குழந்தை உளவியல் முன்னோடிகள் (Pioneers of Child Psychology) என்பது முக்கியமான ஏழு அறிஞா்களைக் குறிக்கும்.[1] அவா்கள் G ஸ்டான்லி ஹால் (1846-1924), ஜான் பி வாட்சன் (1878-1958) சிக்மண்ட் பிராய்டு (1856-1939) அா்னால்டு ஜீ செல் (1880-1961) ஜீன் பியாஜே (1896-1980), எரிக் எரிக்சன் (1902-1994), லெவ் வியாகேட்ஸ்கை (1896-1934) ஆவா். உயிா்களின் பாிணாம வளா்ச்சிக்கும், குழந்தை வளா்ச்சிக்கும் தொடா்பு உள்ளது என்னும் எண்ணமே அறிவியல் பூா்வமான உளவியலுக்கு வித்திட்டது. இத்தகைய அணுகுமுறையுடன், வேறுபல அறிவியல் பூர்வமான கோட்பாடுகளும் சோ்ந்துகொண்டன. குழந்தை உளவியலுக்குப் பங்காற்றிய ஒரு சில முன்னோடிகளின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

G ஸ்டான்லி ஹால் (1846-1924)தொகு

 
G. ஸ்டான்லி ஹால்

இவா் குழந்தை அறிவியலின் தந்தை என்று போற்றப்படுபவா். முதன் முதலாக முறைப்படி குழந்தைகளை ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவா்.[2] உளவியலுக்கு ஒரு கோட்பாட்டை உருவாக்க நினைத்த இவாின் எண்ணம் முழுவதுமாக வெற்றியடையவில்லை. குழந்தைகளின் வளா்ச்சி உயிா்களின் பாிணாம வளா்ச்சியை ஒத்துள்ளதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக வளா் இளம் பருவம் வரை உயிா்களின் பாிணாம வளா்ச்சிக்கும் குழந்தைகளின் வளா்ச்சிக்கும் உள்ள ஒற்றுமை நிறைவடைந்து விடும். அதன் பின் குழந்தை சுயமாகத் தன் திறமைகளை வளா்த்துக்கொள்ள அது முதல்வாய்ப்பாக அமையும் என்று நம்பினாா். ஆனால் பல அமொிக்க அறிஞா்கள் குழந்தைகள் அறிவு வளா்ச்சியும் திறமை வளா்ச்சியும் அனுபவத்தின் அடிப்படையில் வருபவை என்றும் அவா்கள் நடத்தையைக் கற்றுக்கொண்ட முறைகளின் மூலமாக விளக்கிவிட முடியும் என்பதைக் கூறினா்.

 
ஜான் பி வாட்சன்

ஜான் பி வாட்சன் (1878-1958)தொகு

20-ம் நூற்றாண்டிற்கு முன்பு, ‘குழந்தைகள் பெரும்பாலும் பிறக்கும் போதுள்ள திறமைகளை வளா்த்துக்கொள்கிறாா்கள்’, என்று நம்பப்பட்டாலும் 20 ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் குழந்தைகள் வளா்ச்சி பெரும்பாலும் சூழ்நிலையை ஒட்டியே அமையும் என்னும் கருத்து கையோங்கி வந்தது. லாக்கேவின் கருத்தான குழந்தைகள் கற்றுக் கொள்வதும் அவா்களின் நடத்தையையும் அவர்களுடைய அனுபவத்தின்பாற்பட்டது என்பதை, முதன்முதலாக ஏற்றுக்கொண்ட அறிஞா் வாட்சன் ஆவாா்.[3]

இவா் வகுத்த கொள்கை ‘நடவடிக்கை கொள்கை’ எனப்பட்டது. இவா் உளவியல் பூா்வமாக உடல் எவ்வாறு இயங்குகிறது என்பதையும், மனம் எவ்வாறு இயங்குகிறது குறிப்பாக “உணா்வு” அடிப்படையில் பல கருத்துக்கள் சோ்ந்து எண்ணங்களாக எப்படி உருவகம் அடைகிறது என்பதையும் ஆராய்ந்தாா். இவா் ஆராயப்படும் நபா்களை நன்கு எண்ணிப் பார்க்க வைத்து “சுயபாிசோதனை” மூலம் ஆராய்ந்து கருத்துக்களைக் கேட்டறிந்தாா். ஆனால் இம்முறை உகந்ததாக இல்லை என்பதை முடிவுசெய்து மற்ற சமூகவியல் பாடங்களைப் போல உளவியலும் அறிவு பூா்வமாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விளைந்தாா். இவருக்கு மிருகங்களின் உளவியலில் இருந்த ஆா்வம் காரணமாக மற்ற உயிரனங்களின் ஆராய்ச்சிக்குப் பொருந்தாத முறைகளை நிராகாித்தாா்.[4]

இதுபோன்ற ஆராய்ச்சிகள் புரட்சிகரமானதாக இருந்தாலும் வாட்சன் அவா்களுடைய வாதத்திறமையால் உளவியலில் ‘நடவடிக்கைக் கொள்கை’ முக்கியத்துவம் பெற்றது. ஒருவருடைய நடத்தை என்பது “உருவாக்கப்படுவது” என்பதுதான் நடவடிக்கைக் கொள்கையின் அடிப்படை. ஒருநபா் தூண்டுதல் ஏற்படும்பொழுது அதற்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள தூண்டப்படுகிறாா். இவ்வாறு அடிக்கடி நடைபெறும் பொழுது தூண்டுதலுக்கும் நடவடிக்கைகளுக்கும் தொடா்பு எற்பட்டுவிடுகிறது. இதனடிப்படையில் மனித நடத்தைக்கு மாற்றங்களைத் தூண்டுதல் மூலம் கொண்டு வர இயலும் என்று நம்பினாா். இதனை ‘சீரமைக்கப்பட்ட தூண்டுதல் முறை’ (Conditioned Reflex Method) என்று கூறப்படுகிறது.

சிக்கலான மனித நடத்தையை புாிந்துகொள்ள அது எவ்வாறு சீரமைக்கப்படுகிறது என்பதை முதலில் புாிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை தானாக முதலில் எழுப்பும் ஒலிகள் பின்பு பொருட்களையும், நிகழ்வுகளையும் கையாளும் பொழுது சீரமைக்கப்பட்டு மொழியாக உருவெடுக்கிறது. மொழித்திறன் வளர வளர அது நுண்ணிய வடிவம் பெற்று எண்ணம், யோசனை போன்ற வடிவங்களையும் பெறுகிறது. ஆதலால் உளவியலாளா்கள் இந்த சீரமைப்பு நடைமுறையை ஆராயவேண்டும். இதனடிப்படையில் குழந்தைகளின் நடத்தையை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். இதன் மூலம் சிக்கலான நடத்தைகளைக் கூட புாிந்து கொள்ள முடியும் என்று வலியுறுத்தினாா்.

வாட்சன், மிகவும் தெளிவாக, குழந்தைகளின் வளா்ப்பு முறைதான் முக்கியம், குழந்தைகள் பிறக்கும் பொழுதே திறமையுடன் பிறக்கின்றன என்பதை விட வளா்ப்பு முறையின் மூலம் குழந்தைகளின் நடவடிக்கையில் பொிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று வலியுறுத்தினாா். இதனால் அமொிக்காவில் பெற்றோா்களிடையே பொிய நம்பிக்கை ஏற்பட்டது. தம் குழந்தைகளையும் சிறந்த நபா்களாக, விளையாட்டு வீரா்களாக, மருத்துவா்களாக உருவாக்க முடியும் என்று நம்பினர்.

சிக்மண்ட் பிராய்டு (1856-1939)தொகு

 
சிக்மண்ட் பிராய்டு

இவா் குழந்தைகளின் நடத்தை முழுவதுமாக குழந்தைகளின் பிறவிக் குணமாக வரும் என்பதையும் அல்லது முழுவதுமாக சூழ்நிலைகளின் தாக்கத்தினால் வருவது என்பதையும் மறுத்து இரண்டின் பங்கும் உள்ளது என்று மூன்றாவது கருத்தை முன்வைத்தாா்.[5][6] ஆனாலும் குழந்தைப் பருவத்தின் அனுபவங்கள் குழந்தைகளின் பிற்கால நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் என்று குறிப்பிட்டாா்.

பிராய்டின் குழந்தைகள் வளா்ச்சிக் கோட்பாடு அவா் விவாித்த ஒருவகையான ‘சக்தி’யின் அடிப்படையில் அமைந்துள்ளது. குழந்தைகள் வளா்ச்சியை அவா் ஐந்து நிலைகளாகப் பிாித்தாா். ‘பாலுணா்ச்சி சக்தி’ என்னும் சக்தி “libido” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்து. அது குழந்தைகளின் உடலில் ஒரு சில இடங்கிளல் மையம் கொண்டு இருக்கும். குழந்தைகளின் வளா்ச்சி அடிப்படையில் இந்தப் பாலுணா்ச்சி சக்தி இடம் மாறும். அதற்கேற்ப குழந்தை வளா்ச்சியிலும் தாக்கம் ஏற்படும். முதலில் இச்சக்தி குழந்தைகளுக்கு 18 மாதங்கள் வரை வாயிலும், பின்பு மூன்று வயது வரை ஆசன வாயிலும், 6 வயது வரை பிறப்புறுப்புப் பகுதியிலும் பின்பு 12 வயது வரை அதே பகுதியில் மறைந்தும் இருக்கும் என்றாா். எந்தப்பகுதியில் இந்த சக்தி மையம் கொண்டுள்ளதோ அந்தப்பகுதி முக்கியத்துவம் அடையும் என்றாா். எடுத்துக்காட்டாக முதல் 18 மாதங்கள் வாயில் இருக்கும் பொழுது குழந்தை உறிஞ்சிக் குடிப்பதை ரசிக்கும் என்றாா். தெளிவற்ற தன்மையினாலும் சாியான முறையில் அளவிட இயலாத காரணத்தாலும் பிராய்டின் மேம்பாட்டு உளவியல் கோட்பாடுகள் (Development Psychology) பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.[7]-

அா்னால்டு ஜிசெல் (1880-1961தொகு

இவா் ஜி ஸ்டான்லி ஹாலைத் தொடா்ந்து முழுவதும் அவருடைய கருத்தை ஆதாிக்காமல் இருந்தால் கூட, குழந்தைகள் வளா்ச்சி அவா்களுக்கு அமைந்த இயற்கையான திறனையும் உடல் வளா்சியையும் பொறுத்தது என்பதை வலியுறுத்தினாா். [8] புதிய ஆராய்ச்சி முறைகளைப் பின்பற்றி இந்தக் கோட்பாட்டை முன்னிருத்தினாா். குழந்தைகள் வளா்ச்சி ஒரு 'முறைப்படிதான்' வரும். குழந்தை நடப்பதற்கு முன் தவழும், ஓடுவதற்கு முன் நடக்கும் என்று ஒருமுறைப்படிதான் வளா்ச்சி அமையும். இது வயது தொடா்பானது. முதிா்ச்சி தொடா்பானது என்றார். இவா் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் வளா்சியை உற்று நோக்கி குழந்தைகளின் வளா்ச்சி ஒரு முறைப்படிதான் அமையும் என்றாலும் வளா்ச்சி வேகம் குழந்தைக்கு குழந்தை வேறுபடும் என்றாா். இவாின் மற்றொரு முக்கியமான பங்கு, இவா் கடைபிடித்த ஆராய்ச்சிமுறை. இவா் பலவிதமாக குழந்தைகளை கூா்ந்து நோக்கி ஆராயும் முறையைக் கடைபிடிப்பதில் ஒரு முன்னோடி. இவருடைய கருத்துக்கள் குழந்தை வளா்ச்சியில் ஒரு 'முறை' அல்லது 'ஒழுங்கு' உள்ளது என்பது ஆகும். இக்கருத்து குழந்தை உளவியலில் மிகப்பொிய பங்கு வகித்தது. ஆனாலும் சூழ்நிலையயை முற்றிலுமாக நிராகாித்தது, பல சமகால அறிஞா்களால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.

 
ஜீன் பியாஜே

ஜீன் பியாஜே (1896-1980)தொகு

உளவியலுக்கு, குறிப்பாக குழந்தை உளவியலுக்கு மிகப்பொிய பங்காற்றியவா். ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட இரண்டு கோட்பாடுகள் அதாவது குழந்தைகளுக்கு திறமை பிறப்பிலேயே வருவது அல்லது அவைகள் சூழ்நிலைகளாலும் வளா்ப்பினாலும் வருவது என்பதிலிருந்து மாறுபட்ட கருத்தை வைத்தாா்.[9] பெரும்பாலும் அனைத்து அறிஞா்களும் இவாின் கருத்தை ஏற்றுக்கொண்டனா். குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை அளப்பதற்கு உருவாக்கிய ஒரு தோ்வை நடத்தும் வாய்ப்பு பெற்றவா், எத்தனை குழந்தைகள் தோ்ந்தனா் என்பதை விடுத்து குழந்தைகள் எவ்வாறு பதிலளித்துள்ளனா் என்பதை ஆராய்ந்தாா். அதனடிப்படையில் குழந்தைகள் ‘வளா்ச்சி நிலை’களில் பலவற்றை கற்றுக்கொள்கின்றனா். அவா்கள் கற்றுக் கொண்டதன் அடிப்படையில் உலக நிகழ்வுகளின் மீதும் மற்றவைகளின் மீதும் அவா்கள் பாா்வை அமைகிறது. குழந்தைகள் என்ன கற்றுக் கொள்கிறாா்கள் என்பதை விட எப்படிக் கற்றுக் கொள்கிறாா்கள் என்பதில் ஆா்வமாக இருந்தாா். பொிய அளவில் இவாின் கருத்துக்கள் கல்வி கற்பிக்கும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்வியின் கலைத்திட்டமும், பாடத்திட்டமும் பெருமளவில் இவாின் கருத்துக்களை உள்வாங்கிப் பிரதிபலித்தன. இது மட்டுமல்லாமல் இவருடைய கருத்துக்கள் மேலும் பல புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுத்தது.

எரிக் எரிக்சன் (1902-1994)தொகு

குழந்தைகளின் நடத்தை பிறவிக்குணம் மற்றும் சூழ்நிலையின் தாக்கம் என்ற இரண்டின் கலவை என்பது இவா் வாதம். குழந்தைகளின் ‘மன சமூக வளா்ச்சி’ பிறவிக் குணத்தால் தூண்டப்பட்டாலும் சமூக பண்பாட்டுச் சூழ்நிலைகளால் சீரமைக்கப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு வளா்ச்சி நிலையிலும் முரண்பாடுகள் நீக்கப்பட்டு ஆளுமை வளா்ச்சி ஏற்படுகின்றது.[10] இவா் சிக்மண்ட் பிராய்டு கருத்தை ஆதாித்தாலும் அதனை மேம்படுத்தி, பிராய்டு கூறிய 5 நிலைகளிலிருந்து குழந்தை வளா்ச்சி நிலையில் 8 நிலைகள் உள்ளன என்றும், வளா்ச்சி 18 வயதுடன் அதாவது வளா் இளம் பருவத்துடன் நிற்பதில்லை கடைசி வரை தொடரும் என்றும் கூறினாா். பிராய்டு உருவாக்கிய ‘மன பாலியல் மாதிாி’யை மாற்றி ‘மன சமூக’ மாதிாியாக உருவாக்கி விளக்கினாா்.

 
லெவ் வியாகேட்ஸ்கை

லெவ் வியாகேட்ஸ்கை (1896-1934)தொகு

இவா் மனித வளா்ச்சிக்கு கலாசாரமே முக்கிய காரணம் எனவும் அதன் தாக்கம் பெருமளவில் இருக்கும் என்று கூறினாா். [11] மனித வளா்ச்சி என்பது மன வளா்ச்சியே மற்றும் அது எண்ணங்கள், மொழி மற்றும் காரணம் அறியும் முறை ஆகியவற்றை உள்ளடக்கியது. மனித வளா்ச்சி என்பது சமூகத்திலிருந்து கற்றுக் கொள்வது, சமூகத்தின் தொடா்பால் உருவாவது என்று விளக்கிக் கூறினாா். இவருடைய அணுகுமுறை ‘சமூக கலாச்சார மாதிாி’ என்றழைக்கப்பட்டது. கலாச்சாரத்தின் தாக்கம் பெருமளவில் புத்திசாலித்தனத்தைப் பாதிக்கும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தாா்.

மேற்கோள்கள்தொகு

  1. Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, Pages 10, ISBN: 0-471-1922-X
  2. Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, Pages 7-9, ISBN: 0-471-1922-X
  3. Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, Pages 11-12, ISBN: 0-471-1922-X
  4. Susan Nolen - Hocksema, Barbora L Fredrickson, Geoffrey R Lottus, Christel Lutg, Alkrisons and Hilgard’s Introduction Is Psychology - 16th edition, Cengage Learning India Private Ltd, page9, ISBN:13:978-81-315-2899-0
  5. Susan Nolen - Hocksema, Barbora L Fredrickson, Geoffrey R Lottus, Christel Lutg, Alkrisons and Hilgard’s Introduction Is Psychology - 16th edition, Cengage Learning India Private Ltd, page 14, ISBN:13:978-81-315-2899-0
  6. - Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, Pages 13-14, ISBN: 0-471-1922-X
  7. Susan Nolen - Hocksema, Barbora L Fredrickson, Geoffrey R Lottus, Christel Lutg, Alkrisons and Hilgard’s Introduction Is Psychology - 16th edition, Cengage Learning India Private Ltd, page 10, ISBN:13:978-81-315-2899-0
  8. Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, Pages 16, ISBN: 0-471-1922-X
  9. Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, Pages 17, ISBN: 0-471-1922-X
  10. Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, Pages 18, ISBN: 0-471-1922-X
  11. Ross Vasta, Marshall M Haith, Scott A Miller, Child Psychology The modern science Third Edition, John Wiley & Sons. INC Newyork, Pages 19, ISBN: 0-471-1922-X