குழி விரியன்

[1]நாசித்துவாரங்களுக்கும் கண்களுக்கும் இடையே குழிகள் இருப்பதால் இவை குழி விரியன்கள் என்று அழைக்கப்படுகிறது.இக்குழிகள் வெப்ப உணர்த்தியாக செயல் படுவதால் வெப்ப நிலை மாறுபாடுகளை கண்டறிய உதவும். வெப்ப இரத்தமுடைய விலங்குகள் அருகில் வாந்தால் கண்டுபிடித்து விடும் திறன் குழி விரியனுக்கு உண்டு. இதன் கண்ணைக்கட்டினாலும் இரையை எளிதாக வேட்டையாடும்.இந்தியாவில் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் குழி விரியன் தென்படும். குழி விரியன்களில் பத்து வகை பிரிவுகள் உள்ளன.இதில் முக்கியமானவை மலபார் குழி விரியன், கூனல் மூக்கு விரியன் ஆகும்.

  1. நம்முடன் வாழும் பாம்புகள்_ஸாய்.ரோம் விட்டேகர். தமிழில்.டாக்டர். ஓ.என்றி ஃபிரான்சிஸ்.1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழி_விரியன்&oldid=2768264" இருந்து மீள்விக்கப்பட்டது