குவகாத்தி போர் நினைவகம்
குவகாத்தி போர் நினைவகம், இந்திய மாநிலமான அசாமின் குவகாத்தியின் நபகிரகா பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒன்பது போர் நினைவிடங்களில் இதுவும் ஒன்று.[1] இந்தியாவில் உள்ள போர் நினைவிடத்தில் மட்டுமே ஜப்பானிய வீரர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. அதைப்பற்றிய ஆவணங்கள் ஜப்பானிய அரசிடம் உள்ளன.[1] இவர்கள் இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்தவர்கள்.
இந்த இடம் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் உடல்களை புதைக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ராணுவ மருத்துவமனைகளில் இருந்து உடல்கள் கொண்டு வரப்பட்டன. சில்ஹட், பதர்பூர், கூச் பேகர், டார்ஜிலீங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் உடல்கள் கொண்டுவரப்பட்டன.[2] இந்த நினைவிடத்தில் 521 சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல ஐக்கிய இராச்சியம், இந்தியா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் சடலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.[1]