குவாலியர் வானூர்தி நிலையம்

குவாலியர் வானூர்தி நிலையம் (Gwalior Airport) (ஐஏடிஏ: GWLஐசிஏஓ: VIGR) எனும் பொது வானூர்தி நிலையம் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் வடகிழக்கே 10 km (6 mi) தொலைவில் மகராஜபூர் விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ளது. இது மத்தியப் பிரதேசத்தின் ஆறு விமான நிலையங்களில் ஒன்றாகும். மேலும் இது மத்தியப் பிரதேசத்தின் நான்காவது பெரிய விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் 760 ஏக்கர்கள் (310 எக்டேர்கள்) பரப்பில் அமைந்துள்ளது. அலையன்ஸ் ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் குவாலியருக்கு விமானச் சேவைகளை இயக்குகின்றன.

இராஜமாதா விஜய ராஜீ சிந்தியா முனையம், குவாலியர் வானூர்தி நிலையம்
USAF F-15C வானூர்தி நிலையத்திலிருந்து புறப்படும் காட்சி Cope India 2004
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்/பொது
உரிமையாளர்இந்திய வான்படை
இயக்குனர்இந்திய வான்படை/இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகுவாலியர், மோரினா, பிகிந், தாதியா, தாப்ரா, சிவ்பூர், ஜான்சி, தோலாப்பூர், ஆக்ரா, செப்பூர், குணா, எடாவா, ஒர்ச்சா
அமைவிடம்குவாலியர், மத்தியப் பிரதேசம், இந்தியா
உயரம் AMSL617 ft / 188 m
ஆள்கூறுகள்26°17′36″N 078°13′40″E / 26.29333°N 78.22778°E / 26.29333; 78.22778
நிலப்படம்
GWL is located in மத்தியப் பிரதேசம்
GWL
GWL
GWL is located in இந்தியா
GWL
GWL
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
06L/24R 9,000 2,743 அஸ்பால்ட்
06R/24L 9,000 2,743 அஸ்பால்ட்

புள்ளிவிவரம் தொகு

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள் தொகு

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
அலையன்ஸ் ஏர்தில்லி, இந்தூர்
ஸ்பைஸ் ஜெட்அகமதாபாத்,[1] பெங்களூர், ஐதராபாத், ஜம்மூ,[1] கொல்கத்தா, மும்பை,[1] புனே[1]

அமைப்பு தொகு

இந்த விமான நிலையம் 760.7 ஏக்கர்கள் (307.8 எக்டேர்கள்) பரப்பில் ஒரு முனையத்தில் மணிக்கு 350 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. 100-by-150-மீட்டர் (330 அடி × 490 அடி) ஏப்ரன் இரண்டு ஏர்பஸ் ஏ 320 மற்றும் ஒரு சிறிய விமானத்தை ஒரே நேரத்தில் கையாளும் திறனுடையது.[2] குவாலியர் விமானத் தளம் இரண்டு செயல்பாட்டிற்கான இணையான ஓடுபாதைகளைக் கொண்ட விமானப்படைத் தளமாகும். இரண்டாவது ஓடுபாதை பிப்ரவரி 2009 இல் கட்டப்பட்டு, அக்டோபர் 2010 இல் செயல்பாட்டுக்கு வந்தது.

விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள் தொகு

  • மே 6, 2021 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பீச் கிராஃப்ட் 250 விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. மூன்று விமானப் பணியாளர்கள் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரெம்டெசிவியர் ஊசி மருந்துகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "SpiceJet schedule". SpiceJet. பார்க்கப்பட்ட நாள் 14 December 2020.
  2. AAI website, archived from the original on 7 June 2012, பார்க்கப்பட்ட நாள் 10 January 2012
  3. Tomar, Shruti (May 7, 2021). "Plane carrying Remdesivir injections crash lands in MP’s Gwalior". The Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/plane-carrying-remdesivir-injections-crash-lands-in-mp-s-gwalior-101620327054221.html.