கு. திருப்பதி

இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர் (1930 - 2015)

கு. திருப்பதி (ஆகத்து 9, 1930 - செப்டம்பர் 30, 2015) தமிழக அரசியல்வாதி ஆவார்.

கு. திருப்பதி
தொகுதிமதுரை மத்தி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1930-08-09)ஆகத்து 9, 1930
மதுரை மாவட்டம், தமிழ்நாடு
இறப்புசெப்டம்பர் 30, 2015(2015-09-30) (அகவை 85)
மதுரை
அரசியல் கட்சிதிமுக
துணைவர்மல்லிகா
வேலைஅரசியல்வாதி, வழக்கறிஞர்

இவர் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் குழந்தைவேல் பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் 1971-இல் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[1][2] மதுரையைச் சேர்ந்த இவர் மதுரைக் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளநிலைப் பட்டம் பெற்று, பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். அரசியலுக்கு வரும் முன் வழக்கறிஞராக பணியாற்றினார்.

செப்டம்பர் 30, 2015-ல் மாலை சுமார் 6.30 மணியளவில் காலமானார்.[3][4][5] திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர், கு. திருப்பதி க்கான இரங்கல் செய்தியை முரசொலி பத்திரிகையில் தெரிவித்தார்.[6] இவரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு தமிழ்நாடு சட்டமன்றத்தில் 21 ஆம் தேதி ஜனவரி மாதம் 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
  2. 1971 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. தினத்தந்தி செய்தித்தாள்
  4. முரசொலி செய்தித்தாள்
  5. "தினமலர் செய்தித்தாள்". Archived from the original on 2015-10-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-01.
  6. திமுக தலைவர் கலைஞர், கு. திருப்பதி க்கான இரங்கல் செய்தியை முரசொலி பத்திரிகையில் தெரிவித்தார்
  7. "தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரங்கற் குறிப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._திருப்பதி&oldid=3550264" இலிருந்து மீள்விக்கப்பட்டது