கூட்டப்புளி

கூட்டப்புளி என்ற கிராமம் திருநெல்வேலி மாவட்டத்தின் தென் கோடியில் அமைந்து உள்ளது. இது ஒரு கத்தோலிக்க கிறித்தவ மக்கள் நிறைந்துள்ள கிராமம் ஆகும். இக் கிராமம் வங்காள விரிகுடா கடலின் ஓரத்தில் அமைந்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் துரத்தில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலை நம்பி உள்ளனர்.

கல்வி தொகு

கூட்டப்புளியில் மூன்று பள்ளிகள் அமைந்துள்ளன. அவையாவன :

  • புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி
  • புனித ஜோசப் தொடக்கப்பள்ளி
  • புனித மரியன்னை தொடக்கப்பள்ளி

அடிப்படை வசதிகள் தொகு

கூட்டப்புளி கிராமத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம், தபால் நிலையம், சமுதாய நலக்கூடம், சிறிய வணிக வளாகம் போன்ற அடிப்படை வசதிகள் அமைந்துள்ளன.

கோவில் தொகு

  • புனித சூசையப்பர் கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டப்புளி&oldid=3828448" இலிருந்து மீள்விக்கப்பட்டது