கூட்டுக்கதிர் ஏற்பளவு

கூட்டுக்கதிர் ஏற்பளவு (Collective dose) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் தெளிவான கதிர் மூலத்திலிருந்து, அவ்விடத்தில் இருந்த அத்தனை தனி நபர்களின் கதிர் ஏற்பளவின் கூட்டுத்தொகையாகும்.

N1D1 + N2D2 + N3D3 + ----

இங்கு, N என்பது நபர்களின் எண்ணிக்கை, D என்பது அவர்கள் பெற்ற கதிர் ஏற்பளவு. இவைகளின் கூட்டுத்தொகையே கூட்டுக்கதிர் ஏற்பளவு எனப்படும்.

அயனிக் கதிர்வீச்சின் போது மொத்த விளைவைக் கணிப்பதற்கு கூட்டுக்கதிர் ஏற்பளவு பயன்படுத்தப்படுகிறது.[1] மொத்தக் கூட்டுக்கதிர் ஏற்பளவு என்பது கதிர்வீச்சு ஏற்படும் நேரம் முதல் சுற்றுசூழலில் இருந்து முழுவதுமாக அழிக்கப்படும் வரை மொத்த மக்கள்தொகையும் ஏற்கும் கதிர் ஏற்பளவு ஆகும். ஆனாலும், சில வேளைகளில் கூட்டுக்கதிர் ஏற்பளவுகள் ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகைக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ தரப்படுகிறது.

கூட்டுக்கதிர் ஏற்பளவு பொதுவாக நபர்-ரெம் (man-rem) அல்லது நபர்-சீவெர்ட் (mSv, manSv) ஆகிய அலகுகளில் தரப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்

தொகு

தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் வளிமண்டல அணுகுண்டு சோதனைகளில் கூட்டுக்கதிர் ஏற்பளவு பொதுவாக நபருக்கு 1 mSv இலும் குறைவாக இருக்கும். 20ம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சோதனைகளிலும் இவ்வளவு 30,000 manSv ஆகும்.[2]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Smith, J.G. (2009). The methodology for assessing the radiological consequences of routine releases of radionuclides to the environment used in PC-CREAM 08. Didcot: Health Protection Agency. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85951-651-8. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. "Radiation, People and the Environment". Topical Booklets & Overviews. International Atomic Energy Agency. p. 44. Archived from the original on 2012-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுக்கதிர்_ஏற்பளவு&oldid=3551014" இலிருந்து மீள்விக்கப்பட்டது