கூத்தனூர் சரஸ்வதி கோயில்

கூத்தனூர் சரஸ்வதி கோயில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது.

ராஜ கோபுரம்

கோயில் அமைப்புதொகு

இக்கோயில் முன்புறம் மூன்று நிலை ராஜகோபுரத்தினைக் கொண்டுள்ளது. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. அலங்கார மண்டபம் முகப்பில் அம்பாள் சுதை உள்ளது. கர்ப்பகிரக விமானம் கர்ண கூடுகள், அந்த்ராளம் உள்ள மாறுபட்ட விமானமாகும். இரண்டு பிற்காலக் கல்வெட்டுகள் மட்டும் உள்ளன. [1] இத்தலத்தின் மூலவராக சரஸ்வதி காணப்படுகிறார். வெண்ணிற ஆடையில், வெண் தாமரையில் பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி அமர்ந்திருக்கிறார்.

ஒட்டக்கூத்தர்தொகு

இத்தலத்தில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார். [1] [2]

நம்பிக்கைதொகு

பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் தாம் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் குறித்து வைப்பதும் உண்டு. கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.

தமிழகத்தின் ஒரே சரஸ்வதி கோயில்தொகு

தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள ஒரே கோயில் இக்கோயில். சரஸ்வதிக்கு வேறு எங்கும் தனியாகக் கோயில் இல்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும் [3] இக்கோயிலின் குடமுழுக்கு 1 சூலை 2018 அன்று நடைபெற்றது. [4]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் திருக்கோயில், மகாமகம் சிறப்பு மலர் 2004
  2. தமிழ் நாவலர் சரிதை, ஔவை துரைசாமிப்பிள்ளை ஆய்வுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, வெளியீடு, முதல் பதிப்பு 1949 - பக்கம் 103
  3. கூத்தனூர் சரஸ்வதி கோயில், திருவாரூர்
  4. கூத்தனூர் சரஸ்வதி கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 2 சூலை 2018

வெளியிணைப்புதொகு

அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், தினமலர்