கூம்பு உயிரணு

விழித்திரையில் காணப்படும் ஒருவகை உயிரணு

கூம்பு உயிரணுக்கள் அல்லது கோன் செல்கள் மனிதர்கள் உள்ளிட்ட முதுகெலும்பிகளின் விழித்திரைகளில் காணப்படும் ஒருவகை ஒளி ஏற்பு உயிர் அணுக்கள் ஆகும். ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களுக்கு ஏற்ப வெவ்வேறாக பதில் அளிப்பதன் மூலம் வண்ணங்களை பிரித்துணர இது முதுகெலும்பிகளுக்கு உதவுகிறது. வெளிச்சத்தில் இவ்வகை உயிரணுக்கள் முழுமையாக செயல்படுகின்றன. மனித விழிகளில் அறுபது முதல் எண்பத்து நூறாயிரம் வரையிலான கூம்பு உயிரணுக்கள் காணப்படுகின்றன.[1]

குட்டையான, நடுத்தரமான மற்றும் நீளமான வகை கூம்பு அணுக்களின் பதிலளிப்பு

தோற்றம் தொகு

வகைகள் தொகு

மனித விழிகளில் காணப்படும் கூம்பு அணுக்கள் மூன்று வகைப்படும். 560 நானோமீட்டர்க்கும் மிகுதியான அலைநீளம் கொண்ட ஒளிகளுக்கு பதிலளிக்கும் கூம்பு அணுக்கள் நீளமானவை. பெரும்பாலான கூம்பணுக்கள் நீளமாக உள்ளன. 530 நானோமீட்டருக்கும் மிகுதியான அலைநீளங் கொண்ட ஒளிக்கு பதிலளிப்பவை நடுத்தரமான கூம்பணுக்கள். மூன்றில் ஒரு கூம்பணு நடுத்தரமாக உள்ளது. 420 நானோமீட்டருக்கும் மிகுதியான அலைநீளங் கொண்ட ஒளிக்கு பதிலளிப்பவை குட்டை கூம்பணுக்கள். விழித்திரையில் உள்ள 2 விழுக்காடு கூம்பணுக்கள் குட்டையாக உள்ளன.[2]

இந்த மூன்று வகை கூம்பு அணுக்களை ஆங்கிலத்தில் முறையே எல் வகை, எம் வகை மற்றும் எஸ் வகை என்று அழைக்கின்றனர். இவற்றின் அலைநீள சரகங்கள் முறையே 564 - 580, 534 - 545 மற்றும் 420 - 440 நானோமீட்டர்கள் ஆகும்.

வடிவம் தொகு

 
கூம்பணு வடிவம்

கூம்பணுக்கள் தடியணுக்களைக் காட்டிலும் குட்டையானவை. இவை விழிக்குழியில் மிகுதியாக காணப்படுகின்றன. சராசரி கூம்பணு 40 - 50 மைக்ரோ மீட்டர் வரை நீள்கிறது. அதன் விட்டம் 0.5 - 0.4 மைக்ரோ மீட்டராக உள்ளது.[3]

ஒளிச்சலவை என்னும் செயல்பாட்டின் மூலம் கூம்பணுக்களின் கோவையை கண்டறிய முடிகிறது. ஒவ்வொரு கூம்பணுக்குள்ளும் ஒரு நரம்பு முடிபு, ஒரு உட்பகுதி, ஒரு வெளிப்பகுதி, உட்பகுதியில் உட்கரு மற்றும் பல்வேறு இழைமணிகள் காணப்படுகின்றன. உயிரணு மென்சவ்வுகளால் ஆனது வெளிப்பகுதி.[4]

இயக்கம் தொகு

 
பறப்பன மற்றும் ஊர்வனவற்றின் கூம்பணு வடிவம்

பெறும் சமிக்ஞைகளில் உள்ள வேறுபாட்டைக் கொண்டு மூளையால் வண்ணங்களை பிரித்துக் காட்ட முடிகிறது. சான்றுக்கு மஞ்சள் நிறம் நீளமான கூம்பணுக்கள் நடுத்தரமான கூம்பணுக்களைக் காட்டிலும் மிகுதியாக தூண்டப்படுவதால் உணரப்படுகிறது. அதே சிவப்பு நிறம் நீளமான கூம்பணுக்கள் நடுத்தரமான கூம்பணுக்களைக் காட்டிலும் ஓரளவு மிகுதியாக தூண்டப்படுவதால் உணரப்படுகிறது. இங்ஙனம், கூம்பணுக்கள் வண்ணப் பார்வைக்கு காரணம் ஆகின்றது.[5]

வண்ணப் பின்னுரு தொகு

நீண்ட நேரம் ஒரே வண்ணத்தை பார்ப்பதால் சோர்வடையும் கூம்பணுக்கள் பின்னுரு ஒன்றை பிரதிபலிக்கும். தொடர்ச்சியான கூம்பணு தூண்டல் மறத்துப்போதலுக்கு வித்திடும். [6]

மேற்கோள்கள் தொகு

  1. "மனித விழியின் ராட் மற்றும் கோன் செல்கள் - ஹைப்பர் ஃபிசிக்ஸ்".
  2. "வண்ணங்களின் மீளுருவாக்கம் - ஆர்ச்சிவ்".
  3. "பார்வையின் அடிப்படைகள் - ஆர்ச்சிவ்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. ரூர்டா ஏ.; வில்லியம்ஸ் டி. ஆர். (1999). "கூம்பணுக்களின் ஏற்பாடு". இயற்கை 397 (6719): 520–522. doi:10.1038/17383. பப்மெட்:10028967. Bibcode: 1999Natur.397..520R. 
  5. "புற ஊதாக் கதிர்களும் கண் பார்வையும் - கார்டியன்".
  6. Schacter, Daniel L. Psychology: the second edition. Chapter 4.9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூம்பு_உயிரணு&oldid=3485685" இலிருந்து மீள்விக்கப்பட்டது