கூர்கா இராச்டிரிய காங்கிரசு

கூர்கா இராச்டிரிய காங்கிரசு (Gorkha Rashtriya Congress) என்பது டார்ஜிலிங் மற்றும் டூயர்து ஆகிய பகுதிகளைச் சிக்கிமுடன் இணைக்கும் கொள்கையுடைய அரசியல் கட்சியாகும்.

டி. கே. போம்சான் இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார். இவர் அக்டோபர் 7, 2010 அன்று இறந்த பிறகு, நிமா லாமா புதிய தலைவராகப் பதவியேற்றார்.

செப்டம்பர் 2010 இல், டார்ஜிலிங் மாவட்டத்தின் கீழ் உள்ள பிராந்தியத்தின் உரிமை குறித்து சிக்கிம் அரசாங்கத்திடம் கூ. இரா. கா ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.  "சிக்கிம்-டார்ஜிலிங் இணைப்பு" என்ற கருத்தரங்கு, கூ இரா. கா. மற்றும் சிக்கிம் ஜனசக்தி கட்சி சார்பில் டார்ஜிலிங்கில் செப்டம்பர் 2010இல் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் அகில இந்தியக் கூர்க்கா லீக் மற்றும் மாத்ரி பூமி சுரக்சா சங்கதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.[1]

மேற்கோள்கள்

தொகு