கேசரிநாத் திரிபாதி

கேசரிநாத் திரிபாதி (10 நவம்பர் 1934 – 8 சனவரி 2023)[1] இந்திய அரசியல்வாதியும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநரும்[2] ஆவார். முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப்பேரவைத் தலைவராகவும் உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

கேசரிநாத் திரிபாதி
2016 இல் திரிபாதி
20-ஆவது மேற்கு வங்க ஆளுநர்
பதவியில்
24 சூலை 2014 – 29 சூலை 2019
முதலமைச்சர் மம்தா பானர்ஜி
முன்னவர் த. எ. பாட்டீல்
பின்வந்தவர் ஜகதீப் தன்கர்
பீகார் ஆளுநர்
(மேலதிகப் பொறுப்பு)
பதவியில்
20 சூன் 2017 – 29 செப்டம்பர் 2017
முதலமைச்சர் நிதிஷ் குமார்
முன்னவர் ராம் நாத் கோவிந்த்
பின்வந்தவர் சத்யபால் மாலிக்
பதவியில்
27 நவம்பர் 2014 – 15 ஆகத்து 2015
முதலமைச்சர் ஜீதன் ராம் மாஞ்சி
நிதிஷ் குமார்
முன்னவர் த. எ. பாட்டீல்
பின்வந்தவர் ராம் நாத் கோவிந்த்
மிசோரம் ஆளுநர்
(மேலதிகப் பொறுப்பு)
பதவியில்
4 ஏப்ரல் 2015 – 25 மே 2015
முதலமைச்சர் லால் தன்ஃகாவ்லா
முன்னவர் அசிசு குரேசி
பின்வந்தவர் நிர்பாய் சர்மா
14-ஆவது மேகாலய ஆளுநர்
பதவியில்
6 சனவரி 2015 – 19 மே 2015
முதலமைச்சர் முகுல் சங்மா
முன்னவர் கிரிசான் காந்த் பவுல்
பின்வந்தவர் வி. சண்முகநாதன்
உத்தரப் பிரதேச சட்டமன்ற சபாநாயகர்
பதவியில்
1991–1993
பதவியில்
1997–2004
தொகுதி அலகபாத் தெற்கு
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 10, 1934(1934-11-10)
அலகாபாத், ஐக்கிய மாகாணங்கள், இந்தியா
(now அலகாபாத், உத்தரப் பிரதேசம்)
இறப்பு 8 சனவரி 2023(2023-01-08) (அகவை 88)
அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

தனி வாழ்க்கை தொகு

உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் நவம்பர் 10, 1934இல் பண்டிதர் அரீசு சந்திர திரிபாதிக்கும் திருமதி சிவ தேவிக்கும் மகனாகப் பிறந்தார். சுதா திரிபாதியை மணந்துள்ள இவருக்கு மூன்று மக்கள் உள்ளனர். இவர் அலகாபாத்தில் வசித்து வந்தார்.

அரசியல் வாழ்க்கை தொகு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஐந்து முறை, 1977–1980, 1989-1991,1991-1992,1993-1995, 1996–2002, 2002–2007, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உ.பி சட்டப்பேரவைத் தலைவராக 1991–1993, 1997–2002 மற்றும் மே 2002 - மார்ச் 2004 காலங்களில் பொறுப்பாற்றியுள்ளார். 1977-1979இல் ஜனதா கட்சியின் உ.பி அமைச்சரவையில் நிறுவன நிதியம் மற்றும் விற்பனை வரி அமைச்சராகப் பணிபுரிந்துள்ளார். உ. பி. சட்டப்பேரவையின் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் மட்டுமே .[சான்று தேவை] சூலை 14, 2014 அன்று மேற்கு வங்காள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[2][3]

மற்றப் பணிகள் தொகு

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். எழுத்தாளரும் கவிஞருமான கேசரிநாத் பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றில் முதன்மையானவை 'மனோனுக்கிருதி' மற்றும் 'ஆயு பாங்க் என்ற கவிதைத் தொகுப்புகளாகும். தொழில்முறையாக மக்கள் பிரதிநிதிகள் சட்டம், 1951 குறித்த இவரது விளக்கவுரை பெரிதும் அறியப்பட்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் இந்திக் கவிஞர்களின் சம்மேளனங்களில் கலந்து கொள்கிறார்.

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசரிநாத்_திரிபாதி&oldid=3788906" இருந்து மீள்விக்கப்பட்டது