கேசவன்பாறை

கேரளத்தின் பாலக்காடு மாவட்டதில் உள்ள இடம்

கேசவன்பாறை (Kesavanpara) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய இடமாகும். [1] இது   நெம்மாரா கிராமத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

கேசவன்பாரா
town
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKL-
கீழே உள்ள நிலத்தின் பரந்த தோற்றம்

நிலவியல் தொகு

கேசவன்பாறை நெல்லியம்பதியிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சுற்றிலும் மலைகள் சூழ்ந்த அமைதியான இடமாகும். மேலும் இந்தப் பாறையில் இருந்து பார்க்கும்போது வனவிலங்கு உய்விடம் மற்றும் கீழேயுள்ள நிலத்தின் பரந்த காட்சியை காண இயலும். இது கைகாட்டிக்கு அருகில் உள்ளது.

வரலாறு தொகு

இப்பகுதியின் குளிர்ந்த காலநிலையை கருத்தில் கொண்டு, இங்கு தேயிலை மற்றும் காபி தோட்டங்களை முதலில் ஆங்கிலேயர்கள் தொடங்கினர். இவை பின்னர் பூர்வீக மக்களுக்கு விற்கப்பட்டன.

சேதர்கண்டு தொகு

இப்பகுதியில் உள்ள மற்றொரு பிரபலமான சுற்றுலா அம்சம் சீதர்கண்டு ஆகும். இராமாயண காவியத்தின் இராமர், இலட்சுமணன், சீதை ஆகியோர் தங்கள் வனவாசத்தின்போது இந்த இடத்தில் வசித்து வந்ததாகவும், சீதை ஒரு சிறிய ஓடையில் இருந்து தண்ணீருடன் வழிபாடு செய்ததாகவும் இப்பகுதியின் பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொகு

இங்குள்ள தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் உள்ளூர் மொழியில் 'பாடி' என்று அழைக்கப்படும் குடில்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். மணலாறு எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்காக ஒரு பள்ளி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

போக்குவரத்து தொகு

கேசவன் பறையானது பாலக்காடு நகரத்தின் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் போக்குவரத்தால் இணைக்கபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 544 கோயம்புத்தூர் மற்றும் பெங்களூருடன் இணைகிறது. கேரளத்தின் பிற பகுதிகள் திருச்சூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 66 வழியாக அணுகப்படுகின்றன. அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் ஷொர்ணூர் ஆகும். அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் வானூர்தி நிலையமாகும்.

குறிப்புகள் தொகு

  1. Vinod Mehta (2004). 100 holidays in the hills and 100 bonus hideaways. Outlook Publishing. பக். 412. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788190172462. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவன்பாறை&oldid=3032705" இலிருந்து மீள்விக்கப்பட்டது