கேன் யமன் (Can Yaman) (பிறப்பு: 8 நவம்பர் 1989) என்பவர் துருக்கிய நாட்டு நடிகர், வடிவழகர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு 'கோனல் இஸ்ரி' என்ற தொடரின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இனதினா அஸ்க் (2015), ஹாங்கிமிஸ் செவ்மெடிக் (2016),[1][2] டோலுனே (2017), எர்கென்சி குஸ் (2018-2019)[3] போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் துருக்கியில் மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார். இவர் 2018 ஆம் ஆண்டில் எர்கென்சி குஸ் என்ற தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கோல்டன் பட்டர்பிளை விருது பெற்றார்.

கேன் யமன்
பிறப்பு8 நவம்பர் 1989 (1989-11-08) (அகவை 34)
இசுதான்புல், துருக்கி
குடியுரிமைதுருக்கர்
பணிநடிகர், வடிவழகர், வழக்கறிஞர்
செயற்பாட்டுக்
காலம்
2014–இன்று வரை
வலைத்தளம்
http://www.canyaman.it

ஆரம்பகால வாழ்க்கை தொகு

யமன் 8 நவம்பர் 1989 இல் துருக்கி நாட்டில் இசுதான்புல்லில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தைவழி தாத்தா கொசோவோ-அல்பேனியன் வம்சாவளியை சேர்ந்தவர்[4][5][6] மற்றும் இவரது தந்தைவழி பாட்டி வடக்கு மாசிடோனியாவில் இருந்து அல்பேனியா நாட்டிற்கு குடியேறியவர் ஆவார். இவரது பெற்றோர்கள் இவரின் 5 வயதில் விவாகரத்து செய்து பிரிந்தனர்.[7] அதன் பிறகு பாட்டி யின் அரவணைப்பில் வளர்ந்தார். அதை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் யெடிடெப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையில் பட்டம் பெற்றார். இவர் கால்பந்து பயிற்சியாளர் ஃபுவட் யமானின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Rol arkadaşına bardak fırlatan Can Yaman'a ceza". T24. 29 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2020.
  2. "Selen Soyder'e bardak fırlatan Can Yaman'a ceza". www.ntv.com.tr. 29 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2020.
  3. "Erkenci Kuş Full HD izle | Star TV". startv.com.tr (in துருக்கிஷ்). பார்க்கப்பட்ட நாள் 18 December 2019.
  4. "Full english interview of Can and Demet". tekste (in Turkish and English). பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Can Yaman kimdir?". www.biyografi.info.
  6. "Can Yaman NTV Bayram Özel Reporpajı" (in tr). http://www.milliyet.com.tr/-genis-omuzlarim-yuzunden-rolu/pazar/haberdetay/02.11.2014/1963557/default.htm. 
  7. "Can Yaman". Hello Turkeye. 22 August 2018. 
  8. "Can Yaman tuttuğunu koparır". http://hayat.sozcu.com.tr/can-yaman-tuttugunu-koparir-68577/. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேன்_யமன்&oldid=3859713" இலிருந்து மீள்விக்கப்பட்டது