கேமாசந்த் யாதவ் பல்கலைக்கழகம்
கேமாசந்த் யாதவ் விசுவவித்யாலயா (Hemchand Yadav Vishwavidyalaya)அல்லது கேமாசந்த் யாதவ் பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் சத்தீசுகரில் உள்ள துர்க்கில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் துர்க் விசுவவித்யாலயா என்று அழைக்கப்பட்டது. ராய்ப்பூரில் உள்ள பண்டிட் ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகம் 2015-ல் பிரிக்கப்பட்ட பிறகு இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் 2018-ல் அரசியல்வாதியான கேம்சந்த் யாதவின் பெயரால் அழைக்கப்பட்டது.[1] இப்பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பு பலோட், பெமேதரா, துர்க், கபீர்தாம், மன்பூர் மோலா மற்றும் ராஜ்நந்த்கான் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிகளைக் கொண்டுள்ளது.
முந்தைய பெயர் | துர்க் வித்யாலயம் |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 2015 |
வேந்தர் | சட்டீஸ்கர் ஆளுநர் |
துணை வேந்தர் | அருணா பால்டா |
அமைவிடம் | , , 21°11′44″N 81°17′59″E / 21.1956083°N 81.2997669°E |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www |
அமைவிடம்
தொகுஇப்பல்கலைக்கழகம் ராய்பூர் நாகா, துர்க்கில் அமைந்துள்ள பெண்கள் முதுநிலை கல்லூரி கேமுசு கட்டிடத்தில் அமைந்துள்ள. ,[2]
துணைவேந்தர்
தொகுசத்தீசுகரின் ஆளுநர், 12 செப்டம்பர் 2019 அன்று ராய்ப்பூரில் உள்ள அரசு இராதாபாய் நவியன் பெண்கள் கல்லூரியின் முதல்வர் அருணா பால்டாவினைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமித்தார்.
இணைவுபெற்ற கல்லூரிகள்
தொகுஇப்பல்கலையின் ஆளுகையில் தற்பொழுது 143 இணைவுபெற்ற கல்லூரிகள் செயல்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ https://timesofindia.indiatimes.com/city/raipur/durg-university-to-be-renamed-after-ex-min-hem-chand-yadav/articleshow/63744390.cms
- ↑ "About". Archived from the original on 2022-02-28. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.