கே. அர்ஜுனன்

தமிழக அரசியல்வாதி

காட்டியண்ணன் அர்ஜுனன் (K. Arjunan, பிறப்பு: 22 செப்டம்பர் 1944) என்பவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1]

காட்டியண்ணன் அர்ஜுனன்
மக்களவை, உறுப்பினர்
பதவியில்
1980-1984
முன்னவர் வாழப்பாடி ராமமூர்த்தி
பின்வந்தவர் மு. தம்பிதுரை
தொகுதி தமிழ்நாடு, தர்மபுரி
தமிழக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989-1991
முன்னவர் எஸ். செம்மலை
பின்வந்தவர் ஆர் பழனிசாமி
தொகுதி தாரமங்கலம்
பதவியில்
1991-1996
முன்னவர் பி. வெங்கடாசலம்
பின்வந்தவர் எஸ். ஆறுமுகம்
தொகுதி வீரபாண்டி
தனிநபர் தகவல்
பிறப்பு 22 செப்டம்பர் 1944 (1944-09-22) (அகவை 76)
பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணம், சேலம் மாவட்டம் , மேட்டூர் வட்டம், எம். என். பட்டி
அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பிற அரசியல்
சார்புகள்
திராவிட முன்னேற்றக் கழகம்
படித்த கல்வி நிறுவனங்கள் இலயோலாக் கல்லூரி

அரசியல்தொகு

இவர் 1980 இல் தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து, திராவிட முனேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தின், மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பின்னர் இவர் அதிமுகவில் இணைந்தார்.[1]

அர்ஜுனன் 1989 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், தாரமங்கலம் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] அதற்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு வீரபாண்டி தொகுதியில் இருந்து, சட்டமன்றத்திற்கு அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] அதன்பிறகு தேமுதிகவில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தீபா பேரவையில் இணைந்தார். பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.[6]

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

அர்ஜுனன் 1944 செப்டம்பர் 22 அன்று சேலம் மாவட்டத்தின், மேட்டூர் வட்டம், எம். என் பட்டி கிராமத்தில் பிறந்தார். சென்னை இலயோலாக் கல்லூரியில், பி.எஸ்.சி பட்டம் பெற்றவர். இவர் 1969 நவம்பர் 24 இல் திருமணம் செய்து கொண்டார்.[7]

அர்ஜுனன் 1967 முதல் 1978 வரை காவல் உதவி ஆய்வாளராகவும், 1978 முதல் 1979 வரை காவல் துணை ஆய்வாளராகவும் பணியாற்றினார்.[7]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._அர்ஜுனன்&oldid=2994083" இருந்து மீள்விக்கப்பட்டது