கே. ஆர். பெரியகருப்பன்
கே. ஆர். பெரியகருப்பன் (K.R.Periyakaruppan) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழக இந்து அறநிலையத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் அமைச்சரும், தற்போதைய கூட்டுறவு அமைச்சருமாவார். இவர் அரளிக்கோட்டையில் 30-திசம்பர்-1959இல் பிறந்தவர். இளநிலை பட்டமாக வணிகம் மற்றும் சட்டம் படித்தவர்.[1] இவர் தமிழக சட்டமன்றத்திற்கு திருப்பத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து 2006ஆம் ஆண்டு தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2] பின்னர் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கபட்டார்.
கே. ஆர். பெரியகருப்பன் | |
---|---|
தமிழக சட்டமன்ற உறுப்பினர் | |
தொகுதி | திருப்பத்தூர் |
கூட்டுறவு ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம். வறுமை ஒழிப்பு திட்டங்கள். கிராமப்புற கடன்சுமை. | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 திசம்பர் 2022 | |
முதன்மை அமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
தமிழக ஊரகவளர்ச்சி அமைச்சர் | |
பதவியில் 07 மே 2021 – 13 திசம்பர் 2022 | |
முதன்மை அமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
தமிழக குடிசை மாற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் | |
முதன்மை அமைச்சர் | மு. கருணாநிதி |
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் | |
பதவியில் 21 மே 2006 – 16 மே 2011 | |
முதன்மை அமைச்சர் | மு. கருணாநிதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 30, 1959 அரளிக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | பிரேமா |
பிள்ளைகள் | பி. ஆர். கருத்தன் |
வாழிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | வழக்கறிஞர் |
தமிழக சட்டமன்றத்தேர்தல் 2021
தொகுதமிழக 16-ஆவது சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6, 2021 அன்று நடைபெற்ற தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு 103682 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதனையடுத்து 7 மே, 2021 அன்று பதவி ஏற்ற தமிழக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி (ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்) அமைச்சராகப் பதவியேற்றார்.[3]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) | |
---|---|---|---|---|---|
2021 | திருப்பத்தூர் | திமுக | 103682 | 49.19%[4] | |
2016 | திருப்பத்தூர் | திமுக | 110719 | 55.72[5] | |
2011 | திருப்பத்தூர் | திமுக | 83485 | 48.25[6] | |
2006 | திருப்பத்தூர் | திமுக | 48,128 | 44.85[7] |
மேற்கோள்கள்
தொகு- ↑ K. R. Periyakaruppan profile at TN government website
- ↑ 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
- ↑ "Tirupattur (Sivaganga) Election Result". Retrieved 2 Jul 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.