கே. இரவீந்திரநாதன் நாயர்

கே.ரவீந்திரநாதன் நாயர் (ஆங்கிலம்: K. Ravindranathan Nair) என்கிற அச்சாணி ரவி அல்லது பொதுவாக ரவி, இவர் ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரும், தொழிலதிபரும் மற்றும் கொடையாளருமாவார். காஞ்சனா சீதா, தம்பு, கும்மட்டி, எஸ்தப்பன், பொக்குவேயில், எலிப்பாத்தயம், மஞ்சு, முகமுகம், அனந்தரம் மற்றும் வித்யன் போன்ற பல விமர்சன ரீதியான பாராட்டப்பட்ட திரைப்படங்களுக்கு அவர் பிரபலமானவர். எழுபதுகளில் இருந்து தொண்ணூறுகள் வரையிலான காலகட்டத்தில் மலையாள சினிமாவில் கலைத் திரைப்பட இயக்கத்தை வளர்த்த பெருமைக்குரியவர் நாயர்.[1] பல தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பல மாநில திரைப்பட விருதுகளைப் பெற்ற நாயருக்கு மலையாள சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக 2008 ஆம் ஆண்டில் கேரள அரசு ஜே. சி. டேனியல் விருது வழங்கியது.[2][3]

ரவீந்திரநாதன் நாயர்

சுயசரிதை

தொகு

கே. ரவீந்திரன் நாயர் முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் கையாளும் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார்.[4] இலக்கியம் மற்றும் கலைகள் மீதான அவரது ஆர்வம் அவரை மலையாள சினிமாவுக்குள் கொண்டு வந்தது. 1967 ஆம் ஆண்டில், ஜெனரல் பிக்சர்ஸ் என்ற பெயரில் கீழ் அவர் திரைப்பட நிறுவனத்தை நிறுவினார். அதன் முதல் திரைப்படமான அன்வேசிச்சு கண்டேதில்லியா என்பதை பி. பாஸ்கரன் என்பவர் இயக்கியுள்ளார்..[5][6] இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு காட்டுக்குரங்கு மற்றும் லக்சபிரபு ஆகிய இரண்டு படங்கள் பாஸ்கரன் இயக்கி வெளிவந்தன. பொதுவாக அறியப்பட்டபடி, இரவீந்திரன் 1973 ஆம் ஆண்டில் அ. வின்சென்ட் இயக்கத்தில் தனது அடுத்த படமான அச்சானி திரைப்படம் வெளிவரும் வரை அடுத்த சில ஆண்டுகள் அமைதியாக இருந்தார். இத்திரைப்படம் அவருக்கு அச்சானி ரவி என்றப் பெயரைத் தந்தது. இந்த படம் அவரது முந்தைய படங்களைப் போலவே வணிகரீதியான வெற்றியைப் பெற்றதாகக் கூறப்பட்டது. மேலும் கொல்லத்தில் ஒரு பொது நூலகத்தை கட்டுவதற்காக ரவி திரைப்படத்தின் வருமானத்தை பங்களித்ததாக அறியப்படுகிறது,[7] அதில் அவர் ஒரு நிறுவனர் உறுப்பினர் மற்றும் கௌரரவ செயலாளருமாவார்.

1977 ஆம் ஆண்டு நாயரின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஜி. அரவிந்தனுடன் அந்த ஆண்டு வெளியான அவரது முதல் படமான காஞ்சனா சீதா வெளியானது. இதைத் தொடர்ந்து தம்பு (1978), கும்மட்டி (1979), எஸ்தப்பன் (1979) மற்றும் பொக்குவேயில் (1981) ஆகிய நான்குத்திரைப்படங்கள் அரவிந்தன் இயக்கத்தில் வெளிவந்தன .[5][6] அவர் தயாரித்த அடுத்த படம் எலிப்பாதயம் (1981), இத்திரைப்படத்தை அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, முகாமுகம்முகாமுகம் (1984), அனந்தரம் (1987) மற்றும் விதேயன் (1993) ஆகிய மூன்று படங்களும் அதே இயக்குனருடன் அடுத்த ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. இடையில், ஞானபீட விருது மற்றும் தேசியத் திரைப்பட விருது போன்ற விருத்களை வென்ற எம். டி. வாசுதேவன் நாயருக்காக மஞ்சு (1982) என்ற படத்தையும் தயாரித்தார்.

நாயர் மொத்தம் 14 படங்களைத் தயாரித்தார், அதற்காக அவர் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 18 விருதுகளைப் பெற்றார். ரவீந்திரன் நாயரின் மனைவி உஷா ரவி, தம்பு, அம்பல் பூவு மற்றும் துப்பறியும் 909 போன்ற திரைப்படங்களில் பாடல்களை பாடிய பின்னணி பாடகியாவார்.[8] நாயர் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளான பிரதாப், ப்ரீதா மற்றும் பிரகாஷ் ஆகியோரை விட்டுவிட்டு 2013 அக்டோபர் 2 அன்று உஷா இறந்தார்.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Mathrubhumi". Mathrubhumi. 2014. Archived from the original on 16 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  2. "The New Indian Express". The New Indian Express. 2009. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  3. "Filmibeat". Filmibeat. 2009. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  4. "Thiruvananthapuram First". Thiruvananthapuram First. 11 June 2014. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  5. 5.0 5.1 "The alchemist of Cinema". The Hindu. 19 June 2009. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  6. 6.0 6.1 "Kollam City". Kollam City. 2014. Archived from the original on 8 December 2014. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  7. "Achani". Achani. 25 May 2014. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  8. "Usha Ravi". Kaumudi. 3 October 2013. Archived from the original on 13 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._இரவீந்திரநாதன்_நாயர்&oldid=3929205" இலிருந்து மீள்விக்கப்பட்டது