கே. எம். செரியன் (மருத்துவர்)
கோட்டரத்து மம்மன் "கே.எம்" செரியன் (Kotturathu Mammen "K.M." Cherian) [1][2] (பிறப்பு:1942 மார்ச் 8) [3] இவர் ஓர் இந்திய இதய அறுவை சிகிச்சை நிபுணராவார். இந்தியாவின் முதல் கரோனரி தமனி புறவழி அறுவை சிகிச்சையை இவர் செய்தார். மேலும் நாட்டில் குழந்தை இதய அறுவை சிகிச்சையின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். இவர் இந்தியக் குடியரசுத்தலைவரின் முன்னாள் கௌரவ அறுவை சிகிச்சை நிபுணராவார். மேலும் பத்மசிறீ விருதையும் பெற்றுள்ளார்.
அறுவை சிகிச்சை நிபுணராக தொழில்
தொகுஇவர் மணிப்பாலில் மணிப்பால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் பயின்றார்.[4] இவர் 1975 இல், இந்தியாவின் முதல் கரோனரி தமனி புறவழி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.[5] இவர் பிரண்டையர் லைஃப்லைன் மருத்துவமனையின் நிறுவனர் ஆவார். அங்கு இவர் 1995 இல் இந்தியாவின் இரண்டாவது இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். நாட்டின் முதல் இதய நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, நாட்டின் முதல் குழந்தை இதய அறுவை சிகிச்சை ஆகியவற்றையும் இவர் 1975 இல் மேற்கொண்டார்.
விருதுகளும் கௌரவங்களும்
தொகு1991 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்திடமிருந்து இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[6][7] மேலும்,1990 முதல் 1993 வரை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு கௌரவ அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்தார்.[5]
செரியன், 2000 சூன் மாதத்தில், இந்தியாவில் இருதய அறுவை சிகிச்சை துறையில் செய்த பங்களிப்புகளுக்காக மணிப்பால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியிலிருந்து [8][9] வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.[10]
ஆர்வர்டு மருத்துவப் பள்ளி ஏற்பாடு செய்த குழு மூலம் 2005 ஆம் ஆண்டில் ஆர்வர்டு மருத்துவ சிறப்பு விருதைப் பெற்றார்.[11]
2008 ஏப்ரல் 30 முதல் மே 3 வரை நடைபெற்ற உலக கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் நடத்திய 18 வது உலக மாநாட்டின் நிகழ்வில், கிரேக்கத்தின் காசு தீவில் உள்ள கற்களில் ஒன்றில் அவரது பெயர் மற்ற மூன்று இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது.[12]
செரியன், 2010 ஆம் ஆண்டில், கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் உலக சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரானார்.
மே 2016 இல், அமெரிக்கன் தொராசிக் அறுவை சிகிச்சைக்கான சங்கத்தின் "நிறுவனர் வட்டத்தில்" உறுப்பினராக செரியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13]
சுயசரிதை
தொகுஹேன்ட் ஆஃப் காட் என்ற தலைப்பில் செரியன் பற்றிய வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டுள்ளது.[4]
குறிப்புகள்
தொகு- ↑ "Padama Awards: Previous Awardees". Padma Awards Ministry of Home Affairs. Archived from the original on 2 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ministry of Home Affairs (Public Section) Padma Awards Directory (1954-2017) Year-wise List: 1991" (PDF). Ministry of Home Affairs (India). Archived from the original (pdf) on 9 February 2018. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
- ↑ "A doc whose heart is in the right place". The News Today. 9 March 2006 இம் மூலத்தில் இருந்து 14 November 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061114075309/http://www.newstodaynet.com/09mar/rf12.htm.
- ↑ 4.0 4.1 "Dr Cherian releases his biography". September 30, 2015. https://timesofindia.indiatimes.com/city/chennai/Dr-Cherian-releases-his-biography/articleshow/49165414.cms.
- ↑ 5.0 5.1 Warrier, Shobha (8 March 2004). "Healing hearts". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
- ↑ "Padama Awards: Previous Awardees". Padma Awards Ministry of Home Affairs. Archived from the original on 2 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ministry of Home Affairs (Public Section) Padma Awards Directory (1954-2017) Year-wise List: 1991" (PDF). Ministry of Home Affairs (India). Archived from the original (pdf) on 9 February 2018. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
- ↑ "Alumni meet to witness reunion of 500 students". Times of India.
- ↑ Annual report of Manipal university has references to the Alumni get together with references to Dr Cherian https://apply.manipal.edu/content/dam/manipal/mu/documents/MU%20Annual%20Report/Annual%20Report%202016.pdf
- ↑ "Dr Cherian gets award for surgery". 14 June 2000. http://www.tribuneindia.com/2000/20000614/nation.htm.
- ↑ "7 doctors get Wockhardt awards". 9 February 2005. https://www.thehindubusinessline.com/todays-paper/tp-economy/7-doctors-get-Wockhardt-awards/article20266987.ece.
- ↑ Reddy, Amrutha. "World Society of Cardio Thoracic Surgeons 18th World Congress" (PDF). Indian Medical Parliamentarians' Forum. p. 8. Archived from the original (PDF) on 3 October 2011. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
- ↑ "The American Association For Thoracic Surgery (Aats) Admits Dr K M Cherianas Its Founder Circle Member". http://www.thehansindia.com/posts/index/NRI/2016-05-05/The-American-Assoication-For-Thoracic-Surgery-Aats-Admits-Dr-K-M-Cherianas-Its-Founder-Circle-Member/226320.
மேலும் படிக்க
தொகு- Menon, Priya M (2015). Hand of God. Narrated by K.M. Cherian. The Times Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-384-03864-9.
வெளி இணைப்புகள்
தொகு- Profile பரணிடப்பட்டது 2020-07-23 at the வந்தவழி இயந்திரம் on Frontier Lifeline Hospital official website
- Cherian, K.M. (8 October 2017). "I really worked hard: K.M Cherian". தி இந்து. Interviewed by Geeta Padmanabhan.October 2017 interview
- Cherian, K.M. (19 October 2010). "We are putting India on a different plane". Rediff.com. Interviewed by Shobha Warrier.October 2010 interview
- Cherian, K.M. (13 March 2014). Introduction by Suresh Rao. "Cultural, Ethical, and Humanitarian Affairs: an interview with Dr K.M. Cherian, MS, FRACS, Dsc, Cardiac Surgeon, Chairman and CEO, Frontier Lifeline Hospital, Chennai, India". Cardiology in the Young (Greenwich Medical Media) 24 (4): 701–713. August 2014. doi:10.1017/S1047951114000699. பன்னாட்டுத் தர தொடர் எண்:1047-9511. பப்மெட்:24809253.