கே. கே. அகர்வால்

இந்திய இதயநோய் நிபுணர்

கே. கே. அகர்வால் (K. K. Aggarwal) என்பவர் ஓர் இந்திய மருத்துவர் மற்றும் இருதயநோய் நிபுணராவார். கிருசன் குமார் அகர்வால் என்ற பெயராலும் இவர் அறியப்பட்டுகிறார். ஆசியா மற்றும் ஓசியானியா மருத்துவ சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவராக இவர் உள்ளார்.[1] இந்திய இருதய பாதுகாப்பு கழகத்தின் தலைவராகவும், இந்திய மருத்துவ கழகத்தின் தேசிய தலைவராகவும் பொறுப்பில் இருத்தார்.[2] 2010 ஆம் ஆண்டில் மருத்துவ சேவைகளை பாராட்டும் விதமாக இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது[3]

கிருசன் குமார் அகர்வால்
Krishan Kumar Aggarwal
பிறப்பு5 செப்டம்பர் 1958 (1958-09-05) (அகவை 65)
புது தில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்கே.கே. அகர்வால், கிருசன், கே.கே
பணிமருத்துவர் மற்றும் இருதயநோய் நிபுணர்
பெற்றோர்கிமட் ராய் அகர்வால், சதயவதி அகர்வால்
வாழ்க்கைத்
துணை
வீணா அகர்வால் Veena Aggarwal
பிள்ளைகள்நிலேசு அகர்வால்,நைனா அகர்வால்
விருதுகள்பத்மசிறீ
மரு. பி. சி. ராய் விருது
தேசிய அறிவியல் தொடர்பு விருது
விச்னு இந்தி சம்மன் விருது
உடல் நலக் காப்பாளர் விருது
டி எசு முங்கேகர் தேசிய ஐ.எம்.ஏ. விருது
வலைத்தளம்
www.kkaggarwal.com

வாழ்க்கை தொகு

அகர்வால் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் 1979 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ பட்டமும்[4] இதே பல்கலைக்கழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் பட்டத்தையும் பெற்றார். [5] இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் அமைந்துள்ள மூல்சந்து மெட்சிட்டி மருத்துவமனையில் மூத்த மருத்துவ ஆலோசகராக 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். [6]

அல்லோவேதா என்ற நூல் உட்பட சுகாதரம் தொடர்பான நூல்கள் பலவற்றை கே.கே அகர்வால் வெளியிட்டுள்ளார். எதிரொலி இதயத்துடிப்பு வரைவி பாடப் புத்தகத்தில் 6 அத்தியாயங்களை இவர் எழுதியுள்ளார். தேசிய மற்றும் பன்னாட்டு இதழ்களில் ஆயிரக்கணக்கான மருத்துவக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். [4][5] மாரடைப்பு நோய்க்கு சிகிச்சையாக இரத்த நாள அடைப்பு சிகிச்சை முறையை கைகொண்ட இந்திய முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இந்தியாவில் வண்ண டாப்ளர் எதிரொலி இதயத்துடிப்பு வரைவி நுட்பத்தையும் இவரே அறிமுகப்படுத்தினார்.[5] இந்தியாவில் மருத்துவ பிரிவுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பிதான் சந்திரா ராய் விருதை 2005 ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கழகம் கே.கே. அகர்வாலுக்கு வழங்கியது[4][5][7]. விசுவ இந்தி சம்மன் விருது, தேசிய அறிவியல் தொடர்பு விருது, இந்திய வணிகம் மற்றும் தொழிற்சாலை கூட்டமைப்பு சார்பாக வழங்கப்படும் உடல் நலம் காக்கும் மருத்துவர் என்ற விருது, டாக்டர் டி எசு முங்கேகர் தேசிய ஐ.எம்.ஏ. விருது[7] மற்றும் ராசீவ் காந்தி சிறப்பு விருது போன்ற பல்வேறு விருதுகளைப் இவர் பெற்றுள்ளார்.[7] 2010 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசீறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவராகவும் கே.கே இருந்துள்ளார்.[8] பன்னாட்டு குழந்தை மருத்துவ அறிவியல் இதழின் முதன்மை பதிப்பாளர் பொறுப்பிலும் இவர் இருந்துள்ளார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. "Dr K K Aggarwal sworn in as the President of CMAAO". www.biospectrumindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  2. "Interview". Sarkari Mirror. 2014. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.
  3. "Padma 2010". Press Information Bureau, Government of India. 25 January 2010. பார்க்கப்பட்ட நாள் 7 November 2014.
  4. 4.0 4.1 4.2 "Heart Care Foundation". Heart Care Foundation. 2014. Archived from the original on 9 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.
  5. 5.0 5.1 5.2 5.3 "Moolchand". Moolchand. 2014. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.
  6. "Hindustan Times". Hindustan Times. 5 January 2005. Archived from the original on 9 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. 7.0 7.1 7.2 "E Medi News". E Medi News. 9 November 2014. Archived from the original on 9 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.
  8. "Economic Times". Economic Times. 2 September 2014. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.
  9. "IJCP". IJCP. 2014. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.

புற இணைப்புகள் தொகு

  • "Interview". Sarkari Mirror. 2014. பார்க்கப்பட்ட நாள் 9 November 2014.

.


.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._அகர்வால்&oldid=3551260" இலிருந்து மீள்விக்கப்பட்டது