கே. கே. வீரப்பன்

இந்திய அரசியல்வாதி

கே. கே. வீரப்பன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு தேர்தலில், கபிலர்மலை தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

நாமக்கல் எஸ். பி. புதூரைச் சேர்ந்தவரான கே. கே. வீரப்பன் 1993-2001 காலகட்டத்தில் திமுக மாவட்ட செயலாளராக இருந்தார். 1980 இல் திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு தேர்தலில், கபிலர்மலை தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக பதவி வகித்தார். 2001 தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பை தி.மு.க. அளிக்கவில்லை. பின்னர் கட்சியின் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவரை இடைநீக்கம் செய்தனர்.[2] இதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து அக்கட்சியில் நாமக்கல் மாவட்ட காங்கிரசு தலைவராக இருந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கபட்டிருந்த வீரப்பன் 2022 சூன் 15 அன்று தன் 77வது வயதில் இறந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. Subramanian, T. S. (25 May 2001). "A fierce fight". Frontline. http://www.frontline.in/static/html/fl1810/18100160.htm. பார்த்த நாள்: 2017-05-18. 
  3. Kan, Arsath (2022-06-15). "நாமக்கல் கே.கே.வீரப்பன் காலமானார்! சகலவிதமான பதவிகளையும் பார்த்தவர்! 2 கட்சிகளில் ஜொலித்தவர்!". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._வீரப்பன்&oldid=3479892" இலிருந்து மீள்விக்கப்பட்டது