கே. டி. பாண்டுரங்கி
பேராசிரியர்.கே.டி.பாண்டுரங்கி (Krishnacharya Tamanacharya Pandurangi) (1918 பிப்ரவரி 1 - 2017 ஏப்ரல் 22) மேலும் விசுவமங்களா என அறியப்படும் இவர் ஒரு இந்திய சமசுகிருத அறிஞரும், ஒரு குறிப்பிடத்தக்க இந்தியவியலாளருமாவார். சமகால சமசுகிருத அறிஞர்களிடையே இவர் தனித்துவமானவர். பாரம்பரிய மற்றும் நவீன கல்வி முறைகளில் ஒரே நேரத்தில் அறிஞராக இருந்தார். 1989 ஆம் ஆண்டில், இலக்கியம் மற்றும் ஆராய்ச்சிக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு இவருக்கு குடியரசுத்தலைவர் விருதை வழங்கியது. [1]
முழுப் பெயர் | கிருஷ்ணாச்சார்யா தமனாச்சாரிய பாண்டுரங்கி |
---|---|
பிறப்பு | தார்வாடு, கருநாடகம் | பெப்ரவரி 1, 1918
இறப்பு | ஏப்ரல் 22, 2017 பெங்களூர், கருநாடகம் | (அகவை 99)
பிரதான விருப்பு | வேதாந்தம், இந்து மெய்யியல் |
இவரது மாணவர்களில் புகழ்பெற்ற சமசுகிருத அறிஞர்கள் டி.பிரகலதாச்சார், முன்னாள் துணைவேந்தர், ராஷ்டிரிய சமசுகிருத வித்யபீடம், திருப்பதி ; வி.ஆர்.பஞ்சமுகி, இந்திய பொருளாதார நிபுணர் ; வியாசநகரே பிரபஞ்சநாச்சார்யார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். [1]
சுயசரிதை
தொகுகிருஷ்ணாச்சார்யா 1918 பிப்ரவரி 1 ஆம் தேதி கர்நாடகாவின் தார்வாட்டில் தமநாச்சார்யர் பாண்டுரங்கி மற்றும் லட்சுமி பாய் ஆகியோருக்கு சமசுகிருத அறிஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். குடும்பத்தின் பொருளாதார நிலைமைகள் காரணமாக, இவர் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே முடிக்க முடிந்தது. இவரால் உயர்நிலைப் பள்ளியில் படிக்க முடியவில்லை. பின்னர் தார்வாட்டில் உள்ள சங்கராச்சாரியார் பாடசாலையில் சமசுகிருதம் பயின்றார். இவரது உயர்கல்வி தர்வாட் முதல் சாங்லி பாடசாலை வரை; சாங்லியில் இருந்து மைசூர் பாடசாலை மற்றும் பல பாடசாலைகளில் இருந்தது. 1936 இல் தனது 18 வயதில் மைசூர் சென்றார். நான்கு ஆண்டுகளுக்குள் இவர் அங்கு நியாயம் மற்றும் வேதாந்தப் படிப்பை முடித்தார். [1] பாடசாலைகளிலிருந்தது, தாராபுரம் கிருஷ்ணமூர்த்தி ஆச்சார்யரின் கீழ் நியாய சாத்திரத்தைக் கற்றுக்கொண்டார். மற்ற நேரங்களில் அதே ஆச்சார்யரின் இல்லத்திற்குச் சென்று வீட்டில் வேதாந்தத்தைக் கற்றுக்கொண்டார். காசிபிரனேசா ஆச்சார்யர், சதுர்வேதி ராமச்சந்திராச்சார்யர், தோடபல்லாபூர் வாசுதேவாச்சார்யர், நெரூர் கிருஷ்ணாச்சார்யர், ஆர்திகொப்பம் சுப்பிரமணிய சாத்திரி, சென்ன கேசவ சாத்திரி மற்றும் பிற அறிஞர்களின் கீழ் இவர் இந்த வகையான இரட்டை ஆய்வுகளைப் பயின்றார். 1940 ஆம் ஆண்டில், தனது 22 வயதில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழை மொழியியல் துறையிலும் , மைசூர் மகாராஜா கல்லூரியிலும் சேர்ந்தார். அங்கு முனைவர் பி.என்.கே சர்மா போன்ற புகழ்பெற்ற அறிஞர்களின் கீழ் பூர்வ மீமாஞ்சம் படித்தார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களையும் பெற்றுள்ளார். [2]
தொழில்
தொகுபேராசிரியர். பாண்டுரங்கி தார்வாடின் கர்நாடகக் கல்லூரியிலும், பெங்களூரு அரசுக் கல்லூரியில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலை சமசுகிருதத் துறையின் தலைவராக சேர்ந்தார். [2]
இவர் 'ராஷ்டிரிய சமசுகிருத சமஸ்தான்' மற்றும் 'மத்திய சமசுகிருத வாரியத்தில்' உறுப்பினராக இருந்தார். இந்திய தத்துவ ஆராய்ச்சி அமைப்பின் மூத்த உறுப்பினராக இருந்த இவர் பெங்களூரில் உள்ள புராண சங்கத்தின் தலைவராக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பூர்ணபிரஜ்னா வித்யாபீடத்தின் குலபதியாகவும், பெங்களூரில் உள்ள துவைத வேதாந்த அறக்கட்டளையின் கௌரவ இயக்குநராகவும் பணியாற்றினார். [3] [4] [5] இவர், ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று பூர்வ மீமாஞ்சம் பற்றியும், வேதாந்தம் குறித்தும் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பிரகாரண பஞ்சிகா, இராமாயணம், உத்தர ராமச்சரிதம், பஞ்சபதிகா, அனு வியாக்யானம், பாணினியின்அட்டாத்தியாயி, விஷ்ணு தத்வ நிர்வாணம், கர்மா நிர்வாணம் மற்றும் துவைத வேதாந்தத்தின் பிற தலைப்புகளில் இந்தியாவுக்கு வந்த பல வெளிநாட்டு அறிஞர்களுக்கும் அவர் வழிகாட்டினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Śaśiprabhā Kumāra (January 2007). Veda as word. Indian Council of Philosophical Research, Jawaharlal Nehru University. p. 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788124603765. பார்க்கப்பட்ட நாள் 1 January 2007.
- ↑ 2.0 2.1 "Sanskrit scholar K. T. Pandurangi dies at 99". Times of India. https://www.timesofindia.com/city/bengaluru/sanskrit-scholar-kt-pandurangi-dies-at-99/articleshow/58320721.cms. பார்த்த நாள்: 24 April 2017.
- ↑ Pride of India: A Glimpse Into India's Scientific Heritage. SAMSKRITA BHARATI. 2006. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187276272.
- ↑ Sanskrit Studies in India: On the Occasion of 10th World Sanskrit Conference, Bangalore, Jan 3-9, 1997. Rashtriya Sanskrit Sansthan. 1997. p. 158.
- ↑ Journal of Oriental Research, Madras, Volumes 47-55. Kuppuswami Sastri Research Institute, Mylapore. 1989. p. xviii.
மேலும் படிக்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- K. T. Pandurangi at Karnataka Samskrita University
- K. T. Pandurangi at National Library of Australia
- K. T. Pandurangi at Archive.org
- K. T. Pandurangi at Library of Congress
- K. T. Pandurangi at Oxford Centre for Hindu Studies Library