கைலாஷோ தேவி சைனி

இந்திய அரசியல்வாதி

கைலாஷோ தேவி சைனி (Kailasho Devi Saini) (பிறப்பு:4 ஏப்ரல் 1962) ஓர் அரசியல்வாதியும் சமூக சேவகருமாவார். இவர் இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள குருச்சேத்திரம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

கைலாஷோ தேவி சைனி
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிகுருச்சேத்திரம் (மக்களவைத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு( 1962-04-04)4 ஏப்ரல் 1962
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஓம் நாத் சைனி
தொழில்விவசாயி, அரசியல்வாதி, சமூகசேவகர், ஆசிரியர், வர்த்தகர்
இணையத்தளம்kailashosaini.com

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் தொகு

கைலாஷோ, குருச்சேத்திரம் மாவட்டத்தின் பிரதாப்கரில் பிறந்தார். இவர் ஓம் நாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். கைலாஷோ உடற்கல்வி மற்றும் வரலாற்றில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.[1]

தொழில் தொகு

அரியானாவிலுள்ள யமுனா நகர், குருச்சேத்திரம், கைத்தல் மாவட்டங்களில் உள்ள சாமானியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க கைலாஷோ செயல்பட்டு வருகிறார். மாணவப் பருவத்தில் கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக இவர் பல விருதுகளை வென்றுள்ளார் .[1]

ஆர்வங்கள் தொகு

கைலாஷோவின் ஆர்வத்தில் இசை கேட்பது, தியானம் செய்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை அடங்கும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாஷோ_தேவி_சைனி&oldid=3890479" இலிருந்து மீள்விக்கப்பட்டது