கொங்குச்சோழர்

கொங்குச்சோழர் என்போர் கி.பி. 942 முதல் 1305 வரை கொங்கு பகுதிகளை ஆண்ட சோழ பரம்பரையினர் ஆவர். கி.பி. 942 முதல் கி.பி. 1138 வரை வடகொங்கினையும் கி.பி. 1138 முதல் 1305 வரை வடதென்கொங்கு பகுதிகளை சேர்த்தும் ஆண்டனர்.[1]

கொங்குச்சோழர் பட்டியல்தொகு

கி.பி. 942 முதல் பதினைந்து கொங்குச்சோழ அரசர்கள் கொங்குப்பகுதியை ஆண்டுள்ளனர். அவர்களின் பட்டியல் கீழே.[2]

எண் பெயர் ஆட்சியாண்டுகள் (கி.பி.) செயல்கள்
1 வீரச்சோழப்பராந்தகன் 942 - 980
2 கலிமூர்க்கப்பெருமான் 980 - 1004 முன்னவனின் மகன். பிரம்மியம், கொடுவாய் போன்ற கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன.
3 கலிமூர்க்க விக்ரமச்சோழன் 1004 - 1047
4 அபிமானச்சோழன் 1047 - 1085 அன்னூர் கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன.
5 ராஜாதிராஜ சோழன் 1085 - 1110 திருமுருகன்பூண்டி கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன.
6 உத்தமச்சோழன் 1110 - 1117 இருகூர் செப்பேடுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. ராஜாதிராஜ சோழனின் முதல் மகன்.
7 ராஜாதிராஜ வீரச்சோழன் 1118 - 1127 கத்தாங்கண்ணி, விஜயமங்கலம் கோயில்களுக்கு கொடை அளித்துள்ளான். ராஜாதிராஜ சோழனின் இரண்டாம் மகன்.
8 ராஜகேசரி வீரநாராயணன் 1127 - 1149 உத்தமச்சோழனின் மகன். கோயில்பாளையம், பெருந்தலையூர் கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன.
9 ராஜகேசரி குலோத்துங்கன் 1149 - 1183 பாண்டியர்களுக்கு இடையில் நடந்த தாயாதிச்சண்டையில் தலையிட்டு குலசேகர பாண்டியனை ஆட்சியில் அமர்த்தினான்.
10 திரிபுவன வீரத்தேவன் 1183 - 1196 இருகொங்கையும் சேர்த்து முதலில் ஆண்ட கொங்குச்சோழன் இவன் ஆவான். இதற்கு முன்னர் தென்கொங்கை ஆண்ட வீரகேரளனின் மருமகன்.
11 இரண்டாம் குலோத்துங்கன் 1196 - 1207 அன்னூர், அவிநாசி கல்வெட்டுகளில் இவனின் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன.
12 வீரராஜேந்திரன் 1207 - 1256 சமயப்பொறை கொண்டவனாக கல்வெட்டுகள் சொல்கின்றன.
13 இரண்டாம் விக்ரமச்சோழன் 1256 - 1264
14 சோழன் ராஜகேசரி 1264 - 1274
15 மூன்றாம் விக்ரமச்சோழன் 1274 - 1304

மேற்கோள்கள்தொகு

  1. "The Vanavarayar Foundation Monthly Lecture Series - 50, 29 August, 2016". {{{booktitle}}}, Vanavarayar Foundation. 26 சூலை 2017 அன்று அணுகப்பட்டது..
  2. GRACE ELIZABETH (1997). HISTORY OF THE KONGU CHOLAS FROM 10TH TO 13TH CENTURY A.D.. GOVERNMENT ARTS COLLEGE COIMBATORE. பக். 31 - 62. http://shodhganga.inflibnet.ac.in/handle/10603/102389. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்குச்சோழர்&oldid=2557399" இருந்து மீள்விக்கப்பட்டது