கொடி நாள் (இந்தியா)
கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.[1] , [2].
தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.flagday.tn.gov.in/
- ↑ http://www.indiacelebrating.com/events/armed-forces-flag-day/
- ↑ Kendriya Sainik Board Website பரணிடப்பட்டது 2006-10-21 at the வந்தவழி இயந்திரம் accessed November 1, 2006.
வெளி இணைப்புகள்
தொகு- *Armed Forces Flag Day
- *[1] Armed Forces Flag Day Fund Collection