கொடுந்தமிழ்
தமிழ் மொழி சீர்தரப்படுத்தப்பட்ட செந்தமிழில் இருந்தோ அல்லது பொதுத்தமிழ் வழக்கில் இருந்தோ சற்று வேறுபட்டு பேசப்படும் பொழுதோ அல்லது எழுதப்படும் பொழுதோ கொடுந்தமிழ் என அழைக்கப்படும். கொடுந்தமிழ் எனும் பெயர், ஒரு மரபுச் சொல் வழக்கேயன்றி மொழியின் உயர்வு தாழ்வினைச் சுட்ட இடப்பட்ட பெயரல்ல. பழந்தமிழ் இலக்கியங்களில் கொடுந்தமிழ், மொழியை மட்டுமல்லாமல், அது பேசப்பட்ட நிலத்தையும் குறித்து நின்றது. "பொதுமொழி வேரூன்றியிருந்த நாட்டை செந்தமிழ் நிலம் என்றும், அதிலிருந்து வேறுபட்டுக் கிளைமொழிகள் செழித்திருந்த தமிழ்நாட்டுப் பகுதிகளைக் கொடுந்தமிழ் நிலம் என்றும் பழங்காலத்துப்புலவர் பாகுபாடு செய்தனர் எனக் கொள்ளலாம்." [1]
கொடுந்தமிழ் பிற மொழி கலப்பினால் களங்கம் கண்ட தமிங்கிலம் போன்ற தமிழ் வழக்குகளை சுட்டப் பயன்படுத்தப்படுவதில்லை.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ மு. வரதராசன். (1954). மொழி வரலாறு. சென்னை: கழக வெளியீடு. பக்: 162-163.