கொடைக்கானல் கிருத்துவக் கல்லூரி
கொடைக்கானல் கிருத்துவக் கல்லூரி (Kodaikanal Christian College (KCC) என்பது தமிழ்நாட்டின். கொடைக்கானலில் உள்ள தனியார், சுயநிதி கல்லூரி ஆகும்.[1] இது 1994 அக்டோபர் நிறுவப்பட்டது. இதுவே கொடைக்கானலில் துவக்கப்பட்ட முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இது டாக்டர் சாமுவேல் ஆபிரகாம் தலைமையின் கீழ் இயங்கும் ஹவுஸ் ஆப்ரஹாம்ஸ் என்ற அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்டது.
குறிக்கோளுரை | Born to Lead |
---|---|
வகை | தனியார், சுயநிதி |
உருவாக்கம் | 1994 |
சார்பு | கிருத்துவம் |
தலைவர் | முணைவர் சாமுவேல் ஆப்ரகாம் |
Provost | இம்மானுவேல் பாபு |
முதல்வர் | முணைவர் சாமுவேல் ஆப்ரகாம் |
பணிப்பாளர் | திரு. ஸ்டான்லி தாமஸ் |
அமைவிடம் | , , |
வளாகம் | மலைப் பகுதி, 30 ஏக்கர் |
நிறங்கள் | சிவப்பு, நீலம், வெள்ளை |
சேர்ப்பு | மதுரை காமராசர் பல்கலைக் கழகம் |
இணையதளம் | http://www.kcc.edu.in/ |
இந்தக் கல்லூரிக்கு பிரிவு 12 (பீ) கீழ் பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசால் கிருத்துவ சிறுபான்மை நிறுவனம் என்னும் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இக்கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைந்துள்ள ஒரு சுயநிதி கல்வி நிறுவனமாகும்.
கல்லூரியில் எட்டு இளங்கலைப் பட்டப்படிப்புகளையும், இரண்டு முதுகலைப் படிப்புகளையும் வழங்குகிறது. கல்லூரியில் ஏழு துறைகள் உள்ளன;
- ஓட்டல் மேலாண்மை துறை
- மேலாண்மை கல்வித் துறை
- வணிகவியல் துறை
- கணிணி அறிவியல், தகவல் தொழில்நுட்பத்துறை
- பொருளியல் துறை
- சமூகப் பணித் துறை
- வெளிநாட்டு வணிகத் துறை
- ஆங்கிலத் துறை
வளாகம்
தொகுகல்லூரி கடல் மட்டத்தில் இருந்து 7,000 அடி (2,100 மீ) மேலே அமைந்துள்ள பாரடைசு மலைப்பகுதியில் 30 ஏக்கர் (120,000 மீ 2) பரவியுள்ளது. வளாகம், கல்வி நிர்வாக, பொழுதுபோக்கு மற்றும் குடியிருப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "விளையாட்டு வீரர்களுக்குப் பாராட்டு". செய்தி. தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)