இசுதான்புல்

(கொன்சாந்தினோபில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இஸ்தான்புல், துருக்கியில் உள்ள நகரங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட நகரமாகும். அந்நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதாரத் தலைநகரமும் இதுவேயாகும். துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகின்றது. உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் பெயரால் பழங்காலத்தில் இது, கான்ஸ்டண்டினோப்பிள் என அழைக்கப்பட்டது. 41° வ 28° கி இல் பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம், தங்கக் கொம்பு (Golden Horn) என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இந்நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. உலக வரலாற்றில், மூன்று பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. கி.பி 330 - 395 வரை ரோமப் பேரரசின் தலைநகரமாகவும், 395 - 1453 வரை பைசண்டைன் பேரரசின் தலைநகராகவும், 1453 - 1923 வரை ஓட்டோமான் பேரரசின் தலைநகரமாகவும் இது விளங்கியது. 1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, தலைநகரம், இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. ஐரோப்பாவில், மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் இதுவே ஆகும்.

இசுதான்புல்
İstanbul
பெருநகர நகராட்சி
இசுதான்புல் பெருநகர நகராட்சி
விளக்கத்தைப் பார்க்கவும்
மேலிருந்து வலஞ்சுழியாக:
கலட்டாவிற்கும் செரக்லியோ முனைக்கும்
நடுவில் உள்ள தங்க ஹோர்ன்; மசுலாக் நிதியியல் மாவட்டம்;
இசுடிக்லல் அவெனியூ;
குலேலி இராணுவ உயர்நிலைப் பாடசாலை;
மற்றும் சுல்தான் அஹமட் பள்ளிவாசல்
நாடுதுருக்கி
பகுதிமர்மரா
மாகாணம்இசுதான்புல்
 - பைசாந்தியம்கி.மு. 660
 - கொன்ஸ்தாந்திநோபிள்கி.பி. 330
 - இசுதான்புல்1930 (உத்தியோகபூர்வமாக)
மாவட்டங்கள்39
அரசு
 • மேயர்கதிர் தொப்பாசு (ஏ.கே.பி)
பரப்பளவு
 • மாநகரம்5,343 km2 (2,063 sq mi)
மக்கள்தொகை
 (2013)
 • பெருநகர நகராட்சி1,41,60,467
 • தரவரிசைதுருக்கியில் 1 ஆவது, உலகில் 5 ஆவது
 • அடர்த்தி2,725/km2 (7,060/sq mi)
இனங்கள்இசுதான்புலைட்டு(கள்)
(துருக்கியம்: இசுதான்புல்லு(லார்))
நேர வலயம்ஒசநே+2 (EET)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (EEST)
அஞ்சல் குறியீடு
34000 இல் இருந்து 34850 வரை
இடக் குறியீடு(கள்)0212 (ஐரோப்பியப் பக்கம்)
0216 (ஆசியப் பக்கம்)தொலைபேசிக் குறியீடு
வாகனப் பதிவு34
இணையதளம்இசுதான்புல் பெருநகர நகராட்சி

பெயர் வரலாறு

தொகு

இந்நகரின் முதலாவது அறியப்பட்ட பெயர் பைசாந்தியம் (கிரேக்க மொழி: Βυζάντιον, Byzántion) ஆகும். இது இந்நகர் நிறுவப்பட்டபோது மெகரியன் காலனியவாதிகளால் கி.மு. 660 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொடுக்கப்பட்ட பெயராகும்.

வரலாறு

தொகு
  • கி.மு.660 இல் பைசாண்டியத்தின் என்னும் பெயரில் சரய்புர்ன் கடலோரத்தில் இது நிறுவப்பட்டது

இப்போது இஸ்தான்புல் என்று அழைக்கப்படும் நகரம் வரலாற்றில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக உருவாகி. * கி.பி. 330 இல் கான்ஸ்டான்டினோபிள் பெயர் மாற்றம் அடைந்தது அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பதினாறு நூற்றாண்டுகளாக நான்கு பேரரசர்களின் தலைநகராக இது இருந்தது.அவை ரோமானியப் பேரரசு (330-395), பைசண்டைன் பேரரசு (395-1204 மற்றும் 1261-1453), இலத்தீன் பேரரசு (1204 - 1261), மற்றும் ஒட்டோமான் பேரரசு (1453-1922).

  • ரோமன் மற்றும் பைசண்டைன் காலத்தில் கிறித்துவ நகரமாக இருந்தது ஆனால் 1453 ல் ஓட்டோமங்களின் வெற்றிக்குப் பின் கலிப என்ற இஸ்லாமியக் கோட்டை நிறுவப்பட்டது. அந்தக் காலத்தின் அரண்மனைகள் மற்றும் மசூதிகள் இன்றும் இஸ்தான்புல் மலைகளில் காணப்படுகின்றன.
  • இஸ்தான்புல் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளை இணைக்கும் வழியில் உள்ளதால் இது பட்டு அதை என அழைக்கப்படுகிறது.
  • 1923 ல் துருக்கி குடியரசான பின் தலைநகர் இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
  • 1930 ல் அதிகாரபூர்வமாக இஸ்தான்புல் என்று பெயர் மாற்றப்பட்டது

நிலஅமைப்பு

தொகு

இஸ்தான்புல் மொத்தம் 5.343 சதுர கிலோமீட்டர் (2,063 சதுர மைல்) பரப்பளவுடன் மர்மரா பகுதியின் வடமேற்குப் பகுதியில் துருக்கியில் அமைந்துள்ளது. கருங்கடல் மற்றும் மர்மரா கடலில் இணைக்கும் போச்போருஸ் கடல்மூலம் ஐரோப்பிய மற்றும் ஆசியப் பகுதிகளைப் பிரிக்கின்றது வளைகுடாப் பகுதியில் ஒரு தங்கக் கொம்பு இயற்கைத் துறைமுகம் அமைந்தது. மேலும் இது மற்ற பகுதியில் மலையால் சூழப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிரிப் படைகளின் தாக்குதல்களைத் தடுத்தன.

ரோம் நகரைப் போல இந்நகரத்தைச் சுற்றி ஏழு மலைகள் உள்ளன.இந்த மலைகளில் கிழக்கு சரய்புர்ன் மலையின் மீது டொபாக் அரண்மனைத் தளம் உள்ளது.[1] மற்றொரு கூம்பு வடிவ ரைசிங் மலை தங்க கொம்பு துறைமுகத்தின் எதிர்ப்பக்கத்தில் தனியே அமைந்துள்ளது. இசுதான்புலின் அதிக உயரத்தில் உள்ள பகுதி 288 மீட்டர் (945 அடி) உயரத்தில் கொண்டு கமலிக்க மலைமீது உள்ளது.[2] இசுதான்புல் ஆப்பிரிக்க மற்றும் யூரோசியன் தட்டுக்கு இடையே வடக்கு அனடோலிய பிளவின் எல்லை அருகே அமைந்துள்ளது. வடக்கு அனடூலியா இருந்து மர்மரா கடலின் பூகம்ப மண்டலத்தால் நகரில் பல சமயம் பல பயங்கர பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 1509-ல் நில அதிர்வுகளால் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டு 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. 1999 இல் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தினால் இஸ்தான்புல் புறநகர்ப் பகுதியில் 1,000 பேர் உட்பட மொத்தம் 18,000 பேர் இறந்துள்ளனர். நிலநடுக்க இயல் வல்லுநர்கள் 2030 ல் 7.6 ரிக்டர் அளவில் பூகம்ப ஆபத்து ஏற்பட 60 சதவீத வைப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.[3][4]

காலநிலை

தொகு
 
லெவென்ட் பகுதியில் சூழ்ந்திருக்கும் மூடுபனி, அடிக்கடி காலைவேளைகளில் ஏற்படுகின்றது.

புதுப்பிக்கப்பட்ட கோப்பென்-கைகர் வகைப்பாட்டு அமைப்பின் படி, இடைநிலை காலநிலை மண்டலத்தில் இசுதான்புல் அமைந்திருப்பதால் இசுதான்புல்லில் ஒரு மத்தியதரைக்கடல் எல்லைக்கோட்டு காலநிலை (Csa) மற்றும் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை (Cfa) மற்றும் கடல்சார் காலநிலை (Cfb) என்பன நிலவுகின்றன. கோடை மாதங்களில் மழைவீழ்ச்சியானது அதன் அமைவிடத்திற்கு ஏற்றவகையில் 20-65 மில்லிமீற்றர் வரை வேறுபடுவதாகக் காணப்படும். ஆகவே நகரம் முழுவதும் மத்திய தரைக்கடல் அல்லது ஈரப்பதமான மித வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டதாக வகைப்படுத்த முடியாது.[5][6][7] அதன் பரந்த அளவு, பல்வேறு நில மற்றும் கடல் அமைப்பு காரணமாக, இஸ்தான்புல் நுணுக்கமான காலநிலை வேறுபாடுகளைக் கொண்டிருகின்றது. அத்துடன் கடற்கரைகள் வடக்கிலும் தெற்கிலும் இரு வேறுபட்ட நீர்நிலைக்களுக்கு உரியனவாகக் காணப்படுகின்றன. கருங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள வடக்கு பகுதிகளிலும், பொசுபோரசு கடற்கரைப் பகுதியிலும் கருங்கடலில் இருந்துவரும் உயர் ஈரப்பதச் செறிவு மற்றும் உயர் அடர்த்தி மிக்க தாவரங்கள் என்பவற்றின் காரணமாகக் கடல்சார்ந்த மற்றும் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை நிலவுகின்றது. மர்மரா கடலருகில் தெற்கில் உள்ள அதிகமாக மக்கள் வாழும் பகுதிகளில் ஈரப்பதம் குறைந்த வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலை நிலவுகின்றது. வட அரைப் பகுதியில் காணப்படும் வருடாந்த மழைவீழ்ச்சியனது (பாகேகொய், 1166.6 மில்லிமீற்றர்) தெற்கில் நிலவும் மழைவீழ்ச்சியை (பிலோர்யா 635.0 mm) விடக் கிட்டத்தட்ட இருமடங்கானதாகும்.[8] வடக்கு மற்றும் தெற்குக் கடற்கரைகளுக்கு இடையில் வருடாந்த சராசரி வெப்பநிலையில் ஒரு குறிப்பிடத் தக்க வேறுபாடு நிலவுகின்றது, பாகேகொய் 12.8 °C (55.0 °F), கார்டல் 15.03 °C (59.05 °F)[9]

உண்மையிலேயே, இசுதான்புல்லின் பகுதிகளில் காலநிலையின் மிகவும் முக்கியமான பண்புகளில் ஒன்றாகக் காணப்படுவது அதனுடைய தொடர்ச்சியான உயர் ஈரப்பதம் ஆகும். இது பெரும்பாலான காலை வேளைகளில் 80 சதவீதத்தை அடைகின்றது.[10] இந்தக் காலநிலைகளின் காரணமாக, மூடுபனி மிகவும் பொதுவாகக் காணப்படுவதுடன், இந்த மூடுபனி நகரின் வடக்குப் பகுதியிலும் நகரத்தின் மத்திக்கு அப்பாலும் அதிகமாகவுள்ளது. குறிப்பிடத் தக்க அடர்த்தியான மூடுபனி இப்பிராந்தியத்திலும் பொசுபோரசிலும் நிலவும் காலத்தில் இது போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்படுகின்றது. இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலங்களில், மதிய வேளைகளிலும் ஈரப்பதன் அதிகமாகக் காணப்படும் வேளைகளில் இவை பல்லாண்டு நிகழ்வுகளாக நடைபெறுகின்றன.[11][12][13] ஈரப்பதனான காலநிலையும், மூடுபனியும் கோடைகால மாதங்களில் நண்பகலில் வெளியேறி முடிய முனைகின்றன, ஆனால் நீடித்த ஈரப்பதமானது மிதமான உயர் கோடைகால வெப்பநிலையை மேலும் உக்கிரமாக்குகின்றது.[10][14] இந்தக் கோடைகால மாதங்களில், உயர் வெப்பநிலையானது சராசரியாக 29 °C (84 °F) ஆகக் காணப்படுவதுடன். பொதுவாக மழை இல்லாமலும் உள்ளது. சூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பதினைந்து நாடகளில் மட்டும் அளவிடத் தக்க மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது.[15] இருந்தபோதிலும், குறைந்த மழைவீழ்ச்சி காணப்பட்ட போதிலும், கோடைகால மாதங்களிலும் அதியுயர் அடர்த்தி மிக்க இடியுடன் கூடிய மழைகளும் ஏற்படுகின்றன.[16]

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஏனைய நகரங்களை விட இசுதான்புல்லில் குளிர்காலம் மிகவும் குளிரானதாகக் காணப்படுகின்றது. இங்கு மிக்க குறைந்த வெப்பநிலை சராசரியாக 3–4 °செ (37–39 °ப) ஆகக் காணப்படுகின்றது.[15] கருங்கடலிலிருந்து ஏற்படும் ஏரி விளைவு பனி பொதுவானதாகக் காணப்படுவதுடன், வானிலை முன்அறிவிப்பு விடுத்தல் கடினமாக உள்ளதுடன், உயர் அழுத்தம் மற்றும் மூடுபனி ஆகியவை நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இடையூறாக அமைகின்றன.[17] வசந்த காலமும் இலையுதிர் காலமும் மிதமானதாகக் காணப்படுவதுடன், வடமேற்குப் பகுதியிலிருந்து வரும் குளிர்ந்த காற்றும், தெற்கிலிருந்து வரும் வெப்பமான காற்றும், சிலவேளைகளில் ஒரே நாளில் வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன.[14][18] ஒட்டுமொத்தமாக, இசுதான்புல்லில் வருடாந்தம் சராசரியாக 115 நாட்கள் குறிப்பிடத் தக்க மழைவீழ்ச்சி ஏற்படுவதுடன், இது ஒரு வருடத்திற்கு 852 மில்லிமீட்டர்கள் (33.5 அங்) ஆகக் காணப்படுகின்றது.[15][19] நகரில் பதியப்பட்ட உயர் வெப்பநிலையாக 40.5 °C (105 °F) உம், தாழ் வெப்பநிலையாக −16.1 °C (3 °F) உம் காணப்படுகின்றது. ஒருநாளில் பதியப்பட்ட அதிகூடிய மழைவீழ்ச்சியாகக் 227 மில்லிமீட்டர்கள் (8.9 அங்) காணப்படுவதுடன், அதேசமயம் பதியப்பட்ட உயர் பனி மூட்டம் 80 சென்டிமீட்டர்கள் (31 அங்) ஆகக் காணப்படுகின்றது.[20][21]

தட்பவெப்ப நிலைத் தகவல், இசுத்தான்புல் (கர்த்தால்), 1960-2012
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 22.4
(72.3)
22.1
(71.8)
26.8
(80.2)
33.3
(91.9)
36.4
(97.5)
40.6
(105.1)
40.6
(105.1)
40.1
(104.2)
36.6
(97.9)
33.5
(92.3)
27.0
(80.6)
25.0
(77)
40.6
(105.1)
உயர் சராசரி °C (°F) 9.2
(48.6)
9.8
(49.6)
12.0
(53.6)
17.1
(62.8)
22.2
(72)
27.0
(80.6)
29.4
(84.9)
29.2
(84.6)
25.6
(78.1)
20.4
(68.7)
15.5
(59.9)
11.4
(52.5)
19.07
(66.32)
தினசரி சராசரி °C (°F) 6.5
(43.7)
6.5
(43.7)
8.3
(46.9)
12.7
(54.9)
17.5
(63.5)
22.1
(71.8)
24.4
(75.9)
24.2
(75.6)
20.9
(69.6)
16.4
(61.5)
12.2
(54)
8.7
(47.7)
15.03
(59.06)
தாழ் சராசரி °C (°F) 4.0
(39.2)
4.0
(39.2)
5.4
(41.7)
9.2
(48.6)
13.6
(56.5)
18.0
(64.4)
20.4
(68.7)
20.5
(68.9)
17.4
(63.3)
13.6
(56.5)
9.5
(49.1)
6.3
(43.3)
11.83
(53.29)
பதியப்பட்ட தாழ் °C (°F) -6.8
(19.8)
-6.4
(20.5)
-5.6
(21.9)
0.2
(32.4)
4.8
(40.6)
9.8
(49.6)
13.6
(56.5)
14.3
(57.7)
7.7
(45.9)
3.3
(37.9)
-2.0
(28.4)
-4.2
(24.4)
−6.8
(19.8)
பொழிவு mm (inches) 83.4
(3.283)
65.5
(2.579)
60.2
(2.37)
53.3
(2.098)
29.3
(1.154)
25.8
(1.016)
20.9
(0.823)
24.5
(0.965)
35.8
(1.409)
67.9
(2.673)
74.0
(2.913)
99.1
(3.902)
639.7
(25.185)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) 16.1 14.1 11.9 10.8 7.3 5.2 3.5 3.9 5.4 9.7 11.1 15.9 114.9
சூரியஒளி நேரம் 71.3 87.6 133.3 180.0 251.1 300.0 322.4 294.5 243.0 164.3 102.0 68.2 2,217.7
ஆதாரம்: துருக்கிய அரச வானிலை ஆராய்ச்சி சேவை[15][19] (1960–2012)

மக்கள் வகைப்பாடு

தொகு
வரலாற்று ரீதியாக மக்கள்தொகை
குடியரசுக்கு முன்
ஆண்டும.தொ.
10036,000
3613,00,000
5004,00,000
7th c.150–350,000
8th c.125–500,000
9th c.50–250,000
1000150–300,000
11002,00,000
12001,50,000
12611,00,000
135080,000
145345,000
15002,00,000
15506,60,000
17007,00,000
18005,70,000
18507,85,000
191411,25,000
குடியரசுக்குப் பின்
ஆண்டும.தொ.±%
19245,00,000—    
19276,80,000+36.0%
19357,41,000+9.0%
19407,93,000+7.0%
19458,60,000+8.4%
19509,83,000+14.3%
195512,58,000+28.0%
196014,66,000+16.5%
196517,42,000+18.8%
197021,32,000+22.4%
197525,47,000+19.5%
198027,72,000+8.8%
198554,75,000+97.5%
199076,20,000+39.2%
199592,60,000+21.5%
20001,09,23,000+18.0%
20051,20,61,000+10.4%
20101,32,56,000+9.9%
மூலங்கள்: Chandler 1987, Morris 2010, and Turan 2010
குடியரசுக்கு முந்தைய எண்ணிக்கை அண்ணளவானது

அதன் பெரும்பான்மையான வரலாறு முழுவதும், உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இசுதான்புல் தரப்படுத்தப்பட்டது. கி.பி. 500 ஆம் ஆண்டளவில் கொன்ஸ்தாந்தினோபிள் நகரம் அதன் முன்னோடியும், உலகின் மிகப்பெரிய நகரமுமான உரோமைத் தவிர்த்து 400,000 இற்கும் 500,000 இற்கும் இடைப்பட்ட அளவிலான மக்களைக் கொண்டிருந்தது.[24] கொன்ஸ்தாந்திநோபிள் நகரானது ஏனைய பாரிய வரலாற்று ரீதியான நகரங்களான பக்தாத் மற்றும் சங்கன் ஆகியவற்றுடன், 13 ஆம் நூற்றாண்டு காலம் வரை உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நகர் என்ற நிலையைத் தக்கவைக்கப் போட்டியிட்டது. இது உலகின் மிகப்பாரிய நகராகத் தொடர்ந்து இருக்க முடியாது போனாலும், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலண்டனால் முறியடிக்கப்பட்டு, கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சி வரை ஐரோப்பாவின் பாரிய நகராக விளங்கியது.[25] இன்று, அது இன்னும் மொஸ்கோவுடன் இணைந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளுள் ஒன்றாக உள்ளது.

மத மற்றும் இனக் குழுக்கள்

தொகு

இசுதான்புல்லின் மிகப் பாரிய சிறுபான்மை இனக்குழுமம் குருதிய சமூகமாகும். இவர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு துருக்கியில் தோன்றியவர்களாவார்கள். அத்துடன் இந்தக் குருதிய மக்களின் இருப்பு ஆரம்ப ஒட்டோமன் காலத்திலிருந்து நிலவுகின்றது.[26] இந்நகருக்குள் குருதிய மக்களின் வருகையானது குருதிய துருக்கிய முரண்பாட்டின் ஆரம்பகட்டத்தில் குருதிசுத்தான் தொழிலாளர் கட்சியுடன் துரிதப்படுத்தப்பட்டது (அதாவது. 1970 களின் இறுதிப்பகுதியிலிருந்து).[27] கிட்டத்தட்ட இசுதான்புல்லின் இரண்டு அல்லது மூன்று மில்லியன் மக்கள் குருதிய மக்களாவார்கள், அதாவது உலகின் ஏனைய நகரங்களை விட இசுதான்புல்லிலேயே அதிகமான குருதிய மக்கள் உள்ளனர்.[28][29][30][31][32]

பொருளாதாரம்

தொகு

கொள்வனவு ஆற்றல் சமநிலையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியாகிய 301.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன், இசுதான்புல் 2011 ஆம் ஆண்டில் உலகின் நகர்ப்புற பகுதிகளில் 29 ஆம் இடத்தைப் பெற்றது.[33] 1990 களின் நடுப்பகுதி வரை, இசுதான்புல்லின் பொருளாதாரம், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் பெருநகர்ப் பிரதேசங்களில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் காணப்பட்டது. பொரின் பொலிசி என்ற சஞ்சிகை மற்றும் மக்கின்சி உலகளாவிய நிறுவனம் ஆகியவற்றின் கணிப்பின்படி, இசுதான்புல் 2025 ஆம் ஆண்டளவில் 291.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெயரளவிலான அதிகரிப்புடன், உலக நகரங்களில் 14 ஆவது உயர்ந்த முழுமையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்த நகராகக் காணப்படும்.[34] துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 வீதமானது இசுதான்புல்லிலிருந்து கிடைப்பதுடன், 20 வீதமான நாட்டின் தொழில்துறை தொழிலாளர் படையினர் இந்நகரிலேயே வாழ்கின்றனர்.[35] மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவை 70 சதவீதம் மற்றும் 50 சதவீதம் தங்கள் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கின்றன. இதன் காரணமாக உயர் மதிப்பு கூட்டப்பட்ட நடவடிக்கைகளில் பகுதியாகக் கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய உயர்ந்த மக்கள்தொகையினாலும் துருக்கியின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்கவகையில் பங்களிப்பதாலும், நாட்டின் வரி வருவாயில் ஐந்தில் இரண்டு பங்கிற்கு இசுதான்புல் பொறுப்பாளியாக உள்ளது. இதனுள் இசுதான்புல்லில் உள்ள முப்பத்தேழு பில்லியனர்களின் வரியும் உள்ளடங்குவதுடன், இந்தப் பில்லியனர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதிலுமுள்ள நகரங்களில் ஐந்தாவது அதிகமானதாக உள்ளது.[36]

எண்ணெய் வளம் மிக்க கருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரேயொரு கடல்வழி என்ற வகையில், பொஸ்போரசானது உலகின் பரபரப்பான கடல்வழிகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. 200 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான எண்ணெய் இந்நீரிணை ஊடாகக் கொண்டுசெல்லப்படுவதுடன், பொஸ்பொரசில் உள்ள போக்குவரத்து நெரிசல் சுயஸ் கால்வாயை விட மூன்று மடங்காகக் காணப்படுகின்றது.[37] இதன் காரணமாக, இந்நீரிணைக்குச் சமாந்தரமாக, நகரின் ஐரொப்பாவின் பக்கத்தில், இசுதான்புல் கால்வாய் என்ற பெயரில் ஒரு கால்வாயை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.[38] இசுதான்புல்லில் ஹைடர்பாசா துறைமுகம், அம்பார்லி துறைமுகம், மற்றும் செய்டின்பேர்னு துறைமுகம் எனப்படும் மூன்று பாரிய துறைமுகங்களும் பல்வேறு சிறிய துறைமுகங்களும் பொஸ்போரஸ் வழியாக உள்ள எண்ணெய் சேமிப்பு பகுதிகள் மற்றும் மர்மரா கடல் ஆகியவை அமைந்துள்ளன.[39][40] அம்பார்லி துறைமுகம் அரம்பிக்கப்பட்டதால் ஹைடார்பாசா மூடப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டது.[41] 2007 ஆம் ஆண்டளவில், நகர் மையத்தின் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்த அம்பார்லி துறைமுகம் வருடாந்தம் 1.5 மில்லியன் கொள்வனவுடைய டி.ஈ.யுக்களை கொண்டிருந்ததுடன் (ஹைடார்பாசா துறைமுகத்தில் 354,000 டி.ஈ.யுக்கள்), மத்திய தரைக்கடல் பகுதியில் நான்காவது மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து முனையமாக இருந்தது.[42] செய்டின்பேர்னு துறைமுகம், நெடுஞ்சாலைகளுக்கும் அட்டாதுருக் சர்வதேச விமான நிலையத்திற்கும் அருகில் அமைந்துள்ளமையால் நன்மையடைகின்றது.[43] அத்துடன் நகருக்கான நீண்ட காலத் திட்டங்கள் அனைத்து முனையங்கள் மற்றும் வீதிகள் மற்றும் புகையிரதப் பாதை இணைப்புகள் என்பவற்றுக்கிடையில் பாரிய தொடர்பிணைப்புத் தன்மையை உருவாக்கவுள்ளன.

இசுதான்புல் ஒரு வளர்ச்சியடைந்துவரும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கே 2000 ஆம் ஆண்டில் 2.4 மில்லியன் வெளிநாட்டவர்கள் வருகைதந்த போதிலும், 2012 ஆம் ஆண்டில் 11.6 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வருகைதந்தனர். இதனால் இந்நகரம் உலகின் ஐந்தாவது அதிகமான மக்கள் வருகைதரும் நகராகவுள்ளது.[44] இந்நகரின் சுற்றுச்சூழல் திட்டத்தின் குறிப்பின்படி இங்கே 17 மாளிகைகள், 64 பள்ளிவாசல்கள், மற்றும் 49 தேவாலயங்கள் ஆகிய வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்கள் இசுதான்புல்லில் உள்ளன.[45]

கல்வி

தொகு
 
1453 இல் நிறுவப்பட்ட, இந்நகரின் மிகப்பழைய துருக்கிய நிறுவனமான, இசுதான்புல் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில்.

இசுதான்புல் பல்கலைக்கழகம் 1453 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே இந்நகரின் மிகவும் பழமைவாய்ந்த துருக்கிய கல்வி நிறுவனமாகும். அத்துடன் ஆரம்பத்தில் முசுலிம் பாடசாலையாக இருந்து, பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் இப்பல்கலைக்கழகத்தில் சட்டம், மருத்துவம், மற்றும் விஞ்ஞான பீடங்கள் ஆரம்பிக்கப்பட்டு, துருக்கிய குடியரசு நிறுவப்பட்ட பின்னர் மதச்சார்பற்ற பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.[46] 1773 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இசுதான்புல் தொழினுட்பப் பல்கலைக்கழகம் கடற்படை பொறியியலுக்கான அரச பாடசாலையாக இருந்நதுடன், முழுவதுமாகப் பொறியியல் விஞ்ஞானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மூன்றாவது மிகப்பழைய பல்கலைக்கழகமாகத் திகழ்கின்றது.[47][48] இந்தப் பொதுப் பல்கலைக்கழகங்கள் நகரம் முழுவதும் உள்ள எட்டுப் பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆகும்.[49] 1970 களில் துருக்கியின் அடிப்படை கலை நிறுவனமாகத் திகழ்ந்த மிமார் சினன் ஃபைன் ஆட்ஸ் பல்கலைக்கழகம், நாட்டின் உயர் கல்விக்கான மூன்றாவது பாரிய நிறுவனமாகிய மர்மரா பல்கலைக்கழகம், என்பன இசுதான்புல்லில் உள்ள ஏனைய பிரபலமான அரச பல்கலைக்கழகங்களாகும்.[50]

இசுதான்புல்லில் நிறுவப்பட்ட பல பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் உள்ள போதிலும், இந்நகரில் பிரபலமான தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இசுதான்புல்லின் முதலாவது நவீன தனியார் பல்கலைக்கழகமாகவும், ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியில் ஆரம்ப இடத்தில் தற்போதும் அமைந்துள்ள மிகப்பழைய அமெரிக்கப் பாடசாலையாகவும், ரொபேட் கல்லூரி விளங்குகின்றது. இது 1863 ஆம் ஆண்டில் செல்வந்த அமெரிக்கரும் மனிதநேய ஆர்வலருமாகிய, கிறிஸ்தோபர் ரொபேட் மற்றும் கல்விக்க்காகத் தன்னை அர்ப்பணித்த சமயப் பரப்பாளராகிய சைரஸ் ஹம்லின் ஆகியோரால் நிறுவப்பட்டது. அதன் கல்வித் திட்டத்தின் மூன்றாம் நிலை அம்சமானது 1971 ஆம் ஆண்டு பொகசிசி பல்கலைக்கழகமாகியதுடன், அதேவேளை அர்னவுட்கோயில் உள்ள மீதமுள்ள பகுதி ரொபேட் கல்லூரி என்ற பெயரின் கீழ் தங்கிப்படிக்கும் உயர் பாடசாலையாகத் தொடர்ந்து செயற்படுகின்றது.[51][52] துருக்கியில் தனியார் பல்கலைக்கழகங்கள் 1982 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் முன்னர் உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால் இசுதான்புல்லில் 1970 ஆம் ஆண்டளவில் திறம்பட பல்கலைக்கழகங்களாக இயங்கிய பதினைந்து தனியார் "உயர் பாடசாலைகள்" இருந்தன. 1982 ஆம் ஆண்டிலிருந்து நிறுவப்பட்ட முதலாவது தனியார் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது கோக் பல்கலைக்கழகமாகும் (1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது), அத்துடன் ஏனைய பன்னிரண்டு பல்கலைக்கழகங்கள் அடுத்துவந்த ஒரு தசாப்த காலத்தில் திறக்கப்பட்டன.[51] இன்று, இசுதான்புல் வணிகப் பல்கலைக்கழகம் மற்றும் கதிர் ஹாஸ் பல்கலைக்கழகம் உள்ளடங்கலாக, இந்நகரில் ஆகக்குறைந்தது முப்பது தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன.[53] உயிரியல் இசுதான்புல் எனப்படும், ஒரு புதிய உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம், பசெக்செகிரில் அமைக்கப்பட்டு வருகின்றதுடன், இது 15,000 மக்களை, 20,000 பணிபுரியும் பயணிகளைக் கொண்டிருப்பதுடன் கட்டிமுடிக்கப்படும்பொழுது ஒரு பல்கலைக்கழகமாக இருக்கும்.[54][55]

2007 ஆம் ஆண்டில், 4,350 பாடசாலைகள் இருந்ததுடன், அவற்றுள் கிட்டத்தட்ட அரைவாசியானவை ஆரம்பப் பாடசாலைகளாகும். சராசரியாக ஒவ்வொரு பாடசாலையும் 688 மாணவர்களைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இசுதான்புல்லின் கல்வி முறையானது 2000 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை கணிசமான அளவிற்கு விரிவடைந்துள்ளது. வகுப்பறைகளின் எண்ணிக்கையும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளதுடன், மாணவர்களின் எண்ணிக்கை 60 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.[56] 1481 ஆம் ஆண்டு கலட்டா அரண்மனை ஏகாதிபத்திய பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கலட்டாசரய் உயர் பாடசாலையே, இசுதான்புல்லின் மிகப்பழமைவாய்ந்த உயர் பாடசாலையாகவும் இந்நகரில் இரண்டாவது மிகப்பழமைவாய்ந்த கல்வி நிறுவனமாகவும் அமைந்துள்ளது. இப்பாடசாலை பெயெடிட் II சுல்தானின் கட்டளைப்படி அமைக்கப்பட்டது. அவர் தன்னுடைய வளர்ச்சியடைந்து வரும் பேரரசை மேலும் பலப்படுத்தும் பொருட்டு பல்வேறுபட்ட பின்னணியைக் கொண்ட மாணவர்களை ஒன்றிணைக்க முற்பட்டார்.[57] இது துருக்கியின் அனத்தோலிய உயர்நிலைப் பாடசாலைகளில் ஒன்றாகும். படிமுறைப் பொது உயர் பாடசாலைகள் வெளிநாட்டு மொழிகளில் அறிவுறுத்தல்களை வழங்குவதில் உறுதியான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு, கலட்டாசரய், அறிவுறுத்தல்களை பிரெஞ்சு மொழியில் வழங்கியது, அதேவேளை ஏனைய அனத்தோலிய உயர்நிலைப் பாடசாலைகள் துருக்கிய மொழியுடன் சேர்ந்து ஆங்கிலம் அல்லது செருமன் ஆகிய மொழிகளை அடிப்படையாகக் கற்பிக்கின்றன.[58][59] இந்நகரில் லிகியோ இத்தாலியானோ போன்ற வெளிநாட்டு உயர்நிலைப் பாடசாலைகளும் உள்ளன. அவை 19 ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டவர்களுக்குக் கற்பிப்பதற்காக நிறுவப்பட்டன.[60]

இசுதான்புல்லின் ஏனைய ஒருசில உயர்நிலைப் பாடசாலைகள் அவர்களின் கற்பித்தல் முறை அல்லது நுழைவுத் தகைமைகள் என்பவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. செங்கெல்கோயில் பொசுபோரஸ் கடற்கரையில் அமைந்துள்ள குலேலி இராணுவ உயர்நிலைப் பாடசாலை, மற்றும் பிரின்சஸ் தீவுகளில் அமைந்துள்ள துருக்கிய கடற்படை உயர்நிலைப் பாடசாலை ஆகியவை இராணுவ உயர்நிலைப் பாடசாலைகளாகும். இவை மூன்று இராணுவப் படைகளாகிய துருக்கிய வான் படை, துருக்கிய இராணுவம், மற்றும் துருக்கிய கடற்படை ஆகிய படைகளால் முழுமைப்படுத்தப்படுகின்றன. இசுதான்புல்லில் உள்ள இன்னுமொரு முக்கியமான பாடசாலையாகத் தருச்சபக்கா உயர்நிலைப் பாடசாலை விளங்குகின்றது, இப்பாடசாலை நாடெங்கிலும் உள்ள பெற்றோர்களில் ஒருவரை இழந்த சிறுவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகின்றது. தருச்சபக்கா தனது அறிவுறுத்தல்களை நான்காம் தரத்தில் ஆரம்பிப்பதுடன், அறிவுறுத்தல்களை ஆங்கில ஒழியில் வழங்குகின்றது. அத்தோடு ஆறாம் தரத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது வெளிநாட்டு மொழியாகச் செருமன் அல்லது பிரெஞ்சு மொழியில் அறிவுறுத்தலகள் வழங்கப்படுகின்றன.[61] இந்நகரின் ஏனைய முக்கிய உயர்நிலைப் பாடசாலைகளுள் கபடாசு எர்கெக் லிசெசி (1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)[62] மற்றும் கடிகோய் அனடோலு லிசெசி (1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)[63] என்பன உள்ளடங்குகின்றன.

குறிப்புகள்

தொகு
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; city-area என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேற்கோள்கள்

தொகு
  1. "Istanbul from a Bird's Eye View". Governorship of Istanbul. Archived from the original on 17 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 13 June 2010.
  2. "The Topography of İstanbul". Republic of Turkey Ministry of Culture and Tourism. பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.
  3. Parsons, Tom; Toda, Shinji; Stein, Ross S.; Barka, Aykut; Dieterich, James H. (2000). "Heightened Odds of Large Earthquakes Near Istanbul: An Interaction-Based Probability Calculation". Science (Washington, D.C.: The American Association for the Advancement of Science) 288 (5466): 661–5. doi:10.1126/science.288.5466.661. பப்மெட்:10784447. 
  4. Traynor, Ian (9 December 2006). "A Disaster Waiting to Happen – Why a Huge Earthquake Near Istanbul Seems Inevitable". The Guardian (UK). http://www.guardian.co.uk/world/2006/dec/09/turkey.naturaldisasters. பார்த்த நாள்: 13 June 2010. 
  5. Kottek, Markus; Grieser, Jürgen; Beck, Christoph; Rudolf, Bruno; Rube, Franz (June 2006). "World Map of the Köppen-Geiger climate classification updated". Meteorologische Zeitschrift 15 (3): 259–263. doi:10.1127/0941-2948/2006/0130. http://www.schweizerbart.de/resources/downloads/paper_free/55034.pdf. பார்த்த நாள்: 29 March 2013. 
  6. Peel, M. C.; Finlayson, B. L.; McMahon, T. A. (2007). "Updated world map of the Köppen-Geiger climate classification". Hydrology and Earth System Sciences 4 (2): 439–473. doi:10.5194/hessd-4-439-2007. http://www.hydrol-earth-syst-sci-discuss.net/4/439/2007/hessd-4-439-2007.pdf. பார்த்த நாள்: 29 March 2013. 
  7. "[Monthly Total Participation Data: August]" (in Turkish). Turkish State Meteorological Service. Archived from the original on 16 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "COMPARISONS OF ANNUAL MEAN PRECIPITATION, GRIDDED AND STATION DATA: AN EXAMPLE FROM ISTANBUL, TURKEY". Archived from the original on 2016-11-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.
  9. Bahçeköy Orman İşletme Müdürlüğü
  10. 10.0 10.1 "Weather – Istanbul". World Weather. BBC Weather Centre. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
  11. "Istanbul Enshrouded in Dense Fog". Turkish Daily News. 14 January 2005. Archived from the original on 18 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
  12. "Thick Fog Causes Disruption, Flight Delays in İstanbul". Today's Zaman. 23 November 2009. Archived from the original on 4 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
  13. "Dense Fog Disrupts Life in Istanbul". Today's Zaman. 6 November 2010. Archived from the original on 4 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
  14. 14.0 14.1 Pelit, Attila. "When to Go to Istanbul". TimeOut Istanbul. Archived from the original on 14 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 19 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. 15.0 15.1 15.2 15.3 "Resmi İstatistikler (İl ve İlçelerimize Ait İstatistiki Veriler)" (in Turkish). Turkish State Meteorological Service. பார்க்கப்பட்ட நாள் 29 April 2013. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  16. Quantic 2008, ப. 155
  17. Kindap, Tayfin (19 January 2010). "A Severe Sea-Effect Snow Episode Over the City of Istanbul". Natural Hazards 54 (3): 703–23. doi:10.1007/s11069-009-9496-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-0840. http://www.springerlink.com/content/cu66841r30p20v72/. பார்த்த நாள்: 15 October 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  18. "Istanbul Winds Battle Over the City". Turkish Daily News. 17 October 2009. Archived from the original on 18 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
  19. 19.0 19.1 "Yıllık Toplam Yağış Verileri" (in Turkish). Turkish State Meteorological Service. Archived from the original on 1 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |https://web.archive.org/web/20160312093300/http://dmi.gov.tr/veridegerlendirme/yillik-toplam-yagis-verileri.aspx?m= ignored (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  20. "İstanbul Bölge Müdürlüğü'ne Bağlı İstasyonlarda Ölçülen Ekstrem Değerler" (PDF) (in Turkish). Turkish State Meteorological Service. Archived from the original (PDF) on 23 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  21. "March 1987 Cyclone (Blizzard) over the Eastern Mediterranean and Balkan Region Associated with Blocking". American Meteorological Society. பார்க்கப்பட்ட நாள் 27 July 2010.
  22. The Yearly Measurements by Kirecburnu Station Between 1990-1999
  23. The Yearly Measurements by Bahcekoy Station Between 1990-1999
  24. Morris 2010, ப. 113
  25. Chandler 1987, ப. 463–505
  26. Masters & Ágoston 2009, ப. 520–1
  27. Wedel 2000, ப. 182
  28. Amikam Nachmani (2003). Turkey: Facing a New Millenniium : Coping With Intertwined Conflicts. Manchester University Press. pp. 90–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7190-6370-1. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
  29. Milliyet Konda Araştırma (2006). "Biz Kimiz: Toplumsal Yapı Araştırması" (PDF). Archived from the original (PDF) on 15 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 4 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  30. Agirdir, Bekir (2008). "Kürtler ve Kürt Sorunu" (PDF). KONDA. Archived from the original (PDF) on 3 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 May 2013.
  31. Bekir Agirdir. "Kürtlerin nüfusu 11 milyonda İstanbul"da 2 milyon Kürt yaşıyor". http://www.radikal.com.tr/radikal.aspx?atype=radikaldetayv3&articleid=913650. பார்த்த நாள்: 4 May 2013. 
  32. Christiane Bird (18 December 2007). A Thousand Sighs, A Thousand Revolts: Journeys in Kurdistan. Random House Publishing Group. pp. 308–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-43050-2. பார்க்கப்பட்ட நாள் 4 May 2013.
  33. "Global MetroMonitor". Brookings Institution. 30 November 2012. Archived from the original on 6 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 13 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  34. "The Most Dynamic Cities of 2025". Foreign Policy. September–October 2012. Archived from the original on 4 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 April 2013.
  35. "Presentation of Reference City: Istanbul". Urban Green Environment. 2001. Archived from the original on 17 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 30 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  36. Geromel, Ricardo (14 March 2013). "Forbes Top 10 Billionaire Cities - Moscow Beats New York Again". Forbes. பார்க்கப்பட்ட நாள் 27 July 2013.
  37. Oxford Business Group 2009, ப. 112
  38. Jones, Sam, and agencies (27 April 2011). "Istanbul's new Bosphorus canal 'to surpass Suez or Panama'". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 29 April 2012.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  39. Organisation for Economic Co-operation and Development 2008, ப. 80
  40. "Ports of Turkey". Cerrahogullari T.A.S. Archived from the original on 6 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  41. Cavusoglu, Omer (March 2010). "Summary on the Haydarpasa Case Study Site" (PDF). Cities Programme. London School of Economics. Archived from the original (PDF) on 9 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  42. Zeybek, Hülya; Kaynak, Muhtesem (27–30 May 2008). "What Role for Turkish Ports in the Regional Logistics Supply Chains?" (PDF). International Conference on Information Systems and Supply Chain. Archived from the original (PDF) on 6 பிப்ரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 28 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  43. Organisation for Economic Co-operation and Development 2008, ப. 143
  44. Kerimoğlu, Ebra; Ciraci, Hale. "Urban Tourism: An Analysis of Visitors to Istanbul" (PDF). Vienna University of Economics and Business. Archived from the original (PDF) on 2014-05-22. பார்க்கப்பட்ட நாள் 2014-05-15.
  45. "Istanbul '10" (PDF). Turkey Tourism Market Research Reports. Istanbul Valuation and Consulting. 2010. Archived from the original (PDF) on 16 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help) (n.b. Source indicates that the Topkapı Palace Museum and the Hagia Sophia together bring in 55 million TL, approximately $30 million in 2010, on an annual basis.)
  46. "History". Istanbul University. 11 August 2011. Archived from the original on 13 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 August 2012.
  47. "History". Istanbul Technical University. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.
  48. "University Profile: Istanbul Technical University, Turkey". Board of European Students of Technology. Archived from the original on 16 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012.
  49. "State Universities". The Turkish Council of Higher Education. Archived from the original on 30 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012.
  50. "About Marmara". Marmara University. Archived from the original on 30 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  51. 51.0 51.1 Doğramacı, İhsan (August 2005). "Private Versus Public Universities: The Turkish Experience" (DOC). 18th International Conference on Higher Education. Ankara. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012.
  52. "History of RC". Robert College. 2012. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
  53. "Private Universities". The Turkish Council of Higher Education. Archived from the original on 30 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012.
  54. "Baraja nazır en akıllı kent". Hürriyet. 4 May 2013. http://www.hurriyet.com.tr/ekonomi/23201783.asp. பார்த்த நாள்: 5 May 2013. 
  55. "AECOM expands Bio Istanbul role with project management appointment". http://www.aecom.com. AECOM. 4 September 2012. பார்க்கப்பட்ட நாள் 4 May 2013. {{cite web}}: External link in |work= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  56. "2007 Yılına Ait Veriler" (in Turkish). Governorship of Istanbul. Archived from the original on 2 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  57. "Historique" (in French). Galatasaray University. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  58. "Millî Eğitim Bakanlığı Anadolu Liseleri Yönetmeliği" (in Turkish). Ministry of Education. 5 November 1999. Archived from the original on 15 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  59. "Galatasaray Lisesi". Galatasaray High School. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.
  60. "The History of the Italian School". Liceo Italiano. Archived from the original on 20 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  61. "Principles of Education". Darüşşafaka High School. Archived from the original on 9 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  62. "Kabataş Erkek Lisesi" (in Turkey). Kabataş Erkek Lisesi. Archived from the original on 2 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 31 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  63. "KAL Uygulamalı Yabancı Dil Laboratuvarı" (in Turkish). Kadıköy Anadolu Lisesi. Archived from the original on 20 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 31 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)

நூற்பட்டியல்

தொகு

மேலும் பார்க்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Istanbul
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுதான்புல்&oldid=3927580" இலிருந்து மீள்விக்கப்பட்டது