கொமரமங்கலம் காசி விசுவநாதர் கோயில்
கொமரமங்கலம் காசி விசுவநாதர் கோயில் என்பது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கொமரமங்கலத்தில் அமைந்துள்ளது. [1]இத்தலத்தினை கொங்குநாட்டு காசி என்று அழைக்கின்றனர்.
குமணன் மன்னர் காசிக்கு சென்று காசி விசுவநாதரை தரிசித்து வந்தார். தன்னுடைய மக்களுக்கும் காசிக்கு சென்று வழிபட முடியாது என்பதால் அங்கிலிருந்து சிவலிங்கத்தினை பெற்று தன்னுடைய ஊரிலேயே காசிவிசுவநாதருக்கு கோயில் அமைத்தார். அம்மன்னருடைய பெயரே ஊரின் பெயரானது.
சந்நதிகள்
தொகுமூலவர் காசிவிசுவநாதர் என்றும், அம்மன் விசாலாட்சி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். இச்சிவாலயத்தில் சுந்தர கணபதி, தட்சணமூர்த்தி, சனீசுவரர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பரமணியர், ஆஞ்சநேயர், ருக்மணி-சத்யபாமா உடனுறை வேணுகோபால், காலபைரவர், சந்திரன், சூரியன் ஆகியோர் சந்நதிகளும், ருக்மணி-சத்யபாமா உடனுறை வேணுகோபன் சந்நதியானது சைவக் கோயிலில் வைணவத்திற்கு அளித்த பேராக கருதப்படுகிறது. சிவாகம முறைப்படி இங்கு பூசைகள் செய்யப்படுகின்றன. தலவிருட்சம் – நாகலிங்கமரம் தீர்த்தம் – அமராவதி ஆறு
விழாக்கள்
தொகுசிவராத்திரி – இந்நாளில் இங்கு நடைபெறுகின்ற நான்குகால பூசை இரவில் நடப்பது சிறப்பு.
சிறப்பு
தொகுசிவாலயங்களில் பொதுவாக அதிகாரநந்தி வாசலிலும், அனுகிரக நந்தி மகாமண்டபத்திலும் இருப்பர். ஆனால் இச்சிவாலயத்தில் இரு நந்திகளும் ஓரிடத்திலேயே அமைந்துள்ளன.
ஆதாரங்கள்
தொகு- ↑ குமுதம் பக்தி ஸ்பெசல் கொங்கு நாட்டு காசி – பக்கம் 30-33