கொரட்லா
கொரட்லா (Korutla), தென்னிந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ள ஜக்டியால் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும்.[4][5] இது மாவட்டத் தலைமையிடமான ஜக்டியால் நகரத்திற்கு 23 கிலோ மீட்டர் தொலைவிலும்; நிசாமாபாத்திற்கு 76 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு 69 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 942 அடி (287 மீட்டர்) உயரத்தில் உள்ளது.
கொரட்லா | |
---|---|
நகரம் | |
![]() கொரோட்லா தொடருந்து நிலையம் | |
ஆள்கூறுகள்: 18°49′17″N 78°42′43″E / 18.8215°N 78.7119°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஜக்டியால் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | கொரோட்லா நகராட்சி |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 34.12 km2 (13.17 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 2 |
ஏற்றம்[2] | 287 m (942 ft) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 66,504 |
• அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 505326 |
தொலைபேசி குறியீடு | 08725 |
வாகனப் பதிவு | TS21 |
இணையதளம் | korutlamunicipality |
மக்கள் தொகை பரம்பல் தொகு
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 15,669 வீடுகளும் கொண்ட கொரட்லா நகரத்தின் மக்கள் தொகை 66,504 ஆகும். அதில் ஆண்கள் 33,250 மற்றும் பெண்கள் 33,254 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,000 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 75% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,614 மற்றும் 1,321 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.57%, இசுலாமியர் 30.73%, கிறித்தவர்கள் 0.46% மற்றும் பிறர் 0.68% ஆகவுள்ளனர். [6]
போக்குவரத்து தொகு
பெட்டப்பள்ளி-நிசாமாபாத் இருப்புப் பாதையில் கொரட்லா தொடருந்து நிலையம் உள்ளது[7]. இது கரீம்நகர், மும்பை, விசாகப்பட்டினம், தில்லி, சென்னை போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Urban Local Body Information". Government of Telangana இம் மூலத்தில் இருந்து 15 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160615135503/http://dtcp.telangana.gov.in/ULBs-List-68.pdf. பார்த்த நாள்: 28 June 2016.
- ↑ "Maps, Weather, and Airports for Koratla, India". fallingrain.com. http://www.fallingrain.com/world/IN/02/Koratla.html.
- ↑ "District Census Handbook – Karimnagar". pp. 12, 50. http://www.censusindia.gov.in/2011census/dchb/2803_PART_B_DCHB_Karimnagar.pdf. பார்த்த நாள்: 9 June 2016.
- ↑ India Today Web Desk. "Indian states with highest population". https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/indian-states-with-highest-population-1358414-2018-10-08.
- ↑ "District Administration – Formation/Reorganization of District, Revenue Divisions and Mandals in Jagitial District – Final Notification - Orders – Issued". http://jagtial.telangana.gov.in/wp-content/uploads/2016/10/226.Jagityal-.226.pdf. பார்த்த நாள்: 25 July 2017.
- ↑ Koratla Population, Religion, Caste, Working Data Karimnagar, Andhra Pradesh - Census 2011
- ↑ Koratla Railway Station
பகுப்பு:தெலங்காணா கோயில்கள்