கொரியக் கானாங்கெளுத்தி
கொரியக் கானாங்கெளுத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகோம்பிரிபார்மிசு
|
குடும்பம்: | இசுகோம்பிரிடே
|
பேரினம்: | இசுகோம்பரோமோரசு
|
இனம்: | இ. கொரியானசு
|
இருசொற் பெயரீடு | |
இசுகோம்பரோமோரசு கொரியானசு கிசினௌயே, 1915 | |
வேறு பெயர்கள் [2] | |
|
கொரியக் கானாங்கெளுத்தி (Korean mackerel) கொரியச் சீலா என்றும் அழைக்கப்படும் இசுகோம்பரோமோரசு கொரியானசு என்பது கானாங்கெளுத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எலும்பு மீன் ஆகும். இந்தக் குடும்பத்திற்குள், இந்த மீன் எசுப்பானிய கானாங்கெளுத்தி, இசுகாம்பெரோமோரினி இனக்குழுவினைச் சேர்ந்ததாகும். இது இந்தோ-பசிபிக் பகுதியில் பரவிக் காணப்படுகிறது. இது இந்தியா மற்றும் இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து ஆசியக் கண்ட திட்டுப் பகுதியான சுமாத்திரா தீவுகள் வரை பரவியுள்ளது. வடக்கே கொரியா மற்றும் சப்பான் கடலில் வாகாசா விரிகுடா வரையும் இதன் பரவல் நீண்டுள்ளது.[3] இந்தச் சிற்றினம் இதன் வாழிட வரம்பின் சில பகுதிகளில் வணிக முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு இவை செவுள் வலைகளைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்டு உடனடியாகவோ அல்லது உலர்த்தி உப்பிட்டு கருவாடாக விற்பனை செய்யப்படுகிறது. கொரியக் கானாங்கெளுத்தி பால்க் விரிகுடா மற்றும் இந்தியாவின் மன்னார் வளைகுடா பகுதியில் மூழ்கு வலையினைப் பயன்படுத்தி அதிகமாகப் பிடிக்கப்படும் ஒரு மீன் ஆகும்.[1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Collette, B.; Di Natale, A.; Fox, W.; Juan Jorda, M.; Nelson, R. (2011). "Scomberomorus koreanus". IUCN Red List of Threatened Species 2011: e.T170343A6757043. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170343A6757043.en. https://www.iucnredlist.org/species/170343/6757043. பார்த்த நாள்: 29 November 2022.
- ↑ "Scomberomorus koreanus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 9 December 2012.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Scomberomorus koreanus" in FishBase. April 2006 version.