கொலம்பியா ஆறு


கொலம்பியா ஆறு (Columbia River); இது வட அமெரிக்காவின் வடமேற்கு பசிபிக் பகுதியில் ஓடக்கூடிய மிகப்பெரிய ஆறாகும்.[6] இந்த ஆறு வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாவிலுள்ள ராக்கி மலைத்தொடரில் உதயமாகிறது. வடமேற்காக பாயும் இது, பின்னர் தெற்கே திரும்பி அமெரிக்க மாநிலமான வாஷிங்டனுக்குள் சென்று, பின்னர் மேற்கில் பசிபிக் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு முன்பு வாஷிங்டனுக்கும், ஓரிகன் மாநிலத்திற்கும் இடையேயான எல்லையை மிக அதிகமாக்குகிறது.[7] 1,243 மைல் (2,000 கிமீ) நீளமுடையதாக உள்ள இந்த ஆற்றின் மிகப்பெரிய துணை ஆறு, பாம்பு ஆறாகும் (Snak River). தோராயமாக பிரான்சு அளவில் உள்ள இவ்வாற்றின் வடிநிலம், ஐக்கிய அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் நீண்டு, கனடாவின் மாகாணம் வரை உள்ளது. அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய ஆற்றுத் தொகுப்பாக விளங்கும் கொலம்பியா ஆறு, வடஅமெரிக்காவின் பசுபிக்கில் பாயும் மிகப்பெரிய நீரோட்டமாக உள்ளது.[8]

கொலம்பியா ஆறு
Columbia River
River
Corps-engineers-archives bonneville dam looking east.jpg
ஜார்ஜ் கொலம்பியா ஆற்றின், பான்னிவில்லி அணை
பெயர் மூலம்: கேப்டன் ராபர்ட் கிரேஸ் கப்பல், கொலம்பியா ரெடிவிவா
செல்லப்பெயர்: பெரிய ஆறு, மேற்கு ஆறு, ஓரிகன் ஆறு[1]
நாடுகள்  ஐக்கிய அமெரிக்கா,  கனடா
மாநிலங்கள் வாஷிங்டன், ஓரிகன்
Province பிரிட்டிசு கொலம்பியா
கிளையாறுகள்
 - இடம் ஸ்பில்மிமாசென் ஆறு, பீவர் ஆறு, இல்லேசில்லெவெட் ஆறு, இன்காமப்பிளேக்ஸ் ஆறு, கூட்டேனாய் ஆறு, ஓரிலே ஊற்று ஆறு, ஸ்போக்னே ஆறு, பாம்பு ஆறு, ஜான் டே ஆறு, தேச்சூத் ஆறு, வில்லாமெட்டி ஆறு
 - வலம் குதிரை உதை ஆறு, பிளாக்பெர்ரி ஆறு, கேனோ ஆறு, கெண்டி ஆறு, சன்பாயில் ஆறு, ஒகானோகன் ஆறு, என்தியட் ஆறு, வெனாட்சே ஆறு, யகிமா ஆறு, லூயிஸ் ஆறு, காவ்லிட்ஸ் ஆறு
நகரங்கள் ரெவீல்ஸ்டேக், பிரிட்டிஷ் கொலம்பியா, வேனட்சீ, வாஷிங்டன், கிழக்கு வேனட்சீ, வாஷிங்டன், திரி நகரங்கள், வாஷிங்டன், தி டால்ஸ், ஓரிகன், ஹூத் ஆறு, ஓரிகன், போர்ட்லன்ட் (ஒரிகன்), வான்கூவர், வாஷிங்டன், லாங்விவ், வாஷிங்டன், ஆஸ்டோரியா, ஓரிகன்
உற்பத்தியாகும் இடம் கொலம்பியா ஏரி
 - அமைவிடம் பிரிட்டிஷ் கொலம்பியா,  கனடா
 - உயர்வு 2,690 அடி (820 மீ) [2]
கழிமுகம் பசிபிக் பெருங்கடல், கவுண்டி, ஓரிகன் / பசிபிக் கவுண்டி, வாஷிங்டன்
 - elevation அடி (0 மீ)
நீளம் 1,243 மைல் (2,000 கிமீ) [3]
வடிநிலம் 2,58,000 ச.மைல் (6,68,000 கிமீ²)
Discharge for (சராசரி) ஆற்று முகத்துவாரம்; ஏறக்குறைய தி டால்ஸ், ஓரிகன், முகத்துவாரத்திலிருந்து 188.9 மைல்கள் (304.0 km)
 - சராசரி [4][5]
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
கொலம்பியா ஆறு நீர் வடிகுழாய்
கொலம்பியா ஆறு நீர் வடிகுழாய்
விக்கிமீடியா பொது: கொலம்பியா ஆறு

கொலம்பியா ஆறும் மற்றும் அதன் கிளைகளும், அப்பிராந்தியத்தின் கலாச்சாரத்தையும், மற்றும் பொருளாதாரத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மையமாக இருந்துள்ளன. பண்டைய காலங்களிலிருந்து போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது, மேலும் இப்பகுதியில் பல கலாச்சார குழுக்களை இணைத்திருக்கின்றது. கடலிலிருந்து நன்னீருக்கு வலசை மேற்கொள்ளும் இந்த ஆற்றின் அமைப்பில் பல வகை மீன் வகைகளும் உள்ளன, அவைகள் நன்னீர் வாழிடங்கள் மற்றும் பசிபிக் பெருங்கடலின் உப்பு நீர் ஆகியவற்றிற்கு இடையில் இடம்பெயருவதாக உள்ள இந்த மீன்களில், குறிப்பாக சால்மன் இனங்களாகும் அவை, அப்பகுதி மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரத்தை அளித்தன.[9]

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பூர்வீகர்களல்லாத ஒரு தனியார் அமெரிக்க கப்பல் ஆற்றில் முதல் முறையாக நுழைந்தது; அதைத் தொடர்ந்து ஒரு பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், ஓரிகோன் கடற்கரைப் பகுதியை கடந்து வில்மேட்டி பள்ளத்தாக்கிற்கு சென்றார். அடுத்த பத்தாண்டுகளில், வர்த்தக நிறுவனங்கள் கொலம்பியாவை ஒரு முக்கிய போக்குவரத்து வழியாக பயன்படுத்தின. பின்னர் நிலம்தாண்டிய கண்டுபிடிப்பாளர்கள் கண்ணுக்கினிய ஆனால் நம்பத்தகாத ஜார்ஜ் கொலம்பியா ஆறு மூலம் வில்மேட்டி பள்ளத்தாக்கில் நுழைந்தது, மேலும் பயனாளிகள் அதிக எண்ணிக்கையில் பள்ளத்தாக்கில் குடியேற ஆரம்பித்தனர். ஆற்றின் இணைந்த சமூகங்கள் மற்றும் எளிதில் வர்த்தகம் செய்யப்படும் நீராவி கப்பல்கள்; 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரயில்பாதைகளின் வருகையால், பல ஆறுகள் ஓடி, இந்த இணைப்புகளை வழங்கியது.[10]

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல், பொது மற்றும் தனியார் துறைகள் இந்த ஆற்றை பெரிதும் மேம்படுத்தி உருவாக்கியுள்ளன. மேலும் கப்பல் மற்றும் பெருஞ் சரக்குப்படகுகள் வழிநடத்துதலுக்கு உதவும் வகையில், தாழ்வான கொலம்பியா ஆற்றுப் பகுதியையும், மற்றும் அதன் துணை ஆறுகளையும் மடை அமைக்கப்பட்டும், ஆழப்படுத்தப்பட்டும், மற்றும் விரிவுப்படுத்தி கப்பல் வாணிபக் கப்பல் தடமாக பயன்படுத்துவதோடு, முறையான நீர்ப்பாசனமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிற்து.[11] 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மின்னுற்பத்தி, நீர்ப்பாசனம், கப்பற்பயணம், மற்றும் வெள்ள கட்டுப்பாடு ஆகியவற்றிற்காக இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. நீர் மின் ஆற்றல் உற்பத்திக்காக கொலம்பியாவின் பிரதான தண்டுகளில் அமைத்துள்ள 14 நீர்த்தேக்கக் கட்டுப்பாட்டு அணைகளும் அதன் துணை ஆறுகளும், மொத்த அமெரிக்க நீர்மின் உற்பத்தியில் 44 விழுக்காட்டிற்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் அணுக்கரு ஆற்றல் உற்பத்திக்காக இந்த ஆற்றின் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளது. அணுவாயுதங்களுக்கு புளூடானியம் ஆன்போர்ட் தளத்தில் பல தசாப்தங்களாக தயாரிக்கப்பட்டது, அது இப்பொழுது அமெரிக்காவின் மிக துாய்மை கேடான அணுக்கரு ஆற்றல் நிலையமாக உள்ளது. இந்த அபிவிருத்திகள் பெருமளவில் நீர்த்தேக்கத்திலுள்ள ஆற்று சூழல்களை மாற்றியமைக்கின்றன, முக்கியமாக தொழில்துறை மாசுபாடு மற்றும் மீன் இடம்பெயர்வுக்கு பெருந்தடைகளை ஏற்படுத்துகின்றன.[12]

சான்றுகள்தொகு

 1. Holbrook 1956.
 2. Marsh, James H. (2013). "Columbia River". The Canadian Encyclopedia. Historica Foundation. 30 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. "The Columbia River". Columbia River Keeper. 2013. 7 ஜனவரி 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
 4. Kimbrough, R. A.; Ruppert, G. P.; Wiggins, W. D.; Smith, R. R.; Kresch, D. L. (2006). "Water Data Report WA-05-1: Klickitat and White Salmon River Basins and the Columbia River from Kennewick to Bonneville Dam" (PDF). Water Resources Data-Washington Water Year 2005. United States Geological Survey. 1 April 2008 அன்று பார்க்கப்பட்டது.
 5. Loy et al. 2001, ப. 164–65.
 6. "Largest Rivers In The United States" (PDF). pubs.usgs.gov (ஆங்கிலம்). OFR 87-242 1 / 2. 2018-03-17 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 7. "The Columbia River". pubs.usgs.gov (ஆங்கிலம்). 08 March 2005. 2018-03-17 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 8. "Columbia-River". britannica.com (ஆங்கிலம்). 2018. 2018-03-18 அன்று பார்க்கப்பட்டது.
 9. "The "Colombia River"". greenarea.me (ஆங்கிலம்). 12 November 2015. 2018-03-18 அன்று பார்க்கப்பட்டது.
 10. "About The Columbia River & Its Fishing Opportunities- 2016". 2018-06-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-03-18 அன்று பார்க்கப்பட்டது.
 11. www.discoverworld.com - Keep all your trips in one place - Columbia-River[தொடர்பிழந்த இணைப்பு]
 12. "The "Colombia River" Washington, Oregon". www.americanrivers.org (ஆங்கிலம்). November 12, 2015 ©2017 American Rivers. 2020-06-25 அன்று மூலம் Check |url= value (உதவி) பரணிடப்பட்டது. 2018-03-19 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலம்பியா_ஆறு&oldid=3583212" இருந்து மீள்விக்கப்பட்டது