கொல்கொண்டா கோட்டை

கொல்கொண்டா கோட்டையை முதன் முதலில் 1143 ஆம் ஆண்டு கட்டியவர்கள் காகதிய வம்சத்திர். 120 மீட்டர் (480 அடி) உயரமான கிரானைட் மலை மீது நகரமும் கோட்டைகளும் கட்டப்பட்டுள்ளன.பின்னர் இந்த கோட்டையை ராணி ருத்ரமா தேவி மற்றும் அவருடைய வாரிசான பிரதாபருருவால் புனரமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.பின்னர், கோட்டையானது முசுனுரி நாயக்கின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1364 ஆம் ஆண்டில் நடை பெற்ற ஒரு ஒப்பந்தத்தின் படி ஒரு பகுதியயை பஹ்மனி சுல்தானகத்திற்கு முசுனுரி நாயக்கரால் கைவிடப்பட்டது.பஹமனி சுல்தானகத்தின் கீழ், கோல்கொண்டா மெதுவாக முக்கியத்துவம் அடைந்தது.பஹமனி அரசு 1501 ஆம் ஆண்டில் சுல்தான் குலி குதுப்-உல்-முல்க் அவர்களை (1487-1543 ), தெலுங்கானா ஆளுநராக நியமித்தது . பின்னர் பஹ்மனி ஆட்சி படிப்படியாக பலவீனமடைந்தது.அதன் விளைவாக 1538 ஆம் ஆண்டு சுல்தான் குலி தன்னை சுதந்திர மன்னராக அறிவித்து கொண்டார் .அதன் பின்னர் கோல்கொண்டாவில் குதுப் ஷாஹி வம்சம் வேரூன்றியது .ஏறக்குறைய 62ஆண்டுகளுக்கு மேலாக மண் கோட்டையாக இருந்ததை முதல் மூன்று குதுப் ஷாஹி சுல்தான்கள் தற்போது இருக்கும் நவீன கட்டிடமாக மாற்றிய பெருமைகுரியவர்கள் .இந்த கோட்டை குதுப் ஷாஹி வம்சத்தின் தலைநகரமாக 1590 வரை இருந்தது .1687 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் ஆட்சியின் கீழ் வந்தது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்கொண்டா_கோட்டை&oldid=2879259" இருந்து மீள்விக்கப்பட்டது