முதன்மை பட்டியைத் திறக்கவும்
வீட்டில் பழக்கிய முதல் விலங்குகளான நாயும் ஆடும்.

கொல்லைப்படுத்தல் (Domestication) அல்லது வீட்டிற் பழக்குதல் அல்லது வீட்டினமாக்கம் என்பது ஓர் உயிரினக்குழு (மாந்தர்), தான் முன்கணிக்கும் வளங்களைப் பெற, மற்றொரு உயிரினக்குழுவின் (விலங்கு அல்லது தாவரம் அல்லது பூஞ்சை) இனப்பெருக்கத்திலும் கவனிப்பிலும் முதன்மையான தாக்கம் செலுத்தும் தொடர்ந்த பல தலைமுறைச் செயல்பாடு ஆகும். குறிப்பாக இது, விலங்குகள் அல்லது தாவரங்கள் அல்லது பூஞ்சைகள் கட்டுப்பாடான சூழலுக்கு தகவமையச் செய்யும் செயல்முறையைக் குறிக்கும்.[1] சார்லசு டார்வின் காட்டு மூதாதைகளில் இருந்து வீட்டு விலங்குகள் சில பண்புகளில் வேறுபட்டு இருத்தலை முதலில் கண்டுணர்ந்தார். இவர் தான் முதலில் மாந்தர் வேண்டிய பண்புகளை நேரடியாக நனவோடு தேர்ந்தெடுக்கும் செயற்கைத் தேர்வுமுறை வளர்ப்பிற்கும் இயற்கைத் தேர்வின் விளைபொருளாகப் படிமலர்ந்து சில பண்புகள் உருவாகும் முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் கண்டுணர்ந்தார்.[2][3][4] காட்டு, வீட்டு உயிரினத் திரளிடையே மரபியல் வேறுபாடும் அமைகிறது. காட்டுவகையில் இருந்து வீட்டு வகைகள் உருவாகிய தொடக்கநிலைக் கட்டங்களுக்கும் பின்னர் பின்னவை காலப்போக்கில் பெற்ற பண்பு மேம்பாடுகளுக்கும் இடையில் கூட பெருத்த வேறுபாடு அமைதலை அறிவியல் அறிஞர்கள் கண்டுணர்ந்துள்ளனர்.[5][6][7] வீட்டினவாக்கத்தின் தொடக்கத்தில் உருவாகிய வீட்டினவாக்கப் பண்புகள அனைத்து வீட்டினவாக்க உயிரிகளிலும் அமையும். ஆனால், தனி வளர்ப்புயிரிகளைக் கருதினாலும் அல்லது வட்டார உயிரினத்திரள்களைக் கருதினாலும், பின்னர் ஏற்பட்ட மேம்பாட்டுப் பண்புகள் குறிப்பிட்ட விகித உயிரிகளில் மட்டுமே, நிலவும்.[6][7][8]

நாய் தன் முதலில் வீட்டிற் பழக்கிய முதுகெலும்பியாகும்.[9][10][11] இந்த நிகழ்வு ஐரோப்பாசியாவில் வேளாண்மை வளர்ச்சிக்கும் பிற விலங்குகளின் வீட்டினவாக்கத்துக்கும் முன்பே நிறைவேறிவிட்டது. இது பிந்தைய பிளிசுட்டோசீன் காலத்துக்கு முன்பே ஏற்பட்டதாகும்.[10] தொல்லியல் விவரங்களும் மரபியல் விவரங்களும் காட்டு, வீட்டு வளரினங்களுக்கு இடையே நெடுங்காலமாகவே மரபன் பாய்வு தொடர்ந்து இருந்துவந்துள்லதைக் காட்டுகின்றன. இந்த நிலைமை கழுதைகள், குதிரைகள், பழைய புதிய உலக ஒட்டகங்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் ஆகிய அனைத்து விலங்கினங்களுக்கும் பொருந்தும்.[7][12]வீட்டினவாக்கம் மாந்தரினத்துக்குப் பெரும்பயன் நல்குவதாலும் படிமலர்ச்சி, மாந்தச் செயற்கைப் படிமம் ஆகவும் விளங்குவதால், தொல்லியல், தொல்லுயிரியல், மாந்தரினவியல் (மானிடவியல்), தாவரவியல், விலங்கியல், மரபியல், சுற்றுச்சூழலியல் ஆகிய பல்வேறு புலங்கள் சார்ந்த அறிவியலாளர்களையும் இது ஈர்க்கிறது.[13]

பறவைகளில் கோழி விட்டினவாக்க உயிரியாகும். இது இறைச்சியும் முட்டையும் தருகிறது. பறவைகள் கூண்டுப் பறவைகளாகவும் வளர்க்கப்படுகின்றன. இவ்வகைக் கூண்டுப் பறவைகளாக பாடும் பறவைகளும் பேசும் கிளிகளும் வளர்க்கப்படுகின்றன.

முதுகெலும்பில்லாத வீட்டினவாக்க விலங்குகளில் தேனீயும் பட்டுப்புழுவும் நெடுங்காலமாகவே பயனில் உள்ளன. நிலவாழ் நத்தைகள் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன. பல்வேறு உயிரினத் தொகுதிகளில் இருந்து, சில உயிரினங்கள் ஆராய்ச்சிக்காகவும் சில உயிரியல் கட்டுபாட்டிற்காகவும் வளர்க்கப்படுகின்றன.

தாவரங்கள் வீட்டுப் பயன்பாட்டுக்கு 12,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொணரப்பட்டன. வடகிழக்குப் பகுதியில் கூலங்களும் ஆசியாவில் சுரைக்காயும் பயன்பாட்டுக்கு வந்தன. வேளாண்மை, உலகின் வெவ்வேறான பதினொரு பகுதிகளில் தோன்றி, பல்வேறு பயிரினங்களையும் கால்நடைகளையும் பயன்பாட்டில் கொணர்ந்தது.


வீட்டினவாக்கம் சார்ந்த சொற்கள்தொகு

 
இறைச்சிக்காகக் கொல்லைப்படுத்தப்பட்டு உள்ள விலங்குகள்.

பொதுவாக வீட்டினவாக்கம் அல்லது கொல்லைப்படுத்தல் மனிதர்களின் செயற்கைமுறைத் தேர்வு ஆகும். இவ் விலங்குகளையும் தாவரங்களையும் மனிதர்கள் பல காரணங்களுக்காகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள்:

 • உணவை அல்லது பெறுமதி வாய்ந்த பொருட்களை பெறுவதற்காக. (கம்பளி, பருத்தி, பட்டு போன்றவை.)
 • பலவகை வேலைகளில் பயன்படுத்திக் கொள்வதற்காக. (போக்குவரத்து, பாதுகாப்பு முதலியன.)
 • தங்களையும் பிற கால்நடைகளையும் பாதுகாப்பதற்காக.
 • வளர்ப்பு விலங்குகளாக்கி மகிழ்வதற்காக. (நாய், பூனை முதலியன)
 • அழகுக்காக (அழகூட்டல் தாவரங்கள்)
 
அழகூட்டல் தேவைக்காக வீட்டில் வளர்க்கப்படும் ரோஜாச் செடி

அழகூட்டல் தேவைகளுக்காகக் கொல்லைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கும் பிற கட்டிடங்களுக்கும் உள்ளேயும் சுற்றாடலிலும் வளர்க்கப்படும் தாவரங்கள் வீட்டுத் தாவரங்கள் அல்லது அழகூட்டல் தாவரங்கள் எனப்படுகின்றன. உணவு உற்பத்திக்காகப் பெருமளவில் கொல்லைப்படுத்தப்படும் தாவரங்கள் பயிர்கள் எனப்படுகின்றன. விருப்பமான இயல்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டுமென்றே மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது தேர்வு செய்யப்பட்ட கொல்லைப்படுத்தப்பட்ட தாவரங்களையும், காட்டுத் தாவரங்களில் இருந்து அதிகம் வேறுபடாத கொல்லைப்படுத்தப்பட்ட தாவரங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும். இதுபோலவே வீட்டுத் துணைக்காகக் கொல்லைப்படுத்தப்படும் விலங்குகள் செல்லப் பிராணிகள் எனவும், உணவுக்காகவும், வேலைகளில் உதவுவதற்காகவும் வளர்க்கப்படுவன கால்நடைகள் அல்லது தோட்ட விலங்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

வீட்டினவாக்கம் என்பது முன்னரே குறிப்பிட்டது போல நீடித்துநிற்கும் பல தலைமுறை உறவாகும். இதில் ஓர் உயிரினம் தான் முன்கணித்த வளம்பெறுதலுக்காக மற்றொருவகை உயிரினத்தின் இணப்பெருக்கத்திலும் கவனிப்பிலும் தாக்கம் செலுத்தி இருபுறப் பரிமாற்ற இணைவாழ்வில் ஈடுபடும் நிகழ்வாகும். இதில் வீட்டினவாக்கல் உயிரினமும் வீட்டினமாகும் உயிரினமும் இதில் ஈடுபடாத பிற உயிரினங்களைக் காட்டிலும் நலங்களைத் தமக்குள் பெறுகின்றன. மேலும் சூழல் சார்ந்த உயிரியலான பொருத்தப்பாட்டையும் உயர்தகவமைப்பையும் அடைகின்றன.[1][14][15] இந்த வரையறை வீட்டினவாக்கம் உருவாக்கும் உயிரியல் பண்பாட்டுக் கூறுபாடுகளையும் மாந்தர்பாலும் விலங்கு, தாவர இனங்கள் பாலும் விளையும் தாக்கங்களையும் உள்ளடக்கும். பழைய வரையறைகள் மாந்தன் நிலையை உயர்த்திப் பிடிக்க, புதிய வரையறைகள் இருபுறச் சம நலப் பகிர்வினை சுட்டுகிறது. விட்டினவாக்கம் பயிர்கள், கால்நடை, செல்ல உயிரிகள் ஆகியவற்ரின் இனப்பெருக்கத் திறனை அவற்றின் காட்டுவகைகளை விடப் பேரளவில் உயர்த்தியுள்ளது. இந்நிகழ்வு மாந்தருக்கு முன்கணித்தபடியும் காப்புறுதியோடும் கட்டுபடுத்தவும் நகர்த்தவும் மீள்பகிரவும் இயலும்படியுமான வளங்களைப் பெருக்கியது. இதனால், வேளாண்மை மக்கள்பெருக்கத்தைத் தூண்டி மாந்தரினம் புவியின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பரவிடச் செய்தது.[15]

இந்தச் சமவாய்ப்பு நலங்கள் மாந்தர், விலங்குகள், தாவரங்கள் இடையில் மட்டுமே அமையவில்லை. இது பூச்சிகளுக்கும் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலும் நிறைவேறுகிறது. எடுத்துகாட்டாக, எறும்பு-பூஞ்சை இணைவாழ்வு இலைகொறிப்பு எறும்புகளுக்கும் சிலவகைப் பூஞ்சைகளுக்கும் இடையில் நிகழ்கிறது.[1]

இந்நிகழ்வு புறத்தோற்றநிலையிலும் தாவரங்களையும் விலங்குகளையும் தம் காட்டு மூதாதைகளில் இருந்துப் பெரிதும் வேறுபடுத்துகிறது.[5][16] இது முதுகெலும்பு விலங்குகளுக்கும் பொருந்தும். மென்மையான உறவையும் தோலின் நிறமாற்றத்தையும் தருகிறது; பல் அளவினைக் குறைக்கிறது; மண்டையோட்டு, முக உருமாற்றத்தை விளைவிக்கிறது; கது, வால் வடிவை மாற்றுகிறது; அண்ணீரகப் புறணியூட்ட இசைம மட்டங்களை மாற்றுகிறது; பல நரம்புக் குறிகைச் செலுத்திகளின் செறிவை மாற்றுகிறது, இளவுயிரியின் வளர்ச்சிப் பருவத்தைக் கூட்டி அதன் நடத்தையை மாற்றுகிறது; மொத்த மூளையளவையும் மூளையின் சில பகுதிகளின் அளவையும் குறைக்கிறது.[17]

மேற்கோள்கள்தொகு

 1. 1.0 1.1 1.2 Zeder MA (2015). "Core questions in domestication Research". Proceedings of the National Academy of Sciences of the United States of America 112 (11): 3191–8. doi:10.1073/pnas.1501711112. பப்மெட்:25713127. 
 2. Darwin, Charles (1868). The Variation of Animals and Plants under Domestication. London: John Murray. இணையக் கணினி நூலக மையம்:156100686. 
 3. Jared Diamond (1997). Guns, Germs, and Steel. Chatto and Windus London. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-09-930278-0. 
 4. Larson, G.; Piperno, D. R.; Allaby, R. G.; Purugganan, M. D.; Andersson, L.; Arroyo-Kalin, M.; Barton, L.; Climer Vigueira, C. et al. (2014). "Current perspectives and the future of domestication studies". Proceedings of the National Academy of Sciences 111 (17): 6139–6146. doi:10.1073/pnas.1323964111. பப்மெட்:24757054. 
 5. 5.0 5.1 Olsen, KM; Wendel, JF (2013). "A bountiful harvest: genomic insights into crop domestication phenotypes". Annu. Rev. Plant Biol. 64: 47–70. doi:10.1146/annurev-arplant-050312-120048. பப்மெட்:23451788. 
 6. 6.0 6.1 Doust, A. N.; Lukens, L.; Olsen, K. M.; Mauro-Herrera, M.; Meyer, A.; Rogers, K. (2014). "Beyond the single gene: How epistasis and gene-by-environment effects influence crop domestication". Proceedings of the National Academy of Sciences 111 (17): 6178–6183. doi:10.1073/pnas.1308940110. பப்மெட்:24753598. 
 7. 7.0 7.1 7.2 Larson, G (2014). "The Evolution of Animal Domestication". Annual Review of Ecology, Evolution, and Systematics 45: 115–36. doi:10.1146/annurev-ecolsys-110512-135813. http://www.palaeobarn.com/sites/domestication.org.uk/files/downloads/112.pdf. 
 8. Meyer, Rachel S.; Purugganan, Michael D. (2013). "Evolution of crop species: Genetics of domestication and diversification". Nature Reviews Genetics 14 (12): 840–52. doi:10.1038/nrg3605. பப்மெட்:24240513. 
 9. "Domestication". Encyclopædia Britannica (2016). பார்த்த நாள் May 26, 2016.
 10. 10.0 10.1 Larson G (2012). "Rethinking dog domestication by integrating genetics, archeology, and biogeography". Proceedings of the National Academy of Sciences of the United States of America 109 (23): 8878–83. doi:10.1073/pnas.1203005109. பப்மெட்:22615366. பப்மெட் சென்ட்ரல்:3384140. http://www.palaeobarn.com/sites/domestication.org.uk/files/downloads/71.pdf. 
 11. Perri, Angela (2016). "A wolf in dog's clothing: Initial dog domestication and Pleistocene wolf variation". Journal of Archaeological Science 68: 1–4. doi:10.1016/j.jas.2016.02.003. 
 12. Marshall, F. (2013). "Evaluating the roles of directed breeding and gene flow in animal domestication". Proceedings of the National Academy of Sciences of the United States of America 111 (17): 6153–8. doi:10.1073/pnas.1312984110. பப்மெட்:24753599. 
 13. Larson, G (2013). A population genetics view of animal domestication. http://www.palaeobarn.com/sites/domestication.org.uk/files/downloads/98.pdf. 
 14. Sykes, N (2014). "Animal Revolutions". Beastly Questions: Animal Answers to Archaeological Issues. Bloomsbury Academic. பக். 25–26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781472506245. 
 15. 15.0 15.1 Zeder MA (2012). "The domestication of animals". Journal of Anthropological Research 68 (2): 161–190. doi:10.3998/jar.0521004.0068.201. 
 16. Hammer, K (1984). "Das Domestikationssyndrom". Kulturpflanze 32: 11–34. doi:10.1007/bf02098682. 
 17. Wilkins, Adam S.; Wrangham, Richard W.; Fitch, W. Tecumseh (July 2014). "The 'Domestication Syndrome' in Mammals: A Unified Explanation Based on Neural Crest Cell Behavior and Genetics". Genetics (journal) 197 (3): 795–808. doi:10.1534/genetics.114.165423. பப்மெட்:25024034. 

நூல்தொகைதொகு

 • சார்லஸ் டார்வின். The Variation of Animals and Plants under Domestication, 1868.
 • Jared Diamond. Guns, Germs, and Steel|Guns, germs and steel. A short history of everybody for the last 13,000 years, 1997.

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லைப்படுத்தல்&oldid=2480410" இருந்து மீள்விக்கப்பட்டது