கொ. இராமசாமி

கொ. இராமசாமி (K. Ramasamy)(பிறப்பு 1926 திசம்பர் 26) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிவகாசி தொகுதியிலிருந்து ஜனதா கட்சி வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக பணியாற்றினார்.[2] இதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. http://www.assembly.tn.gov.in/archive/6th_1977/whoiswho1977.pdf

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொ._இராமசாமி&oldid=3297975" இலிருந்து மீள்விக்கப்பட்டது