கோகர்ணேஸ்வரர் கோயில்

கோகர்ணேஸ்வரர் கோயில் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் [1] புதுக்கோட்டை நகரத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருக்கோகர்ணம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2]

மூலவர்தொகு

இது ஒரு சிவத் தலமாகும். இக்கோவிலின் மூலவர் கோகர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாளின் பெயர் பிருகதாம்பாள் என்பதாகும்.

மூர்த்திகள்தொகு

கோயிலில் பிள்ளையார், கங்காதரர், சப்த கன்னிகைகள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. ஒரு மகிழ மரத்தின் கீழே சதாசிவ பிரம்மேந்திரர் சந்நிதி உள்ளது.

வரலாறுதொகு

குடைவரைக்குகைக் கோயிலான இக்கோயில் பல்லவ அரசனான முதலாவது மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்தது.[3].
புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் வம்சாவளி அரசர்களின் பெயரில் அடைமொழியாக ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் என்று வருவதால் தொண்டைமான் அரச குடும்பத்தினரின் குலதெய்வம் இங்குள்ள பிருகதாம்பாள் எனக் கூறலாம் (எ-கா: ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 1839-1886, ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் 1886)[4].
மேலும் புதுக்கோட்டை மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயம் புதுக்கோட்டை அம்மன் காசு அல்லது அம்மன் சல்லி என அழைக்கப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.[5]

விழாக்கள்தொகு

சித்திரை மாதம் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், புரட்டாசி மாதம் நவராத்திரி, ஐப்பசி மாதம் கந்த சஷ்டி, தைப்பூசம் ஆகிய விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. [1]

அமைவிடம்தொகு

திருக்கோகர்ணம் வரைபடம்

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 புதுக்கோட்டைக் கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 2003
  2. திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர்
  3. தமிழக சுற்றுலா தலங்கள்
  4. புதுக்கோட்டை அறிமுகம்
  5. புதுக்கோட்டை-அம்மன் காசு

வெளி இணைப்புகள்தொகு