கோச்செர்லாகோட்டா இரங்கதாம இராவ்

பேராசிரியர் கோச்செர்லாகோட்டா இரங்கதாம இராவ் (Kotcherlakota Rangadhama Rao) (9 செப்டம்பர் 1898 - 20 ஜூன் 1972) நிறமாலையியல் துறையில் ஒரு இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர், நிறமாலையியல் குறித்த தனது பணிகளுக்காகவும், அணுசக்தி குவாட்ரபோல் அதிர்வு வளர்ச்சியில் தனது பங்கிற்காகவும், ஆந்திர பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வகங்களுடனான தனது நீண்டகால தொடர்புகளாலும் மிகவும் பிரபலமானவர். இவரது பிற்காலத்தில், ஆந்திர பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்லூரிகளும் தனித்தனி கல்லூரிகளாக பிரிக்கப்படுவதற்கு முன்னர் இவர் கல்லூரியின் முதல்வராக இருந்தார். இராவ் தனது விஞ்ஞான திறனாலும், தனது நிலையான ஆளுமையாலும் நன்கு அறியப்பட்டவராவார்.

பேராசிரியர் கோச்செர்லாகோட்டா இரங்கதாம இராவ்
கோச்செர்லாகோட்டா இரங்கதாம இராவ் சுமார் 1920களில்.
பிறப்பு(1898-09-09)9 செப்டம்பர் 1898
விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம்
இறப்பு20 சூன் 1972(1972-06-20) (அகவை 73)
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
குடியுரிமை இந்தியா
தேசியம்இந்தியா
துறைஇயற்பியல், நிறமாலையியல்
பணியிடங்கள்சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், திருப்பதி,
சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு,
இலண்டன் பல்கலைக்கழகம்,
பெர்லின், சுவீடன்
கல்வி கற்ற இடங்கள்ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்
ஆய்வு நெறியாளர்பேராசிரியர் ஏ. பௌலர்
அறியப்படுவதுநிறமாலையியல், அணுசக்தி குவாட்ரபோல் அதிர்வு

ஆரம்ப ஆண்டுகளில் தொகு

இரங்கதாம இராவ் 1898 செப்டம்பர் 9ஆம் தேதி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் இன்றைய விசயநகரம் மாவட்டத்திலுள்ள உள்ள கடற்கரை நகரமான விஜயநகரத்தில் பிறந்தார். இவரது தந்தை கோச்செர்லாகோட்டா வெங்கட்டா நரசிங்க ராவ், அப்போது பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்திலிருந்த ஆந்திர மாநிலத்தில் உள்ள சிறிய நகரங்களான இன்றைய விசயநகரம், கஜபதிநகரம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களின் அஞ்சல் அலுவலராக இருந்தார். இவரது தாயார் இராமாயம்மா 1923இல் இறந்தார்.

இராவ், வட்டாடி பெர்ராமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள் என ஏழு குழந்தைகள் இருந்தனர்.

கல்வி தொகு

விஜயநகரத்திலுள்ள மகாராஜாவின் உயர்நிலைப் பள்ளியில் இவரது தொடக்கக் கல்வி இருந்தது. பின்னர் தனது உயர் கல்வியை மச்சிலிப்பட்டினத்தில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். விசாகப்பட்டினத்தில் உள்ள சிபிஎம் உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை முடித்தார்.

அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பட்டப்படிப்பு இல்லை. விசயநகரத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் முனைவர் ஏ. எல். நாராயணன் 1918ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியலில் இளங்கலை பட்டப்படிப்புக்கான இணைவைப் பெற்றுத் தந்தார். 1920ஆம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்வுக்காக சேர்ந்த முதல் தொகுதி நான்கு மாணவர்களில் இவரும் ஒருவராவர். [1]

தொழில் தொகு

1924 ஆம் ஆண்டில், இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞர் முனைவர் ஏ. எல். நாராயணனுடன் சேர்ந்தார். நாட்டில் எங்குமில்லாத முதல் விகித நிறமாலையியல் ஆய்வகத்தை உருவாக்க இவர்கள் இருவரும் பணியாற்றினர். [1]

1930 ஆம் ஆண்டில் இலண்டனிலுள்ள இம்பீரியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியர் ஏ. பௌலர் இவரது உமிழ் நிறமாலை ஆராய்ச்சிக்கு இரண்டு ஆண்டுகள் வழி நடத்தினார். இதற்காக இவருக்கு இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் சான்றிதழ் பட்டம் வழங்கப்பட்டது. 1930ஆம் ஆண்டில், பெர்லினிலுள்ள இயற்பியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆய்வகத்தில் பேராசிரியர் எஃப். பாஸ்கனின் கீழ் ஆறு மாதங்களும், சுவீடனின் உப்சாலாவில் பேராசிரியர் மன்னே சீக்பானின் கீழ் ஆறு மாதங்களுக்கும் வெற்றிட நிறமாலையியலில் பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நிறமாலையியல் துறையில் தான் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக, ஜெர்மனியின் போட்ஸ்டாமில் தனது சொந்த செலவில் தனது வடிவமைப்பில் வெற்றிட நிறமாலைக் கருவியை உருவாக்கினார்.

இராவ், 1949-57 வரை ஆந்திர பல்கலைக்கழக கல்லூரிகளின் முதல்வராக இருந்தார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் (1966–72) இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்ட இவர், திருப்பதி (1954) சிறீ வெங்கடேசுவர பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான சிறப்பு அதிகாரியாகவும் இருந்தார்.

பங்களிப்புகள் தொகு

ஆந்திர பல்கலைக்கழக இயற்பியல் துறையில் தனது ஆரம்பகால வாழ்க்கையின் போது, தனது தந்தையின் பெயரான கோச்செர்லகோட்டா வெங்கடா நரசிங்க ராவ் என்ற பெயரில் உதவித்தொகையை நிறுவினார்.

ஜெய்பூர் விக்ரம் தேவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறையில் ஒரு வாசகராக இருந்தபோது, இவர் தனது மறைந்த தந்தையின் நினைவாக ஒரு ஆராய்ச்சி உதவித்தொகையை நிறுவினார். [2]

கௌரவங்கள் தொகு

இவர் 1963 ஆம் ஆண்டில் ஆந்திர அரசு பரிந்துரைத்த ஆந்திர அறிவியல் கழகத்தின் அடித்தள உறுப்பினர்களில் ஒருவரானார். [3] இந்திய தேசிய அறிவியல் கழகம் 1979இல் இவரது நினைவாக சொற்பொழிவு விருது ஒன்றை நிறுவி அடிக்கடி விருது வழங்கி வருகிறது. [4]

வெளியீடுகள் தொகு

இவரது ஆராய்ச்சி படைப்புகள் பல்வேறு புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. இவரது ஆரம்ப வெளியீடுகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Biographical Memoirs, Appadvedula Lakshmi Narayan
  2. Annual Register of Andhra University
  3. AP Akademi of Science
  4. Indian National Science Academy

குறிப்புகள் தொகு

மேலும் படிக்க தொகு