கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இறகுப் பந்தாட்டம்

இறகுப்பந்தாட்டம் 1992 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக முறையானப் போட்டியாக சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 6 ஒலிம்பியாடுகளில் போட்டியிடப்பட்டு வருகின்றது. ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டப் போட்டிகளில் இதுவரை 63 வெவ்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் 19 நாடுகள் 6 முறையும் பங்கேற்றுள்ளன. இந்த விளையாட்டுப் போட்டிகளை இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்துகின்றது.

கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இறகுப் பந்தாட்டம்
Badminton pictogram.svg
நிகழ்வுகள்5 (ஆண்கள்: 2; பெண்கள்: 2; கலவை இணையர்: 1)
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
 • 1896
 • 1900
 • 1904
 • 1908
 • 1912
 • 1920
 • 1924
 • 1928
 • 1932
 • 1936
 • 1948
 • 1952
 • 1956
 • 1960
 • 1964
 • 1968
 • 1972
 • 1976
 • 1980
 • 1984
 • 1988
 • 1992
 • 1996
 • 2000
 • 2004
 • 2008
 • 2012
 • 2016

வரலாறுதொகு

மியூனிக் நகரில் நடந்த 1972 ஒலிம்பிக் போட்டிகளில் இறகுப்பந்தாட்டம் முதன்முதலாக காட்சிப்படுத்தப்படும் விளையாட்டாக அறிமுகமானது. இருபதாண்டுகள் கழித்து பார்செலோனாவில் 1992 போட்டிகளில் 4 போட்டிகள் நடத்தப்பட்டன; ஆண்கள், பெண்கள் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் நான்கு பதக்கங்கள், இரு வெண்கலப் பதக்கங்களுடன், வழங்கப்பட்டன. அடுத்து அட்லான்டாவில் நடந்த 1996 ஒலிம்பிக்கில், கலவை இணையருடன் 5 போட்டிகளாயிற்று. தவிரவும் இரண்டு தோற்ற அரையிறுதி ஆட்டக்காரர்களுடன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியும் அறிமுகமானது. இந்த போட்டி வடிவம் 2016 வரை நீடித்துள்ளது.

போட்டிகள்தொகு

 • ஆண்கள் ஒற்றையர்
 • ஆண்கள் இரட்டையர்
 • பெண்கள் ஒற்றையர்bcfhj
 • பெண்கள் இரட்டையர்
 • கலவை இணையர்

பதக்கப்பட்டியல்தொகு

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   சீனா 17 8 15 40
2   இந்தோனேசியா 7 6 6 19
3   தென் கொரியா 6 7 6 19
4   டென்மார்க் 1 3 3 7
5   சப்பான் 1 1 1 3
6   எசுப்பானியா 1 0 0 1
7   மலேசியா 0 5 2 7
8   ஐக்கிய இராச்சியம் 0 1 2 3
9   இந்தியா 0 1 1 2
10   நெதர்லாந்து 0 1 0 1
11   உருசியா 0 0 1 1
மொத்தம் 33 33 37 103

இந்தியாவிலிருந்து பதக்கம் பெற்றவர்கள்தொகு

ஒலிம்பியாடு போட்டியாளர் போட்டி பதக்கம்
2012 இலண்டன் சாய்னா நேவால் பெண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கம்
2016 இரியோ புசார்லா வெங்கட சிந்து பெண்கள் ஒற்றையர் வெள்ளிப் பதக்கம்

வெளி இணைப்புகள்தொகு