கோட்டுகோதெல்லா கோட்டை

இலங்கையில் இருந்த கோட்டை

கோட்டுகோதெல்லா கோட்டை (Kotugodella Fort) இலங்கையின் பதுளை மாவட்டத்தில் அல்தும்முல்லை நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1][2] காட்டுகோதெல்லா பலகோட்டுவா என்ற பெயராலும் அழைக்கப்படும் இக்கோட்டை போர்த்துக்கேயர் கோட்டையாகும். போர்த்துக்கேய இலங்கையின் ஆறாவது மற்றும் எட்டாவது கவர்னராக இருந்த கான்சுடாண்டினோ டி சா டி நோரோங்காவின் கட்டுப்பாட்டில் இருந்த போர்த்துகேயர்கள் 1630 ஆம் ஆண்டில் இடல்கசின்னா கணவாயை ஊவா மாகாணத்திற்குள் நுழைவதற்கான வழியாகப் பயன்படுத்த முயற்சித்தனர்.[3][4] இத்தாக்குதலில் படைகளை நிறுத்துமிடமாக கோட்டை பயன்படுத்தப்பட்டது.

கோட்டுகோதெல்லா கோட்டை
Kotugodella Fort
அல்தும்முல்லை, இலங்கை
வகை Defence கோட்டை
இடத் தகவல்
நிலைமை எச்சங்கள்
இட வரலாறு
கட்டியவர் போர்த்துகல்

கோட்டுகோதெல்லா கோட்டை இடல்கசின்ன இரயில் நிலையத்திலிருந்து தெற்கே 5 கிமீ (3 மைல்) தொலைவில் நீட்வுட் தேயிலைத் தோட்டத்திற்குள் அமைந்துள்ளது. கோட்டையில் இப்போது எஞ்சியிருப்பது அரை வட்டக் கோட்டைகளின் கல் அடித்தளங்கள் மட்டுமேயாகும்.

2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த கோட்டை பாதுகாக்கப்பட்ட ஒரு தொல்பொருள் தளமாக அறிவிக்கப்பட்டது.[5]

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Brohier, R. L. (1933). The Golden Age of Military Adventure In Ceylon 1817-1818. Colombo Plate Ltd.. பக். 24. 
  2. Royal Asiatic Society of Great Britain and Ireland. Ceylon Branch (1955). Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society. 4-7. Colombo Apothecaries Company. p. 210. 
  3. Pieris, Paulus Edward (1992). Ceylon, the Portuguese era: being a history of the island for the period, 1505-1658. 1. Tisara Prakasakayo Ltd. பக். 343. 
  4. da Lomba, Affonso Dias (1930). The expedition to Uva made in 1630 by Constantine de Sa de Noronha, Captain-General of Ceylon as narrated by a soldier who took part in the expedition. Richards. 
  5. "Gazette". The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka 1264. 22 November 2002. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டுகோதெல்லா_கோட்டை&oldid=3909486" இலிருந்து மீள்விக்கப்பட்டது